பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தால் இளகிக் குளிரில் இறுகும் தன்மையுடைய குழைமம், ஸ்டைரீன் மீச்சேர்மங்கள், கூட்டு மீச்சேர்மங்கள், செல்லுலோசிக்ஸ். பாலித்திலீன், வினைல், நைலான்கள், பல்வேறு புளோரோ கார்பன்கள் இவ்வகையைச் சேர்ந்தவை.

குழைமப் பொருள் குடும்பத்து ஒவ்வொரு பொருளுக்கும் சில குறிப்பிட்ட பண்புகள் உண்டு. சில கடினப் பரப்புடையவை; சில அரிமான எதிர்ப்புடையவை; சில நெகிழ் திறணுடையவை; சில முரடானவை: சில மின் அழுத்தத்தைத் தாங்கக் கூடியவை.

Plastic wood: (மர.வே.) குழைம மரக்கூழ்: காற்றுப் பட்டவுடனேயே கடினமாகிவிடக்கூடிய மரக்கூழ். இது வெடிப்புகளை அடைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனைப் பூசியவுடனேயே அதில் வண்ணம் பூசலாம்.

Plastisol (குழை.) பிளாஸ்டிசோல் : குழைமையாக்கும் பொருட்களுடன் கலந்து கலவைகளாகத் தயாரிக்கப்படும் எந்திரக் குழைமப் பொருள். இதைக் கொண்டு வார்ப்படம் செய்யலாம்; சுருள்கள் தயாரிக்கலாம். நெகிழ் திறனுடைய வார்ப்படங்கள் தயாரிக்கப் பெரும் பாலும் பயன்படுகிறது.

Plate clutch : (தானி; எத்.) தகட்டு ஊடிணைப்பி : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தகடுகளின் மூலம் விசையை அனுப்புகிற ஊடிணைப்பி. இத்தகடுகள் விற்சுருள்களின் அழுத்தத்தின் மூலம்

Pla

477

Pla


பற்றி வைத்துக் கொள்ளப்படுகின் றன.

Plate condenser : தகட்டு மின் விசையேற்றி : மாற்று உலோகத் தகடுகளை இணைத்து இரு மின் முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள மின் விசையேற்றி, இத்தகடுகள் அபிரகம், மெழுகேற்றிய தாள், போன்றவற்றாலானதாக இருக் கும்.

Plate current : தகட்டு மின்னோட்டம் : தகட்டு மின்சுற்று வழியில் பாய்கிற அதிர்வு நேர் மின்னோட்டம்.

Plate cylinder : (அச்சு.) தகட்டு நீள் உருளை : ஒரு சுழல் அச்சு எந் திரத்தில் சுழல்கின்ற பகுதி. இதனுடன் வளைவுடைய அச்சுத் தகடுகள் இணைக்கப்படும்.

Plated bar : (உலோ.) தகட்டிரும்பு : காய்ப்புடைய தகட்டு எஃகு. இது சலாகைகளாக இருக்கும். உலோகத்தைச் சூடாக்கிச் கத்தியலால் அடித்துக் கடினமாக்கப்படுகிறது.

Platen : (எந்.) தகட்டுப் பாளம் : (1) உலோக வேலைப்பாடுகளில் உலோகத்தை அழுத்தித் தகடாக்குவதற்குப் பயன்படும் தகடு (2) அச்சகத்தில் அச்சுத்தாள் அழுத்தும் தகட்டுப் பாளம்.

Platen press : (அச்சு.) தகட்டுப் பாள அச்சு எந்திரம் : அச்சிடும் போது காகிதமும் அச்சுப் படிவமும்