உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/921

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை நோய்‌ 885

வேறு வகை உறுப்புகளான மண்ணீரல், கல்லீரல், நிண நீர்ச்சுரப்பிகள் ஆகியவற்றை அடைகின்றன. இங்குப் பெருகிய அதி நுண்ணுயிர்கள் மறுமுறை இரத்தக் குழாய்கள் மூலம் தோலை அடைந்து, அம்மை முத்துக் களைத் தோற்றுவிக்கின்றன; இத்துடன் மற்ற உள் ளுறுப்புகளிலும் நோய்க் குறியியல் மாற்றங்களை ஏற் படுத்துகின்றன. தோலில் காணப்படும் தந்துகிகள் விரி வடைகின்றன. அதன் உள் பரப்பில் காணப்படும் உள் தோலுறையில் உயிரணுக்கள் பல்கிப் பெருகுகின்றன; தந்துகிகளைச் சுற்றியுள்ள நிண அணுக்களை ஊடுருவு கின்றன. தோலின் வெளி அடுக்கு (Epithelium) உப்பி அம்மை முத்துக்களுக்கு முதல் படியாக அமைகிறது. இவ்வுயிரணுக்களில் உட்கருவின் அருகே அதி நுண் ணுயிர்கள் தொகுப்பாகக் காணப்படும். இந்த மூல உறுப்புகள் குவார்நெரி உறுப்புகள் (Guarnieri bodies) என அழைக்கப்படும். அம்மை கடுமையாகத் தோன்றும் பொழுது உயிரணுவின் உட்கருவிலும் குவார்நெரி உறுப்புகள் காணப்படலாம். இவ்வாறு உப்பிய உயி ரணுக்கள் சிதைந்து கொப்புளம் உண்டாகிறது. அணுக் களின் இடைச்சுவர் கொப்புளத்தின் தடுப்பாகின்றது. கொப்புளத்தின் நடுவில் வியர்வை நாளம் ஒரு திண்மை யான தடுப்பாக மாறலாம். இக்கொப்புளங்களுக்கு அடியில் காணப்படும் உயிரணுக்களும் அழிகின்றன. கொப்புளத்தின் நடுலில் மயிர்க்கால் ஒரு தொப்புளைப் போன்ற தோற்றத்தை உண்டாக்குகின்றது. அம்மை முத்துக்கள் ஆறும்பொழுது முகத்தைத் தவிர மற்ற பாகங்களில் சாதாரணமாக வடு ஏற்படுவதில்லை. எண்ணெய்ச் சுரப்பிகள் அதிகமுள்ளதால் முகத்தில் அவை அழுகி, நிரந்தர வடுக்களை ஏற்படுத்துகின்றன. உடலின் மற்ற பாகங்களில் இரண்டாம் பட்சத்தொற்று நோய் ஏற்படும் பொழுதும் நிலையான வடுக்கள் ஏற் படுகின்றன. தோலில் தோன்றும் முத்துக்களைப் புற அரும்புகள் எனவும், தொண்டை, குடல் போன்ற வற்றைப் போர்த்தியிருக்கும் சளிப்படலங்களில் தோன்றும் அரும்புகளை அக அரும்புகள் எனவும் அழைப்பர். உடலின் உள்ளுறுப்புகளான சிறுநீரகம், 885 அம்மை நோய் விந்தகம், எலும்பின் உட்சோறு ஆகியவற்றிலும் இந் நோயின் பாதிப்பைக் காணலாம். நோயின் குணங்குறிகள் அதி நுண்ணுயிரின் வீரியத்தையும், உடலின் காப்புத் திறனையும் பொறுத்து நோயின் குணங்குறிகள் தோன்று கின்றன. முன்னரே பெரியம்மை கண்ட வர்களுக்கும். அம்மை குத்தியவர்களுக்கும் காப்புத்திறன் தேவையான அளவு அமைந்திருப்பதால் அவர்களுக்கு வெகு அரிதாசுவே நோய் உண்டாகிறது. நோய் ஏற்பட் டாலும் மிக மிதமான குறிகளே தோன்றுகின்றன. இதனால் இதைப் பெரியம்மை என இனங்காணத் தவறிவிடக்கூடும். இவர்கள் மற்றவர்களுக்குக் கடும் நோயைப் பரப்பும் கருவியாகிவிடுகிறார்கள். பெரியம் மைக்கு அடைவுக்காலம் பொதுவாக 12 இலிருந்து 14 நாட்களாகும். அம்மை குத்திக்கொண்டவர்களுக்கு 21 நாட்கள் கூட ஆகலாம். எந்த வயதிலும் இந்நோய் ஏற்படலாம். தாய்க்கு நல்ல காப்புத்திறன் இருந்தால். பிறந்த குழந்தைக்குச் சாதாரணமாக முதல் ஆறு மாதம் பெரியம்மை ஏற்படுவதில்லை. திடீரென வலி, முதுகு வலி, குளிர்காய்ச்சல் போன்ற குணங்குறிகளு டனும் தீவிர நச்சுத் தன்மையுடனும் தொடங்கும். குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, தூக்கக் கலக்கம், இசிவு போன்றவையும் தோன்றலாம். சன்னி ஏற்பட்டு உடல்நிலை மோசமாகிவிடலாம். முதலிரண்டு நாட்களில் தற்காலிகமாக சிறு தடிப்புகள் புட்டத்தி லும் தொடையிலும் ஏற்படுகின்றன. இது "நீச்சலுடை தோல் அரும்பு + எனப்படுகிறது. மூன்றாம் அல்லது நான்காம் நாளிலிருந்து பெரியம்மைக்கே உரிய அரும்பு கள் முகிழ்க்கின்றன. பெரியம்மையில் தோல் அரும்பு கள் கூட்டம் கூட்டமாக ஒரே பருவ வளர்ச்சி உடைய வையாகத் தோன்றுகின்றன. சிறுசிறு செந்திட்டுகள் போன்ற முதல் கட்ட அரும்புகள் உடலில் தோன்றும் பொழுது காய்ச்சல் போன்ற நச்சுக் குணங்கள் குறை கின்றன. இருபத்து நான்கு மணி நேரத்தில் தடிப்புகள் நடுவில் சற்று உயர்ந்து, சவ்வரிசி போன்ற பருவாகிப் 9 படம் 1. பெரியள் மை கொப்புளங்கள் தனித்தனியாக மார்பிலும், கை, கால்களிலும் முகத்திலும் காணப்படும்.