பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏற்படும் பள்ளங்கள்.

Shrinking; (எந்.வார்.) சுரிப்பு: குளிர்விக்கும்போது வார்ப்படத்தில் ஏற்படும் சுருக்கம்.

Shroud: (எந்.) தட்டை விளிம்பு: பல்லிணைச் சக்கரத்தின் பற்களின் முனைகளில், அப்பற்களின் வலி மையை அதிகரிக்க அல்லது வழு வழுப்பான இயக்கத்திற்கு வசதி செய்ய இணைக்கப்படும் அல்லது வார்ப்பு செய்யப்படும் தட்டையான விளிம்பு.

Shunt (எந்.) இணை: இரு மின்னோட்டங்களை இடைத் தடுத்திணைக்கும் மின்கடத்து கட்டை.

Shunt for ammeter: (மின்.) அம்மீட்டர் இணை: மின்மானி வழியாகச் செல்லும் மின்னோட்டத்தைக் கட் டுப் படுத்துவதற்காக அம்மீட்டருடன் இணையாகப் பொருத்தப்பட்டுள்ள தடை.

Shunt cenerator: (மின்.) இணை மின்னாக்கி: காந்தப்புலம் உண்டாக்குவதற்கான கம்பிச் சுருள், சுழலும் கரத்திற்கு இணையாகச் சுற்றப்பட்டுள்ள மின்னோட்டம் உண்டாக்கும் ஒரு எந்திரம்.

Shunt-wound motor: (மின்.) இணைச் சுருணை மின்னோடி: மின் சுமை மாறுபட்டிருப்பினும் மின் னோடியின் வேகம் ஒரே அளவில் இருக்கும் வகையில் பயன்படுத்தப்படும் மின்னோடி.

Shutter: ஒளித்தடுப்புத் திரை:

Sid

533

Sid


ஒளிப்படக் கருவியில் ஆடிவழியாக ஒளி புகுந்து செல்வதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு சாதனம்.

Side head: (அச்சு.)ஓரத்தலைப்பு : அச்சுப் பக்கங்களில் மையத்தில் அல்லாமல் பக்கத்தின் ஒரத்தில் அச்சடிக்கப்படும் தலைப்பு.

Side milling cutter : (எந்.) பக்கத்துளை வெட்டுக் கருவி : பக்கங்களிலும் சுற்றுக் கோட்டிலும் வெட் டுவதற்குப் பயன்படும் குறுகிய முகப்புக் கொண்ட வெட்டுகருவி. சுழல் இருசு மீது இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட வெட்டு கருவிகளை அமைத்திருந்தால் அவை "கவட்டு வெட்டுக் கருவி' எனப்படும்.

Side rake : (எந் ) பக்கவெட்டுச் சரிவு : கடைசல் எந்திரம், இழைப்புளி, வடிவாக்கக் கருவிகள் போன்றவற்றின் மேல் முகப்பின் மீதான வெட்டு முனையிலிருந்து விலகிச் செல்லும் குறுக்குச் சரிவு.

Siderite : (உலோ.) சைடரைட் (F<sub.3CO3): குறைந்த அளவு இரும்பு கொண்ட ஒர் உலோகத் தாதுப் பொருள்.

Side stick : (அச்சு.) பக்க அச்சுக்கோப்புக் கட்டை : அச்சுப் பணியில் அச்சுப் படிவங்கள், நீர் அச்சுப் படிவங்கள், ஆகியவற்றை இறுக்குவதற்குப் பக்கவாட்டில் அடித்திறுக்கப் பயன்படும் ஆப்பு போன்ற நீண்ட கட்டை.