அம்மீட்டர் 879
இவ்வகை அளவியில் கம்பிச்சுருளின் அச்சுக்கு இணை யாக. மணித்தாங்கி பொருத்தப்பட்டுள்ள சுவரில் ஒரு நிலையான இரும்பு உள்ளது. மணித்தாங்கியில் பொருத்தியுள்ள அச்சுத்தண்டுடன் குறுகிய ஆரக்கை யில் ஓர் இயங்கும் இரும்பு பிணைக்கப்பட்டுள்ளது. இயங்கும் இரும்பு நிலையான இரும்புக்கு இணையாக உள்ளது. சுருளில் மின்னோட்டம் இல்லாதபோது இயங்கும் இரும்பும், நிலையான இரும்பும் நெருக்கமாக அரு கருகே இருக்கின்றன. ஆனால் மின்னோட்டம் செலுத் தப்படும்போது இவ்விரும்புகள் ஒத்த காந்தத்தன்மை யடைவதால், இயங்கு இரும்பு விலக்கித் தள்ளப்படு கிறது. அச்சுத்தண்டுடன் இணைக்கப்பட்டுள்ள குறி முள் அளவுகோலின் மீது நகர்ந்து மின்னோட்ட அளவைக் காட்டுகிறது. இயக்கும் விசையை மின்னோட்டமும். கட்டுப் படுத்தும் விசையை வில்சுருள்களும், ஒடுக்கும் விசையை ஒடுக்கும் அறையிலுள்ள காற்றும் அளிக்கின்றன. இழுப்பும் விலக்கும் கலந்த வகை. தாங்கி பொருத் தப்பட்டுள்ள குழாய் வடிவ அறையில் ஒரு குறுகிய விலக்கும் இரும்பு உள்ளது. எதிர்ப்பக்கத்தில் ஒன்றன் முனையில் ஒன்று இருக்குமாறும், இடையில் இடை வெளி உள்ளவாறும் இரண்டு இழுப்புத் துண்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. சுருளின் அச்சுடன் குறுகிய ஆரக்கையில் குட்டையான இயங்கும் இரும்பு இணைக் கப்பட்டுள்ளது. படம் 7. இழுப்பும் விலக்கும் கலந்தவகை மின்னோட்ட அளவி சுருளின் மின்னோட்டம் இல்லாதபோது இயங்கும் இரும்பு விலக்கும் இரும்புக்கு அருகில் இணையாக இருக்கும். மின்னோட்டம் செலுத்தப்படும்போது முதலில் விலக்க வகை அளவியைப் போல் செயல் புரிந்து இயங்கும் இரும்பை விலக்கித் தள்ளுகிறது. இதனால் இயங்கும் இரும்பு இழுப்பு இரும்புகட்கு இடை யிலுள்ள காந்தப்புலத்தின் ஆளுகைக்குள் வந்துவிடு வதால் பின்னர் இழுப்புவகை அளவிபோல் செயல்படு கிறது. இவ்வாறு விளக்க விசையும், தொடர்ந்து இழுப்பு விசையும் கிடைப்பதால் மின்னோட்டத்திற் . அம்மீட்டர் 879 கேற்பச் சீரான இயக்கமும், அதனால் ஒரு சீரான அளவு கோலும் கிடைக்கின்றன. பொதுவாக இயங்கும் இரும்புவகை அளவிகளில் கிடைக்கும் திருக்கம் (Torque) இயங்குசுருள் வகைகளில் கிடைக்கும் திருக்கத்தைவிடக் குறைந்த அளவுடைய தாகும். பிழைகள். மெல்லிரும்பு வகை அளவிகளில் உராய்வு சூடாதல் சூழ் காந்தப்புலம், காந்தத் தயக்கம் (Hysteresis) இருப்பு (Position), அலைவெண், தூண்டு கை (Impulse), சுழிப்பு மின்னோட்டம் (Eddy current), அலைவடிவம் ஆகியவற்றால் அளவீட்டில் பிழைகள் ஏற்படுகின்றன. அலைவெண் பிழை, அலைவடிவப் பிழைகள் நேர்மின்னோட்ட அளவிகளைப் பாதிப்ப தில்லை. விசிப்புப்பட்டை வகை அளவிகள் இயங்குசுருள் வகை யையும், முனைவுற்ற இதழ்வகை இயங்கு இரும்புவகை யையும் பின்பற்றி இயங்கும் எளிய அளவிகளாகும். மின்னியக்க வகை. மின்னியக்க வகை (Electrody- namic type) அளவிகள் செந்தர (Standard) அளவி களாகத் துல்லியமாக அளக்கப் பயன்படுகின்றன. இயங்கும் சுருளுக்குப் பாதரசத் தொட்டிகள் வழியாக மின்னோட்டம் செலுத்தப்படுகிறது, இயங்கும்சுருள் ஒரே ஒரு சுற்று கொண்டுள்ளது. நிலைச்சுருள் பல சுற்றுகளைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் தொடர்நிலையில் (Series) இணைக்கப்பட்டுள்ளன. மின்னோட்டம் செலுத்தப்படும்போது இயங்கும் சுருள் அசைந்து, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள குறி முள்ளால் மின்னோட்ட அளவைக் காட்டுகிறது. இயங்குசுருள் மின்னோட்டம் இல்லாதபோது முறுக்கத் தலையின் (Torsion head) மூலம் திரும்பவும் பழைய நிலைக்கே கொண்டுவரப்படுவதால். திருக்கமானது எப்போதும் மின்னோட்டத்தின் இருபடிக்கு (வர்க்கத் திற்கு) நேர்விகிதத்தில் உள்ளது. Ta 12 மின்னோட்டம். இதில். T = திருக்கம்; I எனவே இவ்வகை அளவிகளின் அளவிடும் இடைவெளி (Scale range) மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் அந்தக் குறைந்த அளவு மின்னோட்டத்தைத் துல்லிய மாக அளக்கிறது. இவ்வகை அளவிகளில் காந்தத் தயக்கம். காந்த வலிமை மாற்றம் ஆகியவற்றால் எந்தவிதப் பிழை களும் ஏற்படுவதில்லை. எனவே இவை செந்தர அள (Standard meters) பயன்படுத்தப்படு விகளாகப் கின்றன. இருப்பினும், எழுவில்லின் (Helical spring) விசை திருக்கத்துக்கு எப்போதுமே நேர்விகிதத்தில் இருக்க இயலாமையாலும், வெப்பநிலைக்கேற்ப எழுவில்லின் மீட்சிமை (Elasticity) மாற்றமடைவதாலும் சுழிப்பு