அக்காந்தேசி 3
சூற்பையின் கீழ் தேன் சுரக்கும் தட்டு (Disc) ஒன்றிருக்கின்றது. சூற்பை மேல் மட்டத்திலமைந்துள்ளது; சூலக இலைகளும், சூற்பையும், இரண்டாக இருக்கின்றன; சூல்கள் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டவை; அச்சுச் சூல் அமைவுடையவை (Axile placentation); சூலகத்தண்டு 1; சூலகமுடிகள் 2. கனி கள் அறைவெடிகனிகள் (Loculicidal capsule) இவை சத்தத்துடனும் ஒருவித விசையுடனும் வெடிக்கும். இதனால் விதைகள் தாய்ச் செடியிலிருந்து சிறிது தூரத்திற்கு வீசியெறியப்படுகின்றன.விதை உறைகள் வழுவழுப்பாகவோ, சிதல்கள், தூவிகள் ஆகியவற்றைப் பெற்றோ இருக்கும். ௧ரு பெரியது. முளை சூழ்சதை (Endosperm) சாதாரணமாக இருப்பதில்லை.
பொருளாதாரச் சிறப்பு: அஃபீலாண்ட்ரா (Aphelandra), பார்லீரியா (Barleria), பிலோப்பீரோன் (Beloperone), கிராசாண்ட்ரா (Crossandra), ஈராந்தீமம் (Eranthemum), ஃபிட்டோனியா (Fittonia), கிராப்டோஃபில்லம் (Graptophyllum), உஸ்தீசியா (Justicia), மெயீனியா (Meyenia), துன்பர்ஜியா (Thunbergia) ஆகியவற்றின் சிற்றினங்களில் சில தோட்டங்களில்
வளர்க்கப்படுகின்றன. ஆடாதொடை (Adhatoda vasica) இலைகள்
நாட்டு மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.
இலைகளின் சாறு பூச்சிக்கொல்லியாகவும், சீழெதிர்ப்பியாகவும்
(Antiseptic) பயன்படுகின்றது. வீக்கத்தையும், வலியையும் போக்க
இலைகள் பயன்படுகின்றன. மேலும் ஒருவித மஞ்சள்
நிறச் சாயம் இலைகளிலிருந்து கிடைக்கின்றது.
பசுந்தாள் அல்லது தழை உரமாக (Green manure) இலைகள்
பயன்படுத்தப்படுகின்றன. தென்னிந்தியாவில் மட்டும் 46 சிற்றினங்களைப் பெற்றிருக்கின்ற ஸ்ட்ரோபிலாந்தஸ் (Strobilanthes) என்னும் பேரினம்
குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில் இவற்றில் பல சிற்றினங்கள் ஒவ்வோர் ஆண்டும் மலருவதற்குப் பதிலாகக் குறிப்
பிட்ட சில ஆண்டுகளுக்கொருமுறைதான் (அதாவது 7, 8, 9, 10, 12) மலரக்கூடியவை. இந்தப் பேரினத்தைச் சார்ந்த ஸ்.குந்தியானஸ் (S.kunthianus (Nees) T. And.& Benth. = Phlebopbyllum kunthianum Nees) சங்க நூல்களில் வரும் குறிஞ்சி என்று கருதப்படுகின்றது. இப்பேரினத்தின் பெரும்பாலான சிற்றினங்களெல்லாம் மலைப் பிரதேசங்களில் வளரக்கூடிய புதர்ச் செடி