பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Ohm

451

Oil


காந்தப்புலத்தின் செறிவினைக் குறிக்கும் திட்ட அலகு.

Offset (க.க.) (1) உட்சாய்வு: சுவரில் திட்பக் குறைவு உண்டு பண்ணும் பக்க உட்சாய்வு:

(2) மாற்றுக்கறைப் படிவு: அழுத்தப் பட்ட தொய்வக உருளைமீது மை தடவி எதிர்ப்படியாக எடுக்கப்படும் கல்லச்சுமுறை

Offset paper: மாற்று அச்சுத்தாள் : மாற்றுக் கல்லச்சு முறைக்குப் பொருத்தமான பண்பியல்புகளுள்ள தாள்,

Offset printing: மாற்று அச்சுமுறை : அச்சுப் படிவத்திலிருந்து அச்சு மை நேரடியாகத் தாளுக்குச் செல்லாமல், ஒரு ரப்பர் பரப்பில் முதலில் பதிந்து, பின்ன்ர் எதிர்ப் படியாகத் தாளில் பதியும் அச்சு முறை.

Ogee: (க.க.) இரட்டை வளைவு: பாம்பு வடிவான அல்லது "S" வடி வான இரட்டை வளைவு.

Ogive; கூர்முனை வளைவு. வளைவுக்கூடத்தின கூர்முனை வளைவு.

Ohm: (மின்.) ஒம்: மின் தடை அலகு.

Ohm metêr: (மின்.) ஓம் மானி : மின்தடையின் அளவினை ஒம் களில் தேர்டியாகக் குறித்துக்காட்டும் ஒருவகை மின்ன்ோட்ட மானி.

Ohm resistance: (மின்.) ஓம்

தடை: ஒரு மின் சுற்று வழியில் (நேர் மின்னோட்டம்) ஓர் ஆம்பியர் மின்னோட்டத்தை ஓர் ஒல்ட் மின்னழுத்தம் உண்டாக்கும்போது அந்த மின் சுற்று ஒர் ஒம் தடையை உடையதாகக் கருதப்படும்.

Ohm’s law : (மின்.) ஓம் விதி : "ஒரு மின்னோட்டத்தில் பாயும் மின்னோட்டம், அதிலுள்ள தடையின் அல்லது எதிர்ப்பின் விகித அளவில் இருக்கும்' என்னும் விதி. இந்த விதி பெரும்பாலும் கணிதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

Oil:(வேதி.) எண்ணெய் : விலங்குகள், தாவரங்கள், கனிமங்களிலிருந்து கிடைக்கும் எண்ணெய்ப் பொருள். இது மசகுப் பொருளாகப் பயன்படுத்தப்படுவதுடன் தொழில்களிலும் மிகுதியாகப் பயன்படுகிறது

Òil control ring : (தானி.) எண்ணெய்க்கட்டுப்பாட்டு வளையம்: இது ஒரு வகை உந்து தண்டு வளையம். இந்த வளையத்திலுள்ள வரிப்பள்ளத்தின் வழியாகவும், உந்து தண்டின் சுவரிலுள்ள சிறிய துவாரங்கள் வழியாகச் செல்லும் எண்ணெய் நீள் உருளைச் சுவரிலிருந்து பிறாண்டி எடுத்து திருகு கோட்டக் கலத்தினுள் வடிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Oil cup : (எந்.) எண்ணெய்க்குவளை: இது உட்புழையான கண்ணாடி மேற்பகுதியையும், தகடு