அந்தமான் கடல் 837
இயல் மருத்துவரையோ நாடி, வேண்டிய சோதனை சுளின் வாயிலாகக் காரணம் கண்டு சிசிச்சை பெறல் தலம்.
எஸ். இல்.
நூலோதி
i. Duke Elder’s ‘‘System of Opthalmelogy’’. Henry Kimpton, London. 1 Edition, 1944,
2. Robinson, D.. Harely., ‘Paediatric Opthal- mology'’, W-B. Saunders Co., London, I Edi- tion, 1965.
3, Troutman, Converse & Smith, Pisstic & Reconstructive Surgery of the Eye & Adnexa, Saunders Co-, London, I Edition, 1964,
அந்தமான் கடல்
இந்தியப்பெருங்கடலின் வட கிழக்கே சுமார் 298,000 ego கி.மீ. பரப்புடைய பகுதி அத்தமான் கடல் (Andaman sea) எனப்படும், அந்தமான் தீவுகள் இப் பகுதியில் உள்ளதால் இக்கடல் இப்பெயரைப் பெற்றது இது வடக்கில் பர்மாவிலுள்ள ஐராவதி கழிமுகத் தாலும், (ரகு 06118) இழக்கில் பர்மா தீபகற்பம், தாய்லாந்து, மலேசியா ஆகியவற்றாலும், மேற்கில் அந்தமான் தீவுகளாலும், தெற்கில் சுமத்ரா Bou gy சூழப்பட்டுள்ளது. இக்கடல் பரப்பில் சுமார் 5 விழுக் சாடே 4800 இ.மீ.க்கும் அதிகமான ஆழமுடையது. இக்கடலின் பெரும ஆழம் 4,820 மீ. அந்தமான்- நிக்கோபார் ஆழ்கடல் மலைமுசுட்டிற்குக் இழக்கேயுள்ள பள்ளத்தாக்குப் பகுதியில் காணப்படுகிறது. அந்த மான் இவுசளுக்கும் நிக்கோபார் இீவுகளுக்குமிடை, யிலுள்ள! 0அகலாங்கு அகலமுள்ள கால்வாய்அந்தமான் கடலை வங்காள விரிகுடாவுடன் இணைக்கிறது. பர்மாவிற்கும் மற்றைய நாடுகளுக்குமிடையே உள்ள கடல் தொடர்புக்கு இக்கடல் மிக முக்கியமானது. இந்தியாவுக்கும், சீனாவிற்கும் இடையே 48ஆம் நூற் றாண்டு முதல் வணிகக் கப்பல்களின் போக்குவரத்து இக்கடல் வழியாக நடைபெற்றது.
அந்தமான் கடல் நீர் மூன்று பகுதிகளைக் கொண்ட வெப்பச் சரிவு மண்டலத்தைப் பெற்றுள்ளது. இதன் 70-100 மீ, ஆழம் வரையுள்ள மேற்பரப்பு நீரின் வெப்பம் 84-29? செலிசியஸ், இங்கு பருவத்திகேற்ப உப்புத்தன்மை மாறுபடுகிறது. நடுப்பரப்புநீர் சுமார் 500 மீ. ஆழமுடையதாசவும், 35%, உப்புத்தன்மை யுடையதாகவும், மீட்டர் ஒன்றுக்கு ஒரு செலிசியஸ் வெப்பம் குறைவுள்ளதாசவும் காணப்படுகின்றது. இதற்குக் &ழுள்ள நீர் 47, செலிசியஸ் வெப்பமும், 34.86), உப்புத் தன்மையும் கொண்டுள்ளது.
அந்தமான் கடல் 837
அந்தமான்-நிக்கோபார் இவுகளுக்கருகில் முருகைப் பாறைகளும், இட்டுப் பகுதிகளில் மெல்லுடலிகளும் பரவலாகக் காணப்படுகின்றன. இக்கடற் படுகையில் சனிவளம் குறைவாகவே உள்ளது. பா்மிய கடற்பகுதி யில் எண்ணெயும், மலேய கடற்பகுதியில் வெள்ளீய மும், இல்மனைட்டும் இடைக்கின் றன,
ட
அந்தரத் தாமரை
இது நிம்ஃபாய்டிஸ் ஹைட்ரோஃபில்லா (111/01ம1085 hydrophylla (Lour.) Kuntze = (Limmanthemum cristatum) (Roxb.) Griseb.) என்று தாவரவியலில் அழைக்கப்படுகன்றது. இது அல்லி இணைந்த (கோம- petalae) இருவிதையிலைக் குடும்பங்களில் ஒன்றான மெனியாந்தேரியைச் (4931௬3௦௦௧6) சார்ந்தது. இது எல்லாச். சமவெளிப்பகுதியிலுள்ள நன்னீர்க்குளம்ஃ குட்டைகளில் சாதாரணமாகக் காணப்படுகின்றது.
சிறப்புப் பண்புகள்: இதன் தண்டின் சணுக்களிலிருந்து வேர்கள் வளர்கின்றன. இலைகள் மிதந்து கொண்டி ருக்கும்; இவை அடுத்தடுத்து நெருக்கமாக அமைந்திருப் பதால், தண்டுப்பகுதி வெளிப்படையாகத் தெரியாமல் இலைக்காம்பு (2௦௦/௦) போல் தோற்றமளிக்கும்; இலை கள் வட்ட (&௦(பாம்) அல்லது இருதய (ோச்க2) வடிவ மானவை; தழ்ப்பரப்பு ஊதா நிறத்துடனிருக்கும், இலைகள் 5--10 செ.மீ, விட்டமுள்ளவை, மலர்கள் வெண்ணிறமானவை. சூலகமேல் மட்டம் (1]ற0ஜு- 0௦05) உடையவை. ஆரச்சமச்சீரானவை (௦(11௦௦1- நல். இவற்றின் உட்புறம் மஞ்சள் நிறமாக இருக்கும். இவை கொத்தாகக் காணப்படும். ஒவ்வோர் அல்லி இதழும் ஏறக்குறைய 2 செ.மீ. அகலத்துடன், நடுவில் நீளப்போக்கில் மடிப்பைப் (11014) பெற்றிருக்கும், மகரந்தத்தாள்கள் 5 உள்ளன. இவற்றின் அடியில் சுரப் பிகள் உண்டு. சூற்பை ஓர் அறை கொண்டது. சூல்கள் சுவரொட்டிய சூலபமைவுடனிடுக்கும் மிகா102] ற1௮0014- tion). சுனிகள் காப்சூல் (கேர£ய/௪) வகையைச் சார்ந் தவை, முட்டை வடிவுடனோ ஏறக்குறைய உருண்டை யாசுவோ இருக்கும். விதைகள் 7—10 இருக்கும், இவை சற்றுப் பெரியனவயாய் இருக்கும். விதை உறை Am முடிச்சுகளைப் பெற்றிருக்கும். இது விதைகள் மூலமும், செடி துண்டு படுதல் மூலமும் பரவுகின்றது. கோடை காலங்களில் மலரக்கூடியது.
பொருளாதாரச் சிறப்பு : இது காய்ச்சலுக்கும், மஞ்சள் காமாலைக்கும் (Jaundice) மருந்தாகப் பயன்படுகின்றது. இலைகளை, எண்ணெயில் அரைத்து வயிற்றுப் புண்ணுக்கும், பூச்சி கடிக்கும் மருந்தாகக் கொடுப்பார்கள். விதைகள் குடற்புழுக் கொல்லியாகப் (Antihelminthic) பயன்படுகின்றன. இச்செடியின் இலைகளைச் சமைத்துச் சாப்பிடலாம்.
இரா.௮.