உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/747

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணை 711

கனிம வேதிச்‌ சோர்மங்களில்‌ உள்ள ஒவ்வோர்‌ அணுவலு எண்ணுக்கும்‌ நேர்‌ அல்லது எதிர்‌ மதிப்புக்‌ களைக்‌ கொடுத்தாக வேண்டும்‌, இந்த அணுவலு எண்‌ மதிப்புகளைக்‌ கூட்டும்போது அவற்றின்‌ கூட்டுத்‌ தொகை பூஜ்யமாக இருக்கவேண்டும்‌. எதிர்‌ மதிப்புக்‌ கொண்ட அணுவலு எண்‌, முனைவு அணுவலு எண்கள்‌ (polar valence number) «rary குறுிப்பிடப்படுகிறது. குளோரினின்‌ அணுவலு எண்ணின்‌ மதிப்பு 1, 41. 43, 145, 37 இவற்றில்‌. ஒன்றாக இருக்கலாம்‌. இது குளோரின்‌ எந்தச்‌ சேர்மத்தில்‌ சேர்த்துள்ளது என்‌ பதைப்‌ பொறுத்தது: கரிம வேஇயியலில்‌ முனைவிலா அணுவலு எண்களே பயன்படுத்தப்படுகின்‌ றன,

நூலோதி

1. Hawley. Gessner G., The Condensed Chemical Dictionary. 10th Edition, Galgotia Book Source Publishers. New Delhi, 1984.

2. McGraw-Hill Encyclopaedia ct Chemistry, Sth Edition, 1983.

அணுவாக்கல்‌

காண்க ; நுண்இுவலையாக்கி

அணை

இது ஆறுகளிலும்‌ ஓடைகளிலும்‌ ஓடும்‌ நீரைத்‌ (மக்கள்‌ பயன்‌ பெறும்‌ வகையில்‌) தடுத்து, உயர்த்தித்‌ தேக்ச அவற்றின்‌ குறுக்கே கட்டப்படும்‌ கட்டுமானம்‌. மலை களும்‌ பள்ளத்தாக்குகளும்‌ மேடு பள்ளங்களும்‌ சம்‌ டுவளிகளுமாக நிறைந்த இப்புவியின்‌ பரப்பில்‌ மழை பொழியும்கால்‌ நீர்‌ பெருக ஆங்காங்கே ஒடைகளிலும்‌, சற்றாறுகளிலும்‌ ஒடி ஒன்றோடொன்று கலந்து இறுதி யில்‌ கடலுக்குப்‌ போய்ச்‌ சேருகிறது. மழையில்லாத காலங்களில்‌ நீர்ப்பாசனத்இற்கும்‌ குடிதண்ணீருக்கும்‌ பிற பயன்பாடுகளுக்கும்‌ இன்றியமையாத நீரை நாம்‌ தேவையானபோது பெற ஒடும்‌ நீரைத்‌ தேக்கிச்‌ சேமித்து வைக்க வேண்டியிருக்கறது.

நீரின்‌ தன்மை. ஒடும்‌ நீர்‌ அதன்‌ வேகத்திற்கேற்ப ஓடும்‌ படுகையை அரித்துத்‌ தேய்த்துவிடும்‌; பள்ளத்‌ தாக்குகளில்‌ பாயும்போது மண்ணை அரித்து ஆழமான அறுத்தோடிகளை உண்டாக்கிவிடக்‌ கூடும்‌; அரித்த மண்ணைக்‌ சுரைத்தும்‌, கலக்கியும்‌ சுமந்து கொண்டும்‌ ஒடும்‌, பரல்கற்களைத்‌ தன்‌ படுகையிலே உருட்டிக்‌ கடத்திச்‌ செல்லும்‌, சரிவு குறைதல்‌, ஆழங்குறைதல்‌ போன்ற காரணங்களால்‌ நீரின்‌ வேகம்‌ குறையும்போது அரித்துக்‌ கொணர்ந்த பொருள்களை ஆங்காங்கே

அரணை 711

படியவிட்டுப்‌ பாயும்‌ பாதைகளையே மேடாக்க முயலும்‌; தேக்கங்களிலும்‌ கொள்ளளவைப்‌ பாக்கும்‌ வகையில்‌ மண்‌ படிவுகள்‌ உண்டாக்கும்‌. ஒடும்‌ நீரைத்‌ துல்லியமாகக்‌ கணிப்பது கடினம்‌. ஒடும்‌ நீரின்‌ அளவு நீரின்‌ வேகத்தைப்‌ பொறுத்தது. வேகமோ, படுகை யின்‌ சரிவு, பாயும்‌ நீரின்‌ பரப்பு அகலம்‌, நீரின்‌ ஆழம்‌, படுகையின்‌ தரம்‌, அதாவது நீர்‌ உராய்ந்து பாயும்‌ போது படுகை தரும்‌ எதிர்ப்புத்‌ இறன்‌, இப்படிப்‌ பல, காரணங்களினால்‌ தீர்மானிக்கப்படுவதால்‌ இடத்‌ திற்கு இடம்‌, நொடிக்கு நொடி மாறிக்‌ கொண்டே. யிருக்கும்‌. மேலும்‌ நீர்‌ பாய்ந்தோடும்‌ போது ஒரே இடத்தில்‌ ஓட்டத்தைக்‌ ஈணித்தாலும்‌ நீர்த்துளிகளின்‌ வேகம்‌ ஆழத்தில்‌ மேலிருந்து 8ழாகப்‌ புள்ளிக்குப்‌ புள்ளி மாறுபட்டுக்‌ கொண்டே இருக்கும்‌. ஆகையால்‌ நாம்‌ நீரின்‌ வேகத்தைக்‌ குறிக்கும்போது பொதுவாகச்‌ சராசரியைக்‌ கொண்டுதான்‌ கணிக்கறோம்‌.

மேற்கூறிய நீரின்‌ ல தன்மைகளை அனணயின்‌ வடி வமைப்பை நிர்ணயிக்கும்‌ முன்‌ உணர வேண்டியிருப்ப கால்‌ அவை பேலே விவரிக்கப்பட்டன.

அணைக்களம்‌, ஓர்‌ அணையை அமைக்க முயலும்‌ போது முதற்கண்‌ கவனிக்க வேண்டியது, தகுந்த இடத்தைக்‌ தேர்ந்தெடுக்கக்‌ கருத வேண்டிய கூறுகள்‌ ஆகும்‌.

1. இயற்கை அமைப்பில்‌ ஆற்றின்‌ இரு மருங்கிலும்‌ மேடான பகுஇகள்‌ இருப்பின்‌ அணையின்‌ நீளமும்‌ பருமனும்‌ குறைவாசு அமையும்‌; செலலினமும்‌ குறை யும்‌.

2, தேர்தெடுத்த இடத்தில்‌ அணைக்குக்‌ கடைக்கால்‌ அமைக்கத்‌ தகுதியாகப்‌ பாறை மிகுந்த ஆழத்தில்‌ இல்‌ லாமல்‌ மேலேயே கிடைத்தால்‌ அணையின்‌ மொத்த உயரம்‌ குறையும்‌. அதற்கேற்பப்‌ பருமனும்‌ மூறைந்து செலவினம்‌ குறையும்‌. துளையிடும்‌ கருவிகளைக்‌ கொண்டு பூமியை ஆங்காங்கே துளைத்து ஆழகுதில்‌ கிடைக்கும்‌ மண்‌ பாறைவகைகளை மேற்கொணர்ந்து ஆராய்ந்தால்‌ தகுதியாகக்‌ கடைக்கால்‌ எங்கு அமையும்‌ என்பதை ஓரளவு அறியலாம்‌,

5, தேர்தெடுத்த இடத்தில்‌ ஆற்றில்‌ தேக்சி வைக்கப்‌ போதிய நீர்‌ கிடைச்சு வேண்டும்‌. பல ஆண்டுகளாக அவ்விடத்தில்‌ பாய்ந்த நீரின்‌ அளவுகளை ஆராய்ந்து மழைக்‌ காலங்களில்‌ எவ்வளவு நீர்‌ தோராயமாகக்‌ இடைக்கும்‌, எவ்வெப்போது இடைக்கும்‌ என்று ஓரளவு அறியலாம்‌.

4. தேர்ந்தெடுத்த இடத்திற்கு மேல்‌ ஆற்றுப் படுகையின்‌ அமைப்பு நீரைத்‌ தேக்கி, உயாத்தும் போது மேல்‌ மட்டத்தில்‌ அலகு ஆழத்துக்கு நிறையக்‌ கொள்ளளவு பெறும்‌ வகையில்‌ இருத்தல்‌ நலம்‌. பூமியின்‌ மட்ட அளவுகளை நெருக்கமாசு ஆங்காங்கே குறித்துச்‌ சம உயரக்‌ கோடுகளை (Contours) வரைந்து கொள்ளவு