528 அணு உலை
௪88 அணு உலை
படம் 48, துருவா அணு உலை அமைப்பு
சைர௫ற்குப் பதிலாக புதிய உலை கட்ட வேண்டியதா யிற்று. சைரஸ் உலை நன்கு செயல்பட்டுவரும் உலை யாகும். ஒர் உலையின் வாழ்நாள் 25 இலிருந்து 30 ஆண்டுகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே சைரஸ் காலம் முடிவடையும்போது துருவா உலை யைத் தொடங்க வேண்டியதாயுள்ளது. மேலும் 25 ஆண்டுக் காலத்திற்குப் பின்னா், பெரிய உலையாக 700 மெ.வா. இறன் படைத்ததாய் துருவா உலையை அமைக்க வேண்டியதாயிற்று. இவ்வுலையில் பல ஒரிடத் தனிமங்களை மிகுத்த அளவுகளில் உண்டாக்க லாம். இனிமேல் ஒரிடத்தனிமங்கள் கிடைப்பதில் பற்றாக்குறை இராது. ஆனால் துருவா போன்ற உலைகளுக்கு அயல் நாட்டினார் வடிவமைப்பை வழங்க வில்லை. இத்திய அறிவியலாளர்களாலேயே இதற்கான
வடிவமைப்பு ஆக்கப்பட்டது. இவ்வுலைக் கட்டுமானத் திற்குத் தேவையான பொருள்கள் யாவையும் இத்திய அறிவியலாளர்களாலே இர்மானிக்கப்பட்டன. துருவா அணு உலை அமைப்பினைப் படம் 48இல் காணலாம். துருவா உலையானது கனநீரினைத் தாமதப்படுத்தியாக வும், குளிர்விப்பானாகவும்பயன்படுத்.து௫ன் ஐது. ஆனால் சைரஸ் உலையில் மென்னீரே குளிர்விப்பானாகப் பயன் படுத்தப்படுகின்றது. துருவா உலையில் its தனிமங் சுளைப் பெறுவதோடல்லாமல், 1014 தியூட்ரான்கள்/ சதுர சென்டி மீட்டர்/நொடி, அளவுள்ள நியூட்ரான் தொடரினைப் பெறலாம். சைரஸ் உலையில் செய்ய முடியாத பல சோதனைகளை இவ்வுலையில் செய்ய லாம். இத்த அளவு நியூட்ரான் தொடரினைக் கொண்ட உலைகள் உலகில் மிகச் சிறிய அளவிலேயே உள்ளன,