396 அடைகாக்கும் கருவி
காற்றுப்புகும் ஆளையினருகில் வைக்க வேண்டும், இரத இரண்டு வேதியியல் பொருள்களும் இணை. வதிய மாற்றமடைந்து பார்மால் டிஹைடி வாயு (Formatde- hyde fumes) அடர்ந்த புகையாசு வெளிவருகின்றது: இப்புகை உயிரிகளைக் கொல்லும் நச்சுத் தன்மை பெற்றது. அடைகாக்கும் கருவியில் நுண்ணுயிர்கள் இருக்கும் சாத்தியக் கூறுகள் தென்பட்டால் மேற்கூறப் பட்ட. வேதியக் கலவையினை இரண்டு, மூன்று பங்குகள் அதிகப்படுத்துப் பயன்படுத்துவது நல்லது: இப்புகை கையாளுபவரின் கண், மூக்கு ஆசிய அவயவங்களில் எரிச்சலை உண்டு பண்ணுவதால் இதைக் கவனமாகக் கையாளுவது அவடுயம்,
அடைகாக்கும் கருவியின் ஆய்வகம்
அடைகாக்கும் கருவி புதயதோ, பழையதோ, பயன் படுத்துவதற்கு முன்பு அதைச் சோதனை ஓட்டம் செய்து பார்ப்பது கல்லது. வெப்பம் ச யான அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றதா என்று அறிய லெப்பமானினயயும் வெப்பத்தை நிலைப்படுத்தும் கருவியையும் (Thermo- meter and Thermostats) Gea Das வேண்டும். குறைத் தது 24 மணி நேரமாவது 100 பாரன்ஹீட் வெப்ப அளவில் கருவியினை இயக்கிக் கருவிகள் நல்ல விதமாக வேலை செய்கின்றனவா என ஆய்குல் வேண்டும். அடைகாக்கும் கருவி சப தளத்தில் இருக்கும்படி சரி செய்யப்படல் வண்டும். முட்டைகளை வைக்கும்
அடை காக்கும் கருவிக்குள்
முறை
முட்டைகளை அடைகாக்கும் கருவியின் வகையைப் பொறுத்துப் படுக்கை வசத்தில் அல்லது முட்டை யின் அகன்ற பகுதி மேல்தோக்கியும், கூரான பகுதி கீழ் நோக்கியும் வைக்கப்படல் வேண்டும். முட்டைகளை வரிசை வரிசையாக வைக்க வேண்டும். ஓரே அடுக் காக மட்டும்தான் வைக்க வேண்டும், இவ்வாறு செய்வதால் வெப்பக்காற்று சீராசு எல்லா முட்டை களின் மீதும் பட வசஇயாக இருக்கும். முட்டைகளை வைத்துநும் கருவி ஒழுங்காக வேலை செய்கிறதா என்று 12 மணி நேரம் சண்காணிக்க வேண்டும்.
வெப்பத்தைச் சீ ர்படுத்தல்
பொதுவாகக் கோழியின் உடல் வெப்பம் சாதாரண நிலையில் 105” பாரன்ஹீட்டிலிருத்து 107 டிகிரி வரை இருக்கும். அடைகாக்கப்படும் முட்டைகளின் உள் வெப்பம் 700 gO பாரன்ஹீட். ஆக இருக்கும், இதே அளவு 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அடைகாக்கும் கருவிக்கும் பொருந்தும். Gand Ges அளவு வாத்து, காடை, வான்கோழி, இளி, கோழி போன்ற மற்ற இனப் பறவைகளுக்கு வேறுபடும். அடைகாச்கப்பட வேண்டிய தாட்களும் மாறுபடும்,
ஈரப்பதம்
அடைகாக்கும் சருலியினுள் போதிய அளவு ஈரப்பதம் இருத்தல் வேண்டும். இல்லாவிடில் முட்டையிலுள்ள ௧௫ காய்ந்து மூட்டை ஒட்டுடன் ஒட்டிக் கொள்ளும், ஆசுவே முதல் 18 நாட்கள் வரை 65 சதவீதம் சரப்பதம் இருக்க வேண்டும். மீதமுள்ள மூன்று நாட் களுக்கு 75 சதவீத ஈரப்பதம் இருக்க வேண்டும்.
காற்றோட்டம்
போதிய அளவு காற்றோட்டம் இருந்தால்தான் ௧௫௬ வளரும்பொழுது வெளியாகும் கெட்ட வாயு கருவி யினுள்ளிருந்து வெளிப்பட முடியும். 84 மணி நேரத் இற்குள் 6 இலிருந்து 8 தடவைகளாவது முட்டைகள் இருப்பப்படல் வேண்டும்.
முட்டைகளை ஆய்தல்
கருவளர்ச்சி அடைந்த முட்டைகளை 718-ஆவது நாள் மின்விளக்கு ஒளியில் சோதித்து கருத்தர்ச்காத மூட்டைகளையும், உயிரற்ற கருவுள்ள முட்டைகளை யும் கருவியினின்று அகற்றிவிடல் வேண்டும், வாணிப நோக்கில் தனியார் மற்றும் அரசு சார்பில் நடைபெற்று வரும் குஞ்சு பொ ரிவகங்களில் (Hatcheries) Qrraparn கடைபிடிக்கப்படுவது இல்லை.
அடைகாக்கும் கருவியின் பயன்கள்
இவை கோழி, வாத்து, ஜப்பானிய காடை (௮௨0௯௪ ர:/1),) வான் கோழி, இனிக் கோழி போன்ற பறவை களின் முட்டைகளை அடைகாத்துக் குஞ்சுகள் பொரிப் பதற்குப் பயன்படுகின்றன. முட்டைக் கருவினை அடிப் படையாகக். கொண்டு தடைபெறும் பலவகையான ஆய்வுகளுக்கும், நோய் கண்டுபிடிப்பு, தடுப்: மருந்து கள் .தயார் செய்யவும் அடைகாக்கும் கருவிகள் பயன் படுத்தப்படுகின்றன.
வெ. இரா.
நூலோதி
1. Naidu, P-.M.N., "Poultry Keeping in India’. Indian Council of Agricultural Research, First Edition 1959.
2. Indian Council of Agricultural Research, Hand- Bock of Animal Husbandry’ ICAR, Revised Edition, October 1977.
3. Banerjee G.C., ‘A Text Book of Animal Hus- bandry’ Oxford & IBH Publishing Co., New Delhi, Fifth Edition. 1982.