உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/938

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

902 அமில அமைடு

யூரியா : (NH2CONH2). யூரியா கார்பானிக் அமிலத்தின் ஈரமைடு. உடலியல் வினைகளின்படி இது ஒரு முக்கியமான சேர்மம். இது புரோட்டீன்கள் சிதைவின் இறுதிப் பொருள். இது. சிறுநீரில் காணப்படும். 1826இல் வோலர் (WÖhler) நிகழ்த்திய ஆய்வுகளில் முதன் முதலாக கனிமப் பொருள்களிலிருந்து ஆய்வுக் கூடத்தில் தயாரிக்கப்பட்ட முதல் கரிமப் பொருள் இதுவே என்பது இதன் வரலாற்று முக்கியத்துவம் ஆகும்.

யூரியா ஒரு சிறந்த உரமாகும். யூரியா ஃபார்மால்டிஹைடு, பிளாஸ்டிக், ஹைட்ரசீன், வெரோனால் (veronal) ஆகிய வேதியியற் பொருள்கள் தயாரிப்பில் இது பயன்படுகிறது. (காண்சு: அமில நீரிலிகள்; யூரியா : அமீன்கள்; அமில ஹாலைடு)
-கே.எஸ்.வா.

நூலோதி

1. Finar I.L., Organic Chemistry Vol. I. Sixth Edition, ELBS London, 1973.

2. McGraw-Hill Encyclopedia of Chemistry, Fifth Edition. McGraw-Hill Book Co. New York, 1983.