அச்சு ஒன்றிய வடம் 123
அலைத்தொடர்பியல் (microwave communication) ஆகியவை மிகவும் முன்னேறிவிட்ட இக்காலத்தில்கூட அச்சு ஒன்றிய வடங்கள் பெரிதும் பயன்படுகின்றன. பேசுபவரையும் பேச்சைக் கேட்பவரையும் ஒரு நிலையத்திலிருந்து மற்றொரு நிலையத்திற்கு இணைக்க நீண்ட திறந்தவெளிக் கடத்திகள் (open conductors) பயன்படுத்தப்படுகின்றன. ஒரே நேரத்தில் பல உரை
படம் 1. அச்சு ஒன்றிய வடத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்
யாடல்களை அனுப்புவது இத்தகைய திறந்தவெளிக் கடத்திகளில் அரிதாகிறது. ஆனால் அச்சு ஒன்றிய வடம் வழியாக ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான உரையாடல்களை ஒரே நேரத்தில் அனுப்ப முடியும். மேலும் ஆறு, கடல் போன்ற இடங்களில் அச்சு ஒன்றிய வடத்தை நிறுவுவது மிகவும் எளிதாகும்.
அச்சு ஒன்றிய வடத்தின் கட்டுமானம் நெடுந் தொலைவு செய்தித் தொடர்புக்காகப் பயன்படுத்தப் படும் வடங்கள் பொதுவாக இரண்டு வகைப்படும். முதல் வகை முறுக்கிய கம்பிகளைக் (twisted wires) கொண்டு தயாரிக்கப்பட்டது. இரண்டாவது வகை ஒரு மெல்லிய குழாய் போன்ற அமைப்புடையது. வெளிப்பகுதி ஒரு குழாய் வடிவத்தில் ஒரு கடத்தியாகப் பயன்படுகிறது. அக்குழாயின் நடுவில் அதன் அச்சின் வழியே ஒரு கடத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதன் குறுக்குவெட்டுத் தோற்றம் படம் 1 இல் காண்பிக்கப்பட்டுள்ளது. படம் 2 இல் அச்சு ஒன்றிய வடத்தின் அமைப்பு காண்பிக்கப்பட்டுள்ளது. நடுவில் உள்ள செம்புக் கடத்தி 0.104 அங்குலம் விட்டமுடையது. வட்டவடிவான இலேசான பாலித்தின் (Polythene) தட்டுகள் நடுவில் உள்ள கடத்தியை வெளிக்கடத்தியினின்றும் தள்ளி வைக்கின்றன. வெளிக் குழாயின் உள் விட்டம் 0.375 அங்குலம் ஆகும். மேலே சுற்றப்பட்டுள்ள எஃகினாலான நாடா, பாதுகாப்பாகவும் மின்
பாலித்தின் இடைவெளித் தட்டுகள் நடுவில் உள்ள கடத்தி சுருள் செம்பு நாடா
படம் 2, அச்சு ஒள்றிய வடத்தின் கட்டுமானம்