பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Par

468

Par


களுக்குமிடையிலான வேறுபாட்டிற்குச் சமமாக இருக்கும்.

Parallel jaw pliers : (பட்.) இணைத்தடை இடுக்கி : செங்கோணியக்க இணைப்புடைய இடுக்கி. இது வாயளவு எவ்வாறிருப்பினும் தாடைகள் இணையாக இருப்பதற்கு இடமளிக்கிறது.

Parallelogram : (கணி.) இணைவகம் : எதிர்ப்பக்கங்கள் சமமாகவும் இணையாகவும் உள்ள ஒரு நாற்கரம், பரப்பளவு = ஆதாரம் x செங்குத்து உயரம்,

Parallelogram of forces: (எந்.) இணைவக விசை: இரண்டு விசைகள் இணைந்து ஒரே விசையாகச் செயற்படும்போது திசையிலும் அளவிலும் மூல விசைகள் இரண்டும் ஒர் இணைவகத்தின் இரு புடைப் பக்கங்களுக்கும் இணை விசை அவற்றுக்கிடைப்பட்ட மூலை விட்டத்திற்கும் சமமாக் இருக்கும் நிலை.

Parallel rulers: இணைகோடு வரைகோல்: ஒரு போகுக் கோடுகள் வரைவதற்குரிய, சுழல் அச்சால் இணைக்கப்பட்ட இரட்டை வரை கோல்.

Paramount: மேதகவு:அனைத்திற்கு மேலான தகைமை சான்று.

Parapet: (க. க.) கைப்பிடிச்சுவர்; மேல்முகடு, மேல்மாடி, அல்லது ஒரு பாலத்தின் பக்கத்தில் மறைப்பாகக் கட்டப்படும் தாழ்வான சுவர் .

Parasite drag: (வானூ.) ஒட்டு இழுவை: விமானத்தில் இறகுகளின் விரைவியக்கப் பகுதியிலிருந்து தனித்தியங்கும் இழுவைப் பகுதி.

Parasol monoplane: (வானூ.) விமானத்துள் விமானம்: விமானத்தின் கட்டுமானச் சட்டகத்திற்கு மேலே இறகு அமைந்துள்ள ஒரு குறு விமானம்,

Parchment: வரைதோல் தாள்:எழுதுவதற்காக விலங்குத் தோல் போல் பாடம் செய்யப்பட்ட காகிதம். காகிதத்தை வலுக்குறைந்த கந்தக அமிலக் கரைசலில் நனைத்து கெட்டித் தன்மையுடையதாகவும், நீர் புகாதவாறும் செய்யப்படுகிறது. இக்காகிதம் பளபளப்பாகவும், ஒளி ஊடுருவக் கூடியதாகவும் இருக்கும்.

Pargeting: (க.க.) சுண்ணச்சாந்து: சுவர்ப்பூச்சுச் சிற்ப ஒப்பனை வேலைப்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் அலங்காரக் காரை.

Paring chisel: (மர.வே.) செப்பனிடு உளி: சீவிச் செப்பனிடவும், தறித்து ஒழுங்குபடுத்தவும், விளிம்பு வெட்டவும் ஒரம் நறுக்கவும் பயன்படும் ஒரு நீண்ட உளி,

Paris green: (வேதி.) பாரிஸ் வண்ணம்: (CuHAsO3): பூச்சிகொல்லி யாகவும் வண்ணப்பொருளாகவும் பயன்படும் தாமிர ஆர்சனைட் என்ற நச்சு வேதியியற் பொருள்,

Parquetry : (க.க.) மரக்கட்டை எழில் விரிப்பு: தளங்களில் மரக்