அணு நிறமாலை 681
அணுக்குலத்தில் எரிக்கவேண்டும். அதாவது அந்தப் பொருள் ஆய்வுக்காக நிலையாக மாற்றப்படவேண்டி, யுள்ளது. அனால் ஓஜே எலக்ட்ரான் நிறமானி (கபர் Electron Spectrometer) போன்றவற்றில் ஒரு பொருளை அழிக்காமல் அதன் பரப்பில் காணப்படும் தனிமங்களள மிகவும் துல்லியமாகக் கண்டுகணக்கிட முடியும். ஒஜே எலக்ட்ரான் நிறமானியில் ஓர் எலக்ட் ரானோ அல்லது 7(-கதிரோ பொருளின் பரப்பிலுள்ள அணுவீலோ அல்லது வளிம நிலையிலுள்ள பொருளின் அணுவிலோ மோ, அதிலுள்ள உட்கரு எலச்ட்ரானை வெளியேற்றுகிறது. அந்த இட.த்திற்கு அதைவிட அதிக ஆற்றல் கொண்ட எலக்ட்ரான் தாவும்போது மிஞ்சுகின்ற ஆற்றலைப் பெற்று அதே அணுவிலுள்ள மற்றோர் எலக்ட்ரான் வெளியேறுகிறது. இவ்வாறு வெளீயேறிய எலக்ட்ரான் ஒஜே எலக்ட்ரான் எனப்படு கிறது. இதன் ஆற்றலையும் எண்ணிக்கையையும் கணக் இடுவதனால் அந்த அணுவைப் பற்றி அறிய முடி திறது. ஒரு பொருளில் அடங்கியுள்ள தனிமங்களைக் கண்டறிவதன் மூலம் அந்தத் தனிமங்களின் விகிதத் தேதவைக்கேற்றபடி மாற்றியமைத்த அந்தப் பொருளை எந்தவிதப் பயன்பாட்டிற்கும் ஏற்றதாகச் செய்ய வழியுண்டு.
அணு நிறமாலையின் பயன்கள்
அணுவின் தன்மையை அறிந்து கொண்டதன் விளை வாக அறிவியல் உலகத்தில் தோன்றிய கண்டுபிடிப்புகள் மிகப் பல, அவற்றில் ஒன்று Gwat (Laser) என்ற விளக்காகும். ஒரு'வளிமத்தின் வழியாக மின்சாரத்தைச் செலுத்தும் போது ௮திக ஆற்றல் நிலைக்குச் செல்லும் எலக்ட்ரான்கள், வெளிப்புறக் தூண்டுதலின் றித்தன்னிச் சையாகக் ($ற01(20௦005 61196101) குறைந்த ஆற்றக் நிலைக்கு வந்து குவாண்டம் ஆற்றலை உமிழ்ஏன்றன. வெல்வேறு எலக்ட்ரான்கள் உமிழ்ந்த குவாண்டம் ஆற்றல்கள் ஒன்றோடொன்று எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருக்கின்றன. அந்த வளிமத்தில். குறைந்த ஆற்றல் நிலையில் இருப்பதை விட அதிக ஆற்றல் நிலையில் அஇக எலக்ட்ரான்கள் இருக்கும் வேளையில் (Population inversion) அந்த எலக்ட்ரான்கள் உமிழும்
குவாண்டம் ஆற்றல்கள் ஒருங்கிணைந்தவையாக (Coherent) இருக்கின்றன. அதரவது எல்லாக் குவாண்டம் ஆற்றல்களும் ஒரே இசையில் ஒருங்
இணைந்து ஒரே அதிர்்9வண்ணுடன் செல்கின் றன. லேசர் விளக்கில் ஒளிரும் ஊடகம் (௦1146 1சீ2ய்மாடு இண்ம, நீர்ம, வளிம நிலைகளில் இருக்கலாம். வளிம லேசர்சளில் மின்சாரமோ (11601010 015மோத6), அணு உலையிலிருந்து கடைக்கும் நியூட்ரான்களோ (Direct neutron pumping) gafgid Guin ped gush on எலக்ட்ரான் சுளை அதிக ஆற்றல் நிலைக்கு உயர்த்துகின் றன. இண்ம நீர்ம லேசர்களில் (80114 liquid state lasers) மின்காந்த அலை எலச்ட்ரான்௧களை அதிக ஆற்ழுல் நிலைக்கு உயர்த்துகிறது. லேசரில் இரு ஆடிகள் (147055) மூக்கய பங்கு வ௫க்கின்றன. ஓர் அணுவின் நிற 4,%,1-86
அணுநிறமாலை 687
மாலையைப் பற்றிய அறிவிலிருந்து அத்த அணுக்களா லான பொருள் லேசர் விளக்காக ஒளிர முடியுமா என்று கண்டறிந்து, அதற்கான வழிகளில் முனைந்து லேசர் உருவாக்கப்படுகிறது.
இந்த லேசர்களின் பயன்கள் அளவிடற்கரியன. மருத்துவத் துறையில் நரம்புகளை வெட்டி ஓட்டுவது மூதலான அநுவைசள் (0ற0:௨(100) செய்யவும், செய்இத் தொடர்புத் துறையில் மிகுந்த அளவில் செய்திகளை விரைவாகக் . சக்கனமாக ஒரே நேரத்தில் அனுப்பவும் Guay (Laser communication) AsrPx துறையில் மிக நுட்பமான துளைகள் போடவும், அறுக்கவும், பாது காப்புத் துறையில் எதிரிகளின் இலக்குகளை துல்லிய மாகக் சண்டுபிடித்து அவற்றை அழிக்கவும், ஆற்றல் துறையில் அணுப்பிணைப்பு உலையிலும், அணுப்பிளப்டு உலையில் பயன்படும் யுரேணியம்- 235 என்ற தனிமத் தைப் பிரித்து ஒதுக்கவும், அறிவியல் துறையில் பல நுட்பமான ஆய்வுகள் நடத்தவும் இன்றைய லேசர்கள் பயன்படின்றன. இன்றைய லேசர்களின் உதவியால் அணுநிறமாலை பற்றிய அறிவியலில் ஒரு மறு மலர்ச்சியே ஏற்பட்டிருக்கிறது.
அண்டவெளியில் இருக்கும் வனிமங்களை அவற்றின் அணு திறமாலையின் உதவிகொண்டு ஆய்வதால் அண்டவெளி பற்றிய பல உண்மைகளை அறிய முடி கிறது. ஒரு கோளில் என்னைன்ன தனிமங்கள் எந்த அளவில் உள்ளன என்று அறிந்து அங்கு எந்த வகை யான தட்பவெப்பநிலை காணப்படும் என்றும், உயிரி னங்கள் எவையேனும் வாழ இயதுமா என்றும் கூற முடியும். அண்டத்தில் தனிமங்களின் விகிதம் காலப் பாக்கில் மாறுபடுவது பற்றி அறிந்து அதன் மூலம் அண்டத்தின் பிறப்புவளர்ப்பு பற்றியும் கூறமுடியும்,
சூரியனின் வெளிப்பரப்பில் உள்ள வளிமங்களைக் சண்டறியவும், அதன் வெப்பநிலையைக் கணக்கிடவும் அணுநிறமாலை பயன்படுகிறது. சூரியன் எல்லா மூல ஆற்றலிலும் மின்காந்த அலையை உமிழ்கிறது. இந்த உமிழ்நிறமாலையின் வடிவம், பிக அதிக எண் ணிக்கையுள்ள மூல ஆற்றலின் அளவு போன்றவற்றி லிருந்து சூரியனின் வெப்பகிலை கணக்கிடப்படு றது. சூரியனின் மையம் சற்றேறக்குறைய 10° சென்டிஈரேடு வெப்ப நிலையிலும், வெளிப்பரப்பு 6000 சென்டிகிரேடு வெப்பதிலையிலும் உள்ளது. இந்த அளவான வெப்ப ஆற்றல் சூரியனிலுள்ள வளிமங்களில் அணுப்பிணைப்பு (809100) நிகழ்வதன் முலம் உண்டா இிறது என்பது கண்டறிந்த உண்மை. இந்த வளிமங்கள் எவை, அவற்றின் வி௫தம், அடர்வு முதலானவை என்ன என்பதைக் கண்டறிந்து உலகத்தில் சூரியனைப் போல ஆற்றல் வெளிப்படுத்தும் அணுப்பிணைப்பு உலை கள் உருவாக்க ஆய்வுகள் நடைபெற்றுவருகின் றன, சூரி யனிடமிருத்து வரும் மின்காந்த அலையை திறப்பிரிகை வழியாகப் பகுத்துப் பார்த்தபோது ஃபிரான்்கோபர் (Fraunhofer) என்பவர் முதன்முதலில் அந்த நிறமாலை