அம்மை நோய் 887
அம்மை குத்தல் (Small pox vaccination) : பெரியம்மை நோயின் கொடுமையிலிருந்து மனிதர் களைக் காப்பாற்றவும், பெரியம்மை பரவுவதைத் தடுக் கவும் 250 ஆண்டுகளுக்கு முன்னர் அம்மைக் கொப் புளங்களிலிருந்து சிறிது சீழை எடுத்து மற்றவர்கள் உடலில் ஏற்றி வந்தனர். இதன் பிறகு ஆய்வுக்கூடங் களில், கால்நடைகளில் பெரியம்மை நோயைப் பரப்பி அவற்றிற்கேற்படும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து அம்மைத் தடுப்புப் பால் (Vaccinia virus/pox virus fificinals) தயாரித்து அதை மனிதர் களுக்குக் குத்தி வந்தனர். இவ்வகை அம்மைப்பால் நீர்ம நிலையில் இருந்ததால் எளிதில் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல இயலவில்லை. அப்படி எடுத்துச் சென்றாலும் கெட் இவற்றின் வீரியத்தன்மை டுத் தடுப்பு ஆற்றலை உண்டாக்கவில்லை. எளிதில் கை யாளக் கூடிய வீரியம் கெடாத ஒரு அம்மைப்பாலைத் தயாரிக்க அறிவியலறிஞர்கள் முயன்றனர். இதன் பயனாக 1798 இல் எட்வர்டு ஜென்னர் என்பவர் வேக் சீனியா அதி நுண்ணுயிர்களுக்குப் பதில் பாக்ஸ் வைரஸ் போவைன் (Pox virus bovine) எனப்படும் பசு அம்மை யிலிருந்து அம்மைத் தடுப்பு நோய்க்கான, தற்போது பயன்படுத்தப்படும் அம்மைப்பாலை, உறை உலர் வடிவில் (Freeze dried vaccine) தயாரித்து அம்மை ஒழிப்பு, அம்மை தடுப்பு முயற்சிகளில் மெச்சத் தகுந்த சாதனையை ஏற்படுத்தினார். அறிவியலறிஞர்கள் குத்தும் முறை: பழைய நீர்ம நிலையில் தயாரிக்கப்பட்ட அம்மைப் பாலைத் திருகு முறையில் மேற்கையிலோ அல்லது முன்கையிலோ குத்தி வந்தனர். நவீன உறை உலர் அம்மைப்பாலை பல்முனைக்கீறல் முறையில் (Multiple scratch method) முன் கையின் தோலில் ஊசியால் கீறிச் சிறிது அம்மைப் பாலைத் தொட்டுவைத்துவிட வேண்டும். இச்சிறிய அளவே உடலில் அம்மை நோய்க்கான எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்துகின்றது. அம்மைப்பால் குத்தும் முன் கையாள வேண்டிய முற்காப்பு முறைகள் : 1) குத்தப்பட வேண்டிய இடம் நன்கு சுடு நீரால் சுத்தப்படுத்தப்பட வேண்டும். 2) அம்மை குத்திக் கொள்வோர் காய்ச்சல், தொற்று நோய்கள். தோல் நோய்கள் போன்ற நோய்கள் இல்லாதவராக இருக்க வேண்டும். அம்மைப்பால் குத்தியபின் ஏற்படும் எதிர்வினைகள் : வீங்கி முதல் நிலை எதிர்வினை : இருபத்து நான்கு மணி நேரத்தில் குத்தப்பட்ட இடம் சிவந்து, அங்குக் கொப்புளம் தோன்றும். இக்கொப்புளம் முத்து நிறத்தில் இருக்கும். இவ்வீக்கம் ஒன்பது அல்லது அம்மை நோய் 887 பத்தாம் நாள் உச்ச கட்டத்தையடைந்து பிறகு கொப் புளம் உடைந்து, அல்லது அமுங்கிவிடும். இக்காலங் களில் மிதமான காய்ச்சலோ, கடும் காய்ச்சலோ, தலை வலியுடன் கூடிய காய்ச்சலோ ஏற்படலாம். அம்மைப்பால் குத்தி இருபத்தொரு நாட்களில் குத்தப்பட்ட இடத்தில் எழுந்த கொப்புளங்கள். வீக்கம் எல்லாம் மறைந்து அவ்விடத்தில் பக்கு (Scap) ஏற்படும். சில நாட்களில் பக்கு உதிர்ந்து அவ்விடத்தில் குழிந்த ஊதாநிறத் தழும்பு உண்டாகும். சிலர் உடலில் அம்மைப்பால் குத்துவதால் எந்தவித எதிர்வினையும் ஏற்படாமலும் போகலாம். இந்நிலை. அம்மைப்பாலின் வீரியக் குறைவாலோ அல்லது அம்மை குத்திக் கொள்பவர்களின் உடலில் எதிர்ப்புத்தன்மை குறைந்ததாலோ ஏற்படலாம். அம்மைப் பால் குத்துவதால் ஏற்படும் சிக்கல்கள் ! அம்மை குத்துவதிலும் சில சிக்கல்கள் தோன்றலாம். கருவுற்றவர்களுக்குத் தவிர்க்க முடியாத காரணத்தால் அம்மை குத்தினால், குழந்தை உடலில் முத்துக்களுடன் பிறக்கலாம். சிலருக்கு உடல் முழுவதும் அம்மை முத்துக்கள் ஏற்படலாம். படரும் வாக்சீனியா அல்லது அழுகும் வாக்சீனியா என்பது மிகக் கொடிய சிக்கலான நோயாகும். பிறவியிலேயே காப்புகுளோபுளின் (Imm unoglobulin) குறைபாடு கொண்டிருக்கும். ஆகவே, அம்மைப்புண் ஆறாமல் திசுக்கள் அழுகிப் படர்ந்து கொண்டே இருக்கும். பெருமூளை அழற்சியினால் ஏற்படும் மூளைப் பாதிப்பு மிகக் கொடிய சிக்கலாகும். இரண்டு வயதிற்குமேல் அம்மை குத்தும்பொழுது இச் சிக்கல் அதிகம் ஏற்படுகிறது. இதனால் இசிவு, கடும் காய்ச்சல், நினைவுத் தடுமாற்றம், ஆழ்நிலை மயக்கம் போன்றவை தோன்றக்கூடும். உயிர் பிழைத்தால் சிலர் நரம்பியல் நசிவுக் குறிகளால் வாழ்நாள் முழு வதும் துன்புறுவார்கள். உலக சுகாதாரக் கழகத்தின் விடா முயற்சியினாலும், குளிரில் காய்ந்த உன்னதமான வாக்சீன்களினாலும் பெரியம்மை உலகத்திலிருந்து பெரும்பாலும் நீக்கப் பட்டு விட்டது. இதனால் பன்னாட்டு அம்மை குத்தும் முறை நிறுத்தப்பட்டாலும், அதி நுண்ணுயிரிகளைக் கையாள வேண்டிய மருத்துவர், ஆய்வாளர் போன்ற வர்களுக்கு அம்மை குத்துதல் அவசியமாகிறது. நூலோதி ஞா.இரா 1. Beson & McDermott, Text Book of Medicine. W.B. Saunders Company-Philadelphia, London, Toronto. 14th Edition-1975. 2. Oxford Text Book of Medicine. Edited by. D. J. Weatherall, J. G. G. Ledingham & D.A. Warrell, Oxford University Press-1983.
.