உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/935

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமாரில்லிடேசி 899

(Shrubs) குறைவு. இலைகள் தனித்தவை: மாற்று (Alternate) அல்லது எதிரமைவு (Opposite phyllotaxy) கொண்டவை; இலையடிச்சிதல்கள் (Stipules) இல்லை. மலர்கள் இருபாலானவை (Bisexual): சிலவற்றில் ஒரு பால் (Unisexual) மலர்களும் உண்டு; ஆரச்சமச் சீரானவை (Actinomorphic); ஒவ்வொரு மலருக்கும் சவ்வு போன்ற அல்லது மெல்லிய நிலைத்திருக்கக்கூடிய மலரடிச் சிதலுண்டு (Bract). இது போன்ற சிறு சிதல் கள் சோடியாக இருக்கும். மலர்கள் தனித்தோ, ஸ்பைக் (Spike) அல்லது ரெசிம் (Raceme மஞ்சரியிலோ காணப்படும். பூவிதழ் வட்டம் ஓர் அடுக்கில் (Perianth) 3-6 இதழ்களுடன் இருக்கும். முற்றிலும் இணையாம் வோ, சற்று இணைந்தோ உலர் தோற்றத்துடன் காணப்படும். மகரந்தத் தாள்கள் 5 உண்டு. வை இதழ்களுக்கு எதிர்ப்புறமாக அமைந்திருக்கும்; பெரும் பாலும் தாள்கள் இணைந்து குழல் போன்று அமைந் திருக்கும். ஒவ்வொரு மகரந்தப் பையும் 4 அல்லது 2 அறைகள் கொண்டது; சூற்பை 2-3 சூலக இலைகளி னால் ஆக்கப்பட்டு ஓர் அறையுடன், மேல்மட்டத்தில் அமைந்திருக்கும். சூல்கள் கேம்பைலோடிரோபஸ் Campylotropous) வகையைச் சார்ந்து, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டு அடித்தளச் சூல் அமைவுடன் (Basai placentation) காணப்படும். சூலகத்தண்டும். சூலகமுடிகளும் 1-3 வரை இருக்கும். இதன் கனி. மேல் பாதியில் பிரியக்கூடிய வெடிகனி (Circumscissile capsule) அல்லது சிறுகொட்டை (Nutlet) கனியாகும். கருமுளைசூழ் சதையைச் (Endosperm) சுற்றி வளைந்து காணப்படும். பொருளாதாரச் சிறப்பு: முள்ளுக்கீரை (Amaranthus spinosus), சீலோசியா அர்ஜண்டியா (Celosia argentea). அல்மானியா நோடிஃபுளோரா (Allmania nodiflora). நாயுருவி (Achyranthes aspera) ஆகியவை களைச் செடி களாக எங்குப் பார்த்தாலும் வளர்கின்றன. டிலாந்தீரா ஃபைக்காய்டிஸ் (Telanthera ficoides). சீலோசியா (Celosia spp.), காழ்ஃபீரினா (Gomphrena spp) ஆகிய வற்றின் சில சிற்றினங்கள் தோட்டங்களில் வளர்க்கப் படுகின்றன. தண்டுக்கீரை (Amaranthus tricolor: A. paniculatus), பொன்னாங்கண்ணிக்கீரை (Alternan thera triandra) ஆகியவை சமைத்து உண்ணப்படு கின்ற கீரைவகைகளாகும். பால் சுரத்தலை அதிகரிக்க முள்ளுக்கீரையைப் பயறு வகைகளுடன் கொதிக்க வைத்து மாடுகளுக்குக் கொடுப்பார்கள். நாயுருவியின் சாறு சிறுநீர்ப்போக்கியாகப் (Diuretic) பயன்படுகிறது. மேலும் இது சிறுநீரக மகோதரத்தை (Renal Dropsy) குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இதன் மஞ்சரி அல்லது விதைகளை அரைத்துப் பற்றுப் போட்டு பூச்சிக் கடியினால் ஏற்படும் நச்சு விளைவைப் போக்க முடியும். நூலோதி Gamble, J. S. Fl. Pres. Madras. Vol.II(Repr.) 815-826. 1956. 1.5. . அமாரில்லிடேசி 899 Lawrence. G.H.M. Taxonomy of Vascular plants. pp. 823, The Macmillan Co., New York, 1951. The Wealth of India. Vol.I pp. 254. CSIR publ., New Delhi, 1948. Willis, J.C. A Dictionary of Flowering Plants & Ferns (7th Ed. Revd. Airy Shaw. H.K.) pp. 1214. Cambridge University Press, London, 1966. அமாரில்லிடேசி ஒரு விதையிலைத் தாவரக் குடும்பங்களில் இது ஒன்றாகும். அமாரில்லிடேசி (Amaryllidaceae) குடும் பத்தில் 86 பேரினங்களும் (Genera), 1310 சிற்றினங் களும் (Species) இருக்கின்றன. இவை வெப்பமண்டலப் பகுதிகளிலும் (Tropics), மிதவெப்பமண்டலப் பகுதி களிலும் (Temperate regions) பரவியுள்ளன. னிந்தியாவில் இருக்கின்றன. தென் 5 பேரினங்களும் 9 சிற்றினங்களும் பல பொதுப்பண்புகள்: இவை பொதுவாக வறண்ட நிலத் தாவரங்கள் (Xerophytes). இத்தாவரங்கள் பொது வாக மட்டநிலத்தண்டு (Rhizome). தண்டடிக்கிழங்கு (Corm), குமிழ்த்தண்டுகளை (Bulbs) உடைய பருவச் செடிகளாகும். இலைகள் நீண்டோ, பட்டை போன்றோ, அரிவாள் போன்றோ இருக்கும். சில நார்களுடன் வலுவாக இருக்கும். இலைகள் வசந்த அல்லது மழைக் காலங்களில் மட்டும் தோன்றுகின்றன. மலர்கள் தனியாகவோ, ரெசிம் (Raceme). குடை மஞ்சரி (Umbel) அல்லது பேனிக்கிள் (Panicle) மஞ்சரி யாகவோ அமைந்திருக்கும். மலர்கள் இருபாலானவை (Bisexual), ஆரச்சமச்சீர் (Actinomorphic) அல்லது இருபக்கச் சமச்சீரானவை (Zygomorphic). பூவிதழ்கள் (Tepals) 3+3 ஆக இருவட்டங்களில் அமைந்திருக்கும். சிலவற்றில் வளரிவட்டம் (Corona) பேரினங்களைப் பொறுத்துப் பூவிதழ்கள், மகரந்தத் தாள்கள் ஆகிய வற்றிற்கிடையே வெவ்வேறு வடிவத்தில் அமைந் திருக்கும். மகரந்தத் தாள்கள் 3+3 என இரு வட்டங் களில் அமைந்திருக்கும். சூற்பை கீழ்மட்டத்திலிருக்கும் (Inferior), அது மூன்று அறைகளைக் கொண்டது. சூல்கள் (Ovules) அச்சுச்சூல் அமைவுடையவை (Axile placentation). கனி காப்சூல் (Capsule) அல்லது பொரி (Berry) வகையைச் சார்ந்தது. விதைகள் முளைசூழ் FMFUMLUDA (Endospermous).

பொருளாதாரச் சிறப்பு: ஏறக்குறைய இதன் 500 சிற்றினங்கள் அழகுத் தாவரங்களாக வளர்க்கப்படுகின்றன. நிலச்சம்பங்கி (Polyanthes tuberosa). விஷ மூங்கில் (Crinum asiaticum), பேன்கிரேஷியம் மேரி டைமம் (Pancratium maritimum), டாஃபடில்ஸ்