664 அணுக்கற்றைகள்
664 அணுக்கற்றைகள்
களைப் பயன்படுத்துசின்றனர். பொதுவாசு அணுக்கத் தகவு (2௦00 Ratio )3:1 44a இருக்கும், இதை 4:83 ஆசு இருக்கும்படி மாற்றமுடியும். இந்த அணுச்கல் விளை enous (Zooming 61200) பெற ஒற்றை நிற இயங்குபட்_ கங்களைச் சில நேரங்களில் பயன்படுத்துவதுண்டு,ப்டதீ Ga இத்தகைய வில்லைத் தொகுதிகளில் மூன்று இயக்கு நிலைகள் காட்டப்பட்டுள்ளன. 1,4,6 என்ற நிலை வில்லைகள் லில்லையகத்தில் அமைக்கப் பட்டுள்ளன. 2,3,5 என்ற இயங்கு வில்லைகள் இயங்கு உருளையகத்தின் வழியாக அணுக்கக் கைப் யிடியுடன் இணைக்கப்பட்டுள்ளன (கைப்பிடியைக் கொண்டு மூன்று திவைகளுக்கு மாற்றிக் கொள்ள இவலும்).
காண்சு: ஒளியியல் வில்லைகள்
அணுக்கற்றைகள்
வெற்றிடத்தில் ஒர இசையில் பாயும் மின்னூட்ட. மில்லாத அணுத்தாரைகளை அணுச்கற்றை என்பர், இக்கற்றைகளில் உள்ள அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இடையீட்டுவினை புரியாத நிலையில் அமைந்துள்ளன. ஆனால் மின் புலமோ காந்தப் புலமோ செலுத்தி அணுவை ஆயலாம். அணுக்கற்றை ஆய்வுமுறையில் மூலக் கூற்றுக்கற்றையை ஒத்ததே, வரலாற்றுக் காரணங்களால் இரண்டையும் மூலக்கூற்றுக் சுற்றை என்றே வழங்குவர்,
அணுக்கற்றை முறை அணு ஆற்றல் மட்டங்களைப் பற்றிய சரியான நிறமாலைச் (Spectroscopy) செய்தி களைத் தருகிறது. இம்முறையினால் மின்துகள்களுக்கு இடையில் உள்ள இடையீட்டு வினையையும், மின் துகள் அணுக்கரு ஆயேவற்றிடையில் உள்ள இடை யீட்டு வினையையும், அணுவகத்துள்ள எல்லா உள் கூறுகளும் புநப்புஸமொன்றுடன் புரியும் இடையீட்டு வினையையும் மிச ஆழமாக ஆயலாம்.
பார்க்க: மூலக் கூற்றுக்கற்றை.
அணுக்கோட்பாடு
2500 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய மெய்யறி வாளர்களும் அதன்பின் சிரேக்க அறிஞர்களும் அணு அமைப்பு பற்றிய பொதுவான கருத்தைக் கூறியுள்ளார் கள். லியூஸிபஸ் (1.ல௦/ர) என்ற அறிஞரும் அவரு டைய மாணாச்கர் Ge wraifece civ(Democritus) என் பாரும் அணுக் கொள்கையைப் பற்றிப் பின்வருமாறு கூறியுள்ளனர். “உலகத்திலுள்ள. எல்லாப். பருப் பொருள்களும், மேலும் பிரிக்க இயலாத இறுதி ஆக்கக் கூறுகளான சிறிய அலகுகளால் உருவாக்கப் பட்டனவா கும். "மேலும் பீரிக்க இயலாத இந்த சிறிய அலகுகளை அணுக்கள் (4405) என்று டெமாக்ரடிஸ் கூறினார்.
‘Atom’ என்ற சொல், மேலும் பிரிக்க இயலாது என்று
பொருள்படும் இரண்டு கிரேக்கச் சொற்களிலிருந்து (&- not, Temnein-to cut) பெறப்பட்டதாகும். அணுபற்றிய டெமாக்ரடிஸ் கருத்தை எபிகுரஸ் (1010யாயட) என்பாரும் ஏற்றுக்கொண்டார். ஆனால் இக்கொள்கைக்கு மிகுந்த செல்வாக்குடனிருந்த கிரேக்க தத்துவமேதை அரிஸ் Large Aristotle) (284-322 Bap ) கடும் எதிர்ப்புத் தெரிவித்தார், இக்சுடும் எதிர்ப்பினால் பல நாற்றாண் டுகள் வரை அணுபற்றிய உண்மைநிலை தெளிவுறாத ஒன்றாகவே இருந்தது. கி.பி. 16, 17ஆம் நூற்றாண்டு களில் அறிவியல் அறிஞர்களும் மெய்யறிவாளர்களும் அணுவைப் பற்றித் திரும்பவும் ஆராய முற்பட்டார்கள். அவர்களில் இத்தாலிய நாட்டைச் சேர்ந்த குலிலியோ (Galileo), ஃபிரான்சு நாட்டைச் சேர்ந்த ரேனே டேகார்டே (606 05500165), இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஃபிரான்ரிஸ் பேர்சன் (77120015 Bacon) grunt. பாய்ல் (Robert Boyle). gy நியூட் டன் (Issac Newton) ஆூயோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர், இவர்கள், பொருள்கள் இயற்கையாகவே தொடர்ச்சியானவை அஃல என்றும், அணுக்கள் எனப்படும் துகள்களால் ஆச்கப்பட்டவை என்றும் தஇிண்ணமாகக் கூறினார்கள்.
டால்டன் அணுக்கொள்கை
பொருள்களின் அணுத் தன்மை பற்றிய இப்பழங் கருத்து மிச எளிதாக இருந்துங்கூட 29ஆம் நூற் றாண்டு வரையில் உலகம் அதை ஏற்கவில்லை, 9ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டால்டன் என்பார் வேதியியல் சேர்க்கை பற்றிய விதி ஒன்றைக் கண்டார். அது அணுக் கொள்கையைத் தெள்ளத்தெளிவாக விளக்கியதோடு டால்டனுக்கு அணுக் கொள்கையின் தந்ைத என்னும் பட்டத்தையும் வாங்கத் தந்தது. இவ் விதியின்படி. ஒரே இரண்டு தனிமங்கள் சேர்ந்து பல் வேறு கூட்டுப் பொருள்களை உண்டாக்கும்போது ஒரு குறிப்பிட்ட அளவுள்ள ஒரு தனிமத்துடன் சேரும் மற்ற தனிமத்தின் வெவ்வேறு அளவுகளின் விகிதங்கள், அவ் வளவுகளுள் மிகச் சிறியதின் முழு மடங்குகளாக இருச் கும்; பின்னமாக இரா. ஒவ்வொரு தனிமமும் ஒரே தன்மையுடைய தனித்தனி அணுக்களைக் கொண் டிருக்கன்றுது என்று கொண்டால் மட்டுமே வேதியியல் சேர்க்கை விதியை விளக்க முடியும், இந்தப் பல்வித விதி பல்வேறு அணுக்களின் ஒப்பு எடையைக் கணக் டெவும் வழி செய்கிறது. இவ்லிதி பல அறிவியல் அறிஞர்களால் பயன்படுத்தப்பட்டது
நீரிலும், நீர்மத்திலும் வளிமங்களின் கரையும் தன்மை பற்றிய கடும் ஆராய்ச்சிக்குப் பின் வேதியியல் அமைப்பில் அடிப்படை அலகுகள் அணுக்களே என்று டால்டன் கூறினார். நியூட்டனும் தனது ஆய்வின் மூலம், மீட்சியியல் தன்மை படைத்த ஒரு நீர்மத்தில் சிறு துகள்கள் அல்லது அணுக்கள் உள்ளன என்று தெளிவாக விளக்கிக் காட்டினார். டால்டன் அணுக் கொள்கை முதலில் வேதியியலிலும் பின்னா் இயற்பியலிலும் முக்கிய அங்கமாக விளங்கியது.