பக்கம்:அறிவியல் அகராதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bio

52

bio


லிருந்து ஒரு பகுதித் திசுவைப் பிரித்தெடுத்து, நுண்ணோக்கியில் வைத்து அதன் நோய்த் தன்மையினை ஆராய்தல். (உயி)

biorhythm - உயிர் ஒழுங்கு: உயிரியல் தாள முறை. உயிரியின் நடத்தையில் ஏற்படும் பருவநிகழ் மாற்றம். உயிர்க் கடிகாரத்தால் நிலை நிறுத்தப்படுவது. எ.டு. பகற்பொழுது ஒழுங்கு. (உயி)

bioscience - உயிர் அறிவியல்: உயிரியல்களில் ஒன்று விலங்கியல். (உயி)

bioscientist - உயிர் அறிவியலாளர்: உயிர்ப்பொருள்களை ஆராய்பவர். (உயி)

bioscope - படநோக்கி: திரைப்படங்களை வீழ்த்துங்கருவி. (உயி)

biosensor - உயிர் உணர்வி: உயிர் உணர்வுகளை அறிவது. (உயி)

biosphere - உயிர்க் கோளம்: உயிரிகள் அடங்கிய உலகம். கல் வெளி, நீர் வெளி, காற்று வெளி ஆகியவை இதில் அடங்கும். (உயி)

biosynthesis - உயிர்ச் சேர்க்கை: உயிர்கள் வேதிப் பொருள்களைத் தொகுத்தல். (உயி)

biosystematics - உயிர் வகைப்பாட்டியல்: சிறப்பினங்களுக்கிடையே உள்ள உறவுகளை ஆராய, ஆய்வு வகைப்பாட்டு துணுக்கங்களைப் பயன்படுத்தும் துறை. ஒ. numerical taxonomy (உயி)

biota - உயிர்த் துணைத்தொகுதி: குறிப்பிட்ட பகுதி அல்லது ஊழிக்குரிய திணைத் தாவரங்களும் திணை விலங்குகளும் அடங்கிய தொகுதி. (உயி)

biotechnology - உயிர்த்தொழில் நுட்பவியல்: நுண்ணுயிர்கள் அல்லது அவை உண்டாக்கும் நொதிகளைத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் நுணுக்கம். விரைந்து வளரும் துறை. மருத்துவம், உணவு உற்பத்தி முதலிய துறைகளில் இத்துறை நிறைந்த பயன்களைக் கொண்டது. ஒ. bionics, cybernetics. (உயி)

biotelemetry - உயிர் தொலை அளவை : ஒரிடத்தில் பதிவு செய்யப் பெறும் இதயத் துடிப்பு, மூச்சு விடுதல் முதலிய செயல்களை வானொலி மூலம் மற்றொரு இடத்திலிருந்து அளத்தல். எ-டு. புவியிலிருந்து செயற்கை நிலாவிலுள்ள உயிரின் மூச்சுவிடுதல், இதயத் துடிப்பு முதலியவற்றை வானொலிக் குறிபாடு மூலம் அறிதல். பா. telemetry. (உயி)

biotic factors - உயிர்க்காரணிகள்: இவை சூழ்நிலைக் காரணிகள். உயிர்களுக்கிடையே தொடர்களை உண்டாக்குபவை. இவை பின்வருமாறு: 1. மேய்ச்சல் 2. ஒட்டி வாழ்விகள் 3. ஒட்டுண்ணிகள் 4. கூட்டுயிரிகள் 5. பூஞ்சை ஊட்டம் அல்லது பூஞ்சை வாழ்வு (மைக்கோட்ரோபி). (உயி)

biotin - பயாட்டின். C10H16O3N2S. வார்ப்புரு:S C10H16N2O3S.