உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

46 அகம்‌ ஊட்டுதல்‌, சுருணைகளின்‌

டல்‌ தொட்டிக்குக்‌ கொண்டு செல்லப்படுகின்றன. தொட்டியின்‌ அடிப்பகுதிகளில்‌ உள்ள துளைகளுடன்‌ இந்தக்‌ குழாய்கள்‌ இணைத்துள்ளதால்‌ தெறிக்காமல்‌ தொட்டி நிரம்புகிறது. ஒவ்வொரு தோய்ப்புத்‌ தொட்டியின்‌ குழைவணம்‌ அல்லது கரைப்பானிலிருந்தும்‌ ஒரு காற்று வெளியேற்றக்‌ குழாய்‌ மேலெமழும்பிக்‌ கூரைக்கு மேல்பக்கம்‌ கொண்டு போய்‌, சூழ்வெளியில்‌ விடப்படுகின்றது. தொட்டியில்‌ தீப்பற்றினால்‌ அது வெளியேறாமல்‌ இருக்கக்‌ குழாயின்‌ வெளிப்பக்கம்‌ வலைகளால்‌ மூடப்படுகின்றது. குழைவணத்தை ஒரு துருத்தியிலிருந்து வெளியேற்றும்‌ காற்றால்‌ நன்றாகக்‌ கலக்கலாம்‌.

பேரளவு உற்பத்தியில்‌ அகமூட்டல்‌ செயல்முறைகள்‌ முற்றிலும்‌ தன்னியக்கப்படுத்தப்படுகின்‌றன.

படம்‌-1, பெரும்‌ பொறியியல்‌ பணியகங்களில்‌ பயன்படும்‌ தன்னியக்கப்‌ படுத்தப்பட்ட அகமூட்டல்‌ கொட்டியின்‌ வகை ஒன்றைக்‌ காட்டுகிறது.

தொட்டி 1 என்ற எஃகுக்‌ கோணச்‌ சட்டத்தில்‌ அடிப்‌பகுதியும்‌ சுவர்களும்‌ உள்ளன. மூடி 2 காற்றினால்‌ திறந்து மூடக்கூடியதாகும்‌. ஓவ்வொரு மின்னகமும்‌ 3 என்ற பொருத்தப்பட்ட நிலைமேடையில்‌ வைக்கப்‌படும்‌. இந்த நிலைமேடை 4 என்ற காற்று உருளையில்‌ மேலும்‌ கீழும்‌ இறக்கி ஏற்றப்படுகிறது. தொட்டியில்‌ மின்னகம்‌ மூடித்‌ திறக்கப்பட்டதும்‌ நிலைமேடை மீது கிடைமட்டமாக வைக்கப்படுகிறது. 6 என்ற செம்‌


பாலான நிறுத்தத்‌ தட்டின்மேல்‌ அச்சின்‌. முனை தங்கும்‌ படி ஒவ்வொரு மின்னகமும்‌ ஓந்தியால்‌ (crane) கீழே இறக்கப்பட்டு 5 என்ற கோணவடிவுடைய தாங்கும்‌ உருளைகள்‌ மேல்‌ வைக்கப்படும்‌. பின்பு நிலைமேடை மின்னகம்‌ தொட்டிக்கு 40” கோணத்தில்‌ அமையும்படி சரிவாகத் திருப்பப்படும். இந்நிலையில்‌ அகமூட்டலின்‌ போது குழைவணம்‌ முற்றிலும்‌ வாட்டமாக உள்நுழைய முடிகிறது. இப்போது தொட்டியின்‌ மூடி மூடப்படுகிறது. தேக்கத்‌ தொட்டி ஒன்றிலிருந்து குழைவணம்‌ தொட்டியில்‌ ஏற்றப்படுகிறது. அகமூட்டலுக்காக ஒதுக்கப்பட்ட நேரம்‌ முடித்ததும்‌ குழைவணம்‌ தொட்டியிலிருந்து இறக்கப்பட்டு அதன்‌ மூடி திறக்கப்படும்‌. மின்னகத்தைக்‌ கிடைமட்டமாக அமையும்படி உயர்த்தி எஞ்சியுள்ள குழைவணம்‌ வழிய விடப்படும்‌, பின்பு இயக்காளர்‌ மின்னகத்தைத்‌ துடைப்பு நிலையத்துக்குக்‌ கொண்டு செல்வார்‌. இங்கு மின்னகம்‌ உருளைகளின்‌ மேல்‌ உருட்டப்பட்டு, உலோகப்‌ பகுதிகள்‌ வெண்‌ சாராயக்‌ சுரைப்பானால்‌ துடைப்பிகளைக்‌ கொண்டு துடைக்கப்படுகின்றன.

அகமூட்டல்‌ முடிந்ததும்‌ மின்னகம்‌ மின்காற்றடுப்புகள்‌ உள்ள உலர்த்தும்‌ அறையில்‌ ஒரு சக்கரப்‌ பெட்டியில்‌ வைத்து உருட்டப்படுகிறது. மின்‌ காற்றடுப்புகளில்‌ மூடிய சுற்றுவழி வாயிலாக வெப்பக்‌ காற்றுதொடர்ந்து சுற்றுவிக்கப்படுகிறது. முதல்‌ 90 நிமிட உலர்‌ நேரத்‌தில்‌ 10% சுழற்சிக்‌ காற்றை வெளியேற்றி, ஆவியாகும்‌ கரைப்பான்கள்‌ வெளியேறவழிவகை செய்யப்படுகிறது. உலர்‌ அறைகள்‌ மையக்‌ கட்டுப்பாட்டுப்‌ பலகையிலிகுந்து

படம்‌ 2. அகம்ஊட்டி உலர்த்தும்‌ சுமத்துசெல்லியின்‌ அமைப்புத்‌ தோற்றம்‌