பக்கம்:அறிவியல் களஞ்சியம் 12.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

தீவு உயிரி நிலவியல்‌

பரவல்‌, தீவு புலனாகவில்லை. உயிரினங்களோ

உயிரினங்களின்‌ தீவுகளில்‌

பரவல்‌ நன்கு இப்போதுள்ள

,அவற்றின்‌ முன்னோடிகளோ

அந்தத்‌

தீவினை அடைந்தவிதம்‌ இதுவரை தெளிவாகவில்லை. பெருங்கடல்‌ தீவுகளில்‌ இப்போது காணப்படும்‌ உயிரினங்கள்‌ உள்ளமைக்கான வித்து, சிதல்‌,முட்டை முதலானவை காற்று, நீர்‌, பூச்சி, பறவை போன்ற விலங்குகளால்‌ கொண்டு சேர்க்கப்பட்டு, அங்கு அவை பலவாறாகப்‌ பெருகியிருக்கலாம்‌ என்னும்‌ கருத்து ஏற்புடையது. இப்போது ஆழமற்ற

மணல்‌

திட்டுகளையும்‌, சிறுசிறு நீர்க்குன்றுகளையும்‌ பெற்றுள்ள

தீவுகளின்‌ மூலமாகப்‌ பெரிய நிலப்பகுதியிலிருந்து வித்து, சிதல்‌, முட்டை முதலியவை இத்தீவுகளை அடைந்‌ திருக்கலாம்‌.

அமைப்பியல்‌

தனித்தன்மைகள்‌.

தீவு உயிரி

னங்களில்‌ சில குறிப்பிடத்தக்க, சரிவர அறியப்படாத பண்புகள்‌ உள்ளன.

எடூத்துக்காட்டாகச்‌

சிறுசெடியாக

உள்ள

தாவரங்களுள்‌ பேருருவத்‌ தன்மையும்‌, மர வளர்‌ உருவமும்‌

காணப்படுகின்றன. பறவாத்‌

இதேபோல்‌

தன்மையும்‌,

காணப்படுகின்றன.

பூச்சிகள்‌ பறவைகளில்‌

பேருருவத்‌ காலப்பேகாஸ்‌,

தன்மையும்‌ அல்டாப்ரா,

நியூசிலாந்தின்‌ மோவாஸ்‌ போன்ற தீவுகளில்‌ மிகப்பெரிய ஆமைகள்‌ உள்ளன. பல தீவுகளிலும்‌ ரோஜா போன்ற குவி அமைப்புடைய மரங்கள்‌ காணப்படுகின்றன. வெப்ப மண்டல

மலைகளிலும்‌

இத்தகைய பண்புகளைப்‌ பெற்ற உயிரினங்கள்‌ உள்ளன. பெருங்கடல்‌ தீவுகளில்‌ மேயும்‌ விலங்குகள்‌ இராமையினால்‌ அங்குள்ள சிறு செடிகள்‌ விலங்குகளினால்‌ மேயப்படாமலும்‌, மிதிக்கப்படாமலும்‌,

அவற்றிற்கு எதிர்ப்புத்‌ திறம்‌ பெற்ற அமைப்புகள்‌ அற்றுக்‌ காணப்படுகின்றன.

இத்தகைய

தீவுகளில்‌

உள்ள

தாவரங்களின்‌ பாதுகாப்பிற்கென இயல்பாகக்‌ காணப்படும்‌ சிறு

முள்களும்‌, பெரிய முள்களும்‌ அமைவதில்லை.

தீவுகளின்‌ தன்மைகளின்‌

படிமலர்ச்சி.

அமைப்பியல்‌

தோற்றமும்‌, இயல்பான

தனித்‌

வேறுபாடுகளுடன்‌

கூடிய உயிரினங்களும்‌ சுவையான தகவல்கள்‌ தருகின்றன. தீவுகள்‌ கரிமப்‌ படிமலர்ச்சிக்‌ கொள்கையை

வதற்குரிய நிலைக்களன்களாக

உருவாக்கு

விளங்குகின்றன; மற்றும்‌

தொடர்பற்ற படிமலர்ச்சிக்‌ கருத்துக்கான சான்றுகளும்‌ தீவு

உயிரினங்களின்‌ ஆய்வினால்‌ கிடைக்கின்றன. மரபியல்‌, இன வேறுபாடுகளைத்‌ தவிர, தீவு உயிரினங்கள்‌ தத்தம்‌ இனங்களுக்குள்‌ பல்லுருவத்தன்மைகளை (polymor

phisms) வெளிப்படுத்துகின்றன. பாலினேசியத்‌ தீவுகளில்‌, குறிப்பாக ஹவாய்த்‌ தீவில்‌ காணப்படும்‌ மெட்ரோசிடரோஸ்‌

கொலினா (Metrosideros collina) என்னும்‌ மரத்தில்‌ சிக்கலான பல உருவமைப்புகள்‌ உள்ளமை வகைப்பாட்டியலாரின்‌ ஆய்விற்கிடமளிக்கிறது. இதற்கு மாறாக, சில இனங்கள்‌ மரபியல்‌ நெகிழ்‌ தன்மைகளே இராமல்‌ சிறுசிறு கூட்டங்களாகக்‌ காணப்படுகின்றன. முன்னொரு காலத்தில்‌ வாழ்ந்து, தற்போது இராத ஹவாய்த்‌ தீவினைச்‌ சார்ந்த கிளர்மான்ஷியா ஹலிகாலே (Clermontia haleakalae), ஹெடியோடிஸ்‌ குகியானா (Hedyotis Cookiana) என்னும்‌ மரங்களையும்‌, பருந்து, காகம்‌, வாத்து போன்ற விலங்குகளையும்‌ இதற்கு எடூத்துக்காட்டூுகளாகக்‌ கூறலாம்‌. தீவுகளில்‌ மேற்காணும்‌ தகவமைவுக்‌ கதிர்வீச்சும்‌, நிலவியல்‌ இனமாக்கமும்‌ குறிப்பிடத்தக்க படிமலர்ச்சி அமைப்புகளாக விளங்குகின்றன. ஒதுக்கீடும்‌, உயிரினங்‌ களே இராத ஒரு சில இடங்களும்‌, தீவு உயிரினங்களின்‌ தொடக்கப்‌ படிமலர்ச்சியில்‌ நிலைத்த பண்புகளாக இருந்து, பின்னர்‌ அவை பெருமளவு சிக்கலான உயிரினங்கள்‌ உருவாவதற்கு வழி வகுக்கின்றன. தீவு உயிரினங்களிள்‌ பெரிய வரிசையிலான அளவு வேறுபாடூகளும்‌, சிக்கல்களும்‌ உள்ளன. அவற்றின்‌ வளர்முறையினைத்‌ தீவுகளின்‌ இயற்பியல்‌ தன்மைகளோடுூ ஒப்பிட்டு விளக்க இயலும்‌; இவ்வுண்மைகளினால்‌ பெரிய நிலப்பரப்புகளைவிடத்‌ தீவுச்‌ சூழ்‌ தொகுப்புகள்‌ எளிமையானவை; சிக்கலற்றவை; எனவே அவற்றை நன்றாக வரையறை செய்து விளக்க முடியும்‌. பெரும்‌ சூழ்‌ தொகுப்புகளின்‌ படிமலர்ச்சியை விளக்கிக்‌ கூறுவதற்கும்‌, தீவுச்‌ சூழ்‌ தொகுப்புகள்‌ பற்றிய தொடர்ச்சியான ஆழ்ந்த ஆய்வுகள்‌ தேவைப்படுகின்றன.

எரிமலைத்‌

தீவுகளின்‌

உயிரினங்கள்‌.

புதிய

எரிமலைக்‌ குழம்புப்‌ படிவுகளில்‌ எவ்வித உயிரினங்களும்‌ காணப்படூவதில்லை. எரிமலைக்குழம்பு அல்லது சாம்பல்‌ பரப்பு குளிர்ந்தவுடன்‌ அவற்றில்‌ தாவர, விலங்குகள்‌ சென்று வாழத்‌ தொடங்குகின்றன. எரிமலைத்‌ தீவுகளில்‌ உள்ள உயிரினங்கள்‌ ஒர வரிசையில்‌ அமைந்துள்ளன. முதலில்‌ ஆங்காங்கே உயிரினங்கள்‌ வந்து, பெருகிக்‌ கூட்டமைவுகள்‌

ஆகின்றன. பிறகு தொடர்ந்து ஏற்படும்‌ எரிமலை பீறிடுவதனால்‌ அங்கு வாழ்ந்த உயிரினங்கள்‌ அழிகின்றன. இச்சூழலில்‌ வாழும்‌ உயிரினங்கள்‌ ஏனைய உயிரினங்களிலிருந்து ஒதுக்கப்பட்டு வாழ்கின்றன. அங்கு வாழ்ந்த உயிரினங்களிலேயே படிமலர்ச்சி ஏற்படுகிறது. பின்னர்‌ ஒதுங்கிய தன்மை மறைந்து புதிய உயிரினங்கள்‌ வந்து வாழ்ந்து, அதனால்‌ மரபியல்‌ வேறுபாடுகள்‌ தோன்றுகின்றன.

எரிமலைகள்‌ உடைக்கப்பட்டு மீண்டும்‌ ஒதுக்கப்பட்டு, அதனால்‌ அவ்வவ்‌ பகுதிகளில்‌ உள்ள பேரின, சிற்றின வகைகளும்‌ காலப்போக்கில்‌ படிமலர்ச்சி அடைகின்றன.