பக்கம்:அறிவியல் அகராதி.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vid

458

vir


பேழைகளிலுள்ள காந்த நாடா வில் முன்னரே பதிவு செய்யப் பட்ட நிகழ்ச்சிகளை மீண்டும் காட்சிக்குக் கொண்டு வருவது. இன்று திரைப்படக்காட்சிகளே அதிகம் காட்டப்படுபவை. வேறு பெயர்கள் உருக்காட்சிப் பேழை இயக்கி (விசிபி), உருக்காட்சி நாடாப்பதிவு (விடிபி) (இய)

video conferencing -உருக்காட்சிக்கூட்டம்: வேறு பெயர் தொலைச் செய்தித் தொடர்புக் கூட்டம் வாய்ப்பு வசதி இல்லாதவர்க்கு அமைத்துத் தரப்படும் மின்னணுக் கூட்டம். இதில் தொலைத் தொடர்புச் செய்திகளின் பயனை இவர்கள் நுகர்வர். தொடர்புகள் என்பது தொலை பேசிகளையும் செய்தித் தொடர்பு நிலாக்களையும் குறிக்கும். (இய)

video signal -உருக்குறிபாடு: தொலைக்காட்சிப் பெறுவியில் பெறப்படும் அல்லது தொலைக் காட்சிப் புகைப்படப் பெட்டியில் உண்டாக்கப்படும் மின்குறிபாடு. ஒளி பரப்புச் செய்யப்பட வேண்டிய உருவிலுள்ள ஒளி யிலும் நிறத்திலும் உள்ள மாறு பாட்டோடு தொடர்புடையது. (இய)

video tape - உருநாடா: ஒரு காந்த நாடா. ஒலியாகவும் காட்சியாகவும் இதில் நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்நாடா உருப்பதிவுப் பேழை அல்லது பெட்டகத்தில் இருக்கும். இதனை உருப்பதிவுப் பேழைப் பதிவியில் போட்டுக் காட்சியைப் பார்க்கலாம். (இய)

video text - உருப்பதிவுச் செய்தி: பணி செய்வோர்க்கும் வீட்டிலிருப்போர்க்கும் கணிப்பொறி வழியமைந்த செய்தியினைக் காட்சி வெளிப்பாட்டு அலகின் மூலம் தெரிவிக்கும் தொகுதி. பா. text (இய)

video tube -உருக்காட்சிக் குழாய்: தொலைக்காட்சிக் குழாய் அல்லது திரை. (இய)

villus-1.விரலி: மயிரிழை போன்ற பகுதி, 2. குடல்விரலி: விரல் போன்ற உறுப்பு. சிறுகுடலில் கூழ்நிலையடைந்த உணவை உட்கவரும் பகுதி. (உயி)

vinegar -வினிகர்: HC2H3O2, நீர்த்த பணிபோன்ற அசெட்டிகக் காடி. 3-6% எத்தானிகக்காடி கலந்தது. நீரில் கலக்கக்கூடியது. எத்தனாலை உயிர்வளி ஏற்றம் செய்து பெறலாம். ஊறுகாய்ப் பாதுகாப்புப் பொருள். (வேதி)

virgin neutrons -கன்னி அல்லணுக்கள்: மோதலுக்கு முன் எம்முறையிலும் உண்டாக்கப்படும் துகள்கள். (இய)

virology - நச்சியஇயல்: நச்சியங்களை ஆராயுந்துறை. (உயி)

virtual intelligence - மாய நுண்ணறிவு: (கணி)

virtual reality-மாய உண்மைகள்: 1993இல் கணிப்பொறித் தொழில் நுணுக்கத்தால் உண்டானது.