உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரியலூர்‌ புதைபடிவங்கள்‌ 177

எளி யானது சில காலம் கழிந்தபின் சமைத்தால் ஒட்டிக் கொள்வதில்லை. இந்தியாவில் மக்கள் இதையே விரும்பி உண்ணுகின்றனர். பசையற்ற அரிசிகளின் முளைசூழ்சதை கடினமாகவும், ஒளிக்கசிவுடனும், எளிதில் உடையக்கூடியதாகவும் இருக்கும். இதில் மாவுப் பொருள் சிறு மணிகளாகவும் உருளைவடி வத்தில் திரளாகவும் ஏராளமாக அமைந்திருக்கும். இந்த வகை அரிசி நெல் அரவையின் போது தில் பழுதுபடுவதில்லை. இது பசையுள்ள அரிசியில் இல்லாத ஒரு சிறந்த குணம். பசையுள்ள ஜப்பா னிக்கா அரிசி வகை சீனா (China), ஜப்பான் (Japan) போன்ற கிழக்கத்திய நாடுகளில் பெரும்பாலும் பயி ரிடப்படுகிறது. பசையற்ற இந்திகா அரிசி வகை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் (Bangladesh), பாக்கிஸ்தான் போன்ற பகுதிகளில் சாகுபடி செய் யப்படுகிறது. பயி அரிசியின் பண்புகள், பயிரிடும் பருவம், ரின் வயது முதலியவற்றைப் பொறுத்தவை. அரிசிக் குப் பல பெயர்களுண்டு. பெயர்களுண்டு. நிறத்தைப் பொறுத்து அது சிவப்பு அரிசி என்றும், மணத்தைப் பொறுத்து கஸ்தூரி சம்பா, புனுகு சம்பா என்றும் பெயர்கள் பெறும். நெல்லை நீரில் ஊற வைத்த பிறகு வேக வைத்து, வெய்யிலில் உலர்த்தியபின் அரைத்து பெயர். எடுக்கும் அரிசிக்குப் புழுங்கல் அரிசி என்று நெல்லைப் பச்சையாக அரைத்துப் பெறும் அரிசி பச்சரிசி எனப்படும். ஊட்டச்சத்தைப் பொறுத்த அளவில், பச்சரிசியைக் காட்டிலும் புழுங்கல் அரிசி சிறந்தது. பாஸ்மதி (basmati), சீரகச்சம்பா போன்ற மணமுள்ள அரிசிகள் புலவரிசி எனப்படும். சமைத் தால் கோந்து போலச் சோறாகும் வகையைப் புட் டரிசி என்பார்கள். இவற்றில், வெள்ளை, பழுப்பு, கருப்பு என்ற வகைகளுண்டு, புட்டரிசியின் தனிப் பட்ட பண்புக்குக் காரணம் 'குளுட்டின்" (glutin) என்ற பொருள் அதில் இருப்பதே. அரிசியைச் சமைத்து உட்கொள்ளுவதல்லாமல். இட்லி, தோசை போன்ற பண்டங்கள், முறுக்கு, சீடை போன்ற பலகாரங்கள் செய்யவும் அது பயன்படு கிறது. இதிலிருந்து அவல், அரிசிப்பொரி, நெற்பொரி ஆகியவற்றையும் செய்யலாம்.நெல்லை 10 நிமிடம் கொதி நீரில் ஊறவைத்து, நீரை வடிகட்டி, மண்சட்டி யிலிட்டு, வறுத்தெடுத்து, உரலிலிட்டு, இடித்து,அவல் செய்யப்படுகின்றது. இது நல்ல சுவையுள்ள சத்துணவு ஆகும். நெல்லைக் காயும் மணலுள்ள சட்டி யில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் னால் அரிசி பருத்து, நெல் வெடித்துப் பொரி கிடைக் கின்றது. இது பொரியாக உண்பதற்கும், நோயாளி களுக்குக் கஞ்சியாகச் கிளறி அரியலூர் புதைப்படிவங்கள் 177 (நெற்பொரி செய்வது போல்) வறுத்தெடுத்தால் அரிசிப்பொரி கிடைக்கும். அரிசியை நொய்யாக்கி, மாவு மணிகள் (starch granules) செய்யப்படுகின்றன. இதைத் தயாரிக்கும் பொழுது வெளிப்படுகின்ற புரத நீர்மத்தை (protin liquor) வடிகட்டி, உலர்த்தி உரமாகப் பயன்படுத்து கின்றார்கள் அரிசி மாவு கஞ்சி, ஐஸ்கீரிம் (ice cream), சலவை செய்த துணிகளைக் கெட்டிப்படுத்து தல், வாசனைப் பூச்சுத்தூள் செய்தல் (cosmetie powder), கோந்துகள் செய்தல், புதுத் துணிகளைச் செம்மைப்படுத்துதல் போன்றவைகளுக்குப் பயன்படு கின்றது. ஜப்பான், சீனா போன்ற கிழக்கிந்திய நாடுகளில் பீர் (beer), ஒயின் (wine), எரிசாராயம் (spirit) ஆகியவற்றைத் தயார் செய்வதில் அரிசி பயன்படுகின்றது. நூலோதி எஸ்.க. The Wealth of India. Vol.VII, Publ. New Delhi, 1966. p. 330, CSIR அரிதாரம் காண்க, ஆர்ப்பிமென்ட் அரியலூர் புதைப்படிவங்கள் இந்திய முந்நீரகத்தின் தென்கிழக்குப் பகுதிகளில் உள்ள கிரட்டேசியஸ் (Cretaceous) காலப் பாறை கள் தென்னிந்தியாவில் காணப்படும் சிறப்பான நில இயல் கட்டமைப்பாகும். இதனைப் பல நிலஇயல் அறிஞர்களும் தொல்லுயிர் அறிஞர்களும் நுணுக்க மாகவும் முழுமையாகவும் ஆய்வு செய்துள்ளனர். சென்னைக்குத் தெற்கே அரியலூர், விருத்தாசலம், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் அக்காலத்திய பாறைகள் வெளிப்பட்டு நிற்கின்றன. கிரட்டேசியஸ் உட்பிரிவுகள் அனைத்தையும் அப்பாறை களில் காணமுடிகிறது. மேலே கூறப்பட்டுள்ள மூன்றி னுள் தென்கோடியாக அமைந்துள்ள பகுதி திருச்சிராப் அருகிலுள்ள அரியலூரைச் சூழ்ந்து காணப்படுகிறது. இது கிட்டத்தட்ட 800 ச. கி. மீ. பரப்பளவு உடையது. கால பள்ளிக்கு செய்து கொடுப்பதற்கும் பயன்படுகின்றது. நன்கு புழுங்க வைத்த நெல்லி லிருந்து கிடைத்த அரிசியுடன் சிறிது உப்பு சேர்த்து அ.க-2-12