பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

604

Tre-pan: (எந்.) ஒரு துளையைச் சுற்றி வட்டமான குழிவை வெட்டுதல்.

T rest: டி. ரெஸ்ட்: மரவேலை லேத் எந்திரத்தில் வேலைக் கருவிக்கான தாங்கு நிலை. பணி செய்ய வேண்டிய பொருளை தேய்ப்புச் சக்கரம் கொண்டு வேலை செய்வதற்கும் தாங்கு நிலை.

Trestle: நாற்கால் தாங்கி: கீழ் நோக்கி சரிவாக அமைந்த நான்கு கால்கள்மீது அமைந்த உத்தரம். இவ்விதமான இரண்டைப் பக்கம் பக்கமாக வைத்து அவற்றின் மீது ஒரு பலகை அமைக்கலாம். பள்ளம் அல்லது குழிவின் மீது இவ்விதக் கட்டுமானத்தை அமைத்து அதன் மீது சாலை அல்லது ரயில் பாதை போடலாம். (இருக்கை) இவ்விதக் கட்டத்தின் மீது பலகை அமைத்து மேசையாக்கலாம் (மெத்தை) அகன்ற மேல் பகுதியைக் கொண்ட அறுப்பதற்கான தாங்கு தூண். வெளி முனைகளில் திண்டு வைக்கப்பட்டது.

Trestle table: (வரை.) நாற்கால் தாங்கி மேசை: நாற்கால் தாங்கி மீது வரைவதற்காக அமைக்கப்பட்ட பெரிய பலகை.

Triangle: முக்கோணம் : மூன்று புறங்களையும் மூன்று உள் கோணங்களையும் கொண்ட வடிவம். செங்கோணத்தில் ஒரு கோணம் நேர் கோணமாக இருக்கும்.

Triangular truss: முக்கோணத் தாங்கி: குறுகிய விரி பரப்புக்கான குறிப்பாக கூரைகளை அமைப்ப தற்கான தாங்கி.

Triangulation : முக்கோணமாக்குமுறை: நிலம் மற்றும் நீர் மீதான பரப்புகளையும் இவற்றின் மீதுள்ள குறிப்பிட்ட நிலைகள் எவ்வளவு தொலைவில் உள்ளன என்பதையும் அளவிட இந்த நிலைகளைச் சேர்த்து பல கோணங்களை உருவாக்கிக் கொண்டு அடித்தளம், கோணம் ஆகியவற்றைக் கணக்கிடும் முறை .

Trickle charge: துளி மின்னேற்றி: இரு திசை மின்சாரத்தை நேர் மின்சாரமாக மாற்றுகிற திருத்தி. தேங்கு மின்கலத்துக்கு தினமும் 24 மணி நேரம், பொதுவில் மிகக் குறைவான விகிதத்தில் நேர் மின் சாரத்தை அளிப்பது.

Trifiorium: ரிபிஃயோரியம்: ஒரு சர்ச்சின் உள்ளே பிரதான நடுப் பாதைக்கு மேலாக உள்ள சரிந்த கூரைக்கும் நடைபாதை விதானத்துக்கும் இடையே உள்ள வெளி.

Trigonometry : (கணி.) திரிகோணமிதி: ஒரு முக்கோணத்தின் புறங்கள், கோணங்கள் ஆகியவற்றை அளக்கும் அறிவியல்.

Trim: (க.க.) டிரிம்: ஒரு கதவு அல்லது பலகளிையின் நிலைத் தண்