744 அத்திப் பூச்சிகள்
ASH (Ficus racemosa L.) 1, மிலார்; 3, மஞ்சசிக் கொத்து; 8.
5, சூலகம்; 6. அத்திப் பூச்சிகள் இந்தியாவில் அத்தி இனத்தைச் சேர்ந்த ஆலமரம். அரசமரம், பேய் அத்து போன்ற பலவகை மரங்கள் அதிக அளவில் சாணப்படுகின்றன. நம் தேவைக் கான அத்திப் பழங்கள் பொதுவாக வட இந்தி யாவில் இருந்தும், ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் உலர்ந்த அத்திப் பழங்களாக வருகின்றன. தென் இந்தியாவில் அரிதாக உள்ள அத்திப்பழ மரங்களைத் தாக்கும் பூச்சிகளும், சிலந்தகளும் பல உள்ளன, அத்இப் பூச்சிகள் (1712 1௦6018) அத். திமரங்களுச்கு அதிக அளவில் சேதம் விளைவிக்கின் றன.
1, தண்டு, கிளைகள் இவற்றைத் தாக்கும் பூச்சிகள் {Stem borers):
(௮) ஒலினிகேம்ப்டஸ் பைலோபஸ் (0912050810 0109 bilobus) என்பது நீண்ட உணர்கொம்புகளையுடைய வண்டு இனத்தைச் (99165) சேர்த்தது. இதன் உணர் கொம்புகளின் நீளம் இதன் உடலின் நீளத்தைப் போல் இரு மடங்குக்கும் அதிகமாக இருக்கும். வெளிர் பழுப்பு நிறமுள்ள இவ்வண்டுகள் மரங்களின் பட்டை மீது இவற்றின் வெள்ளை நி௰ மூட்டைகளைச் செருகி இடு இன்றன. இம்முட்டைகள், பொரித்து, வெண்ணிற, கால்களற்ற புழுக்கள் வெளிவந்து, தண்டைத் துளைத்து உண்டு வளர்கின்றன. ஏறத்தாழ எட்டு மாத காலம் புழுப்பருவத்தில் வளர்ந்து, பின் தண்டுத்
மஞ்சரியின் தீள் வெட்டுத் தோற்றம்; &. மகரத்தத் தாள்கள்: மலட்டுச் சூலகம்; 7.
மலர்கள் .
துளைகளினுள் கூட்டுப்புழுவாக (0௨) மாறுகின்றன, இக்கூட்டுப்புழுக்கள் '*எக்சாரெட் பியூப்பா** (1%875(6 pupa) என்ற வகையைச் சேர்ந்தவை. இவற்றில் வளர்ந்த பூச்சியில் காணப்படும் தலை, கால்கள், உணர் கொம்புகள் ஆகியவை இறக்சைகள் வளரும் திலையில் வெளியிலேயே காணப்படும். கூட்டுப்புழுப் பருவத்தில் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் கடந்த பின் வளர்ச்சி யடைந்த வண்டுகள் தண்டுத்துளைகளின்று வெளிப்படு கின்றன. இவற்றின் ஆணும், பெண்ணும் இணைந்த பின், பெண் வண்டுகள் முட்டைகளை இடத்தொடங்கு இன்றன. வளர்ந்த வண்டுகள் தலிர் இலைசுளைத் இன்று வாழும், இப்பூச்சிகளின் புழுப்பருவத்தில் தாவரங்களுக்கு ஏற்படும் சேதம் மிகுதியானது. துளைச் கப்பட்ட தண்டுகள் காய்ந்து, சில நேரங்களில் முழு மரமே பட்டுப்போக வாய்ப்பு ஏற்படுகிறது.
ச... இலைகளையும் மொட்டுகளையும் தாக்கும் பூச்சிகள்
அத்திமரத்தின் இலைகளைப் பல வகையான பூச்சி கள் அரித்துத் இன்றும், சாற்றை உறிஞ்சிக் குடித்தும் சேதம் விளைவிக்கின்றன.
அ) பட்டுப்பூச்சி - ஓசினேர வேரியன்ஸ் (Ocinara varians)
இந்த அந்துப் பூச்சியின (Moth) வெண்ணிறப் புழுக்கள் இலைகளை அரித்து உண்டு வளர்ந்து, கூட்டுப் புழுவாக மாறுமுன் கூடுகள் கட்டும்.