அருகிவரும் விலங்கினங்கள் 195
உலகுக்கு அறிவிக்கிறது. ஆசியாவில் உராங் உட்டான் (organg-utan), சிங்கவால் குரங்கு (lion-tailed macaque), சிங்கம், புலி, வரை ஆடு (Nilgiri tahr), மணிப்பூர் மான் வகை (brow-antlered deer), பீர்டே விட் மான் (PereDavid's deer), ஆசியக் காட்டெருமை (Asiatic buffalo), காட்டெருது (gaur) போன்ற சில பாலூட்டிகளும், ஐரோப்பாவில் பிரஸ்வாலஸ் குதிரை (Przewalski's horse). காட்டுக்கழுதை (wild ass), மங்கோலியக் காட்டுக் கழுதை (Mongolian wild ass), பறக்கும் அணில் (flying squirrel), ஸ்பானிய லின்ஸ் (Spanish lynx),பாக்ட்ரியா ஒட்டகம் (Bactrian camel), ஐரோப்பியக் காட்டெருது (European bison) போன்றவையும் குறிப்பிடும்படியான சில அருகிவரும் பாலூட்டி இனங்களாகும். படம் 2. சிங்கவால் குரங்கு அதிகமாக அழிந்து வரும் பாலூட்டிகளைக் கொண்டுள்ள ஆப்பிரிக்காவில் சிம்பன்சி (chimpan- zee), கொரில்லா (gorilla) போன்ற மனிதக் குரங்கு களும், சிறுத்தை (leopard), மலை வரிக்குரை (mount- ain (zebra), கருப்பு காண்டாமிருகம் (black rhino- ceros), சதுரவாய் காண்டாமிருகம் (northern square- lipped rhinoceros), சிமிடார் ஒரிக்ஸ் (scimiter horned orynx), டூகாங் (dugong) போன்ற பலவகை இனங் களும் அழிந்து வருகின்றன. தீவுக் கண்டமாகிய ஆஸ்திரேலியாவில் தைலா சின் ஓநாய், ஒப்போசம் (leadbeater's oppossum) வெள்ளைத் தொண்டை வல்லபி (white throated wallaby) போன்ற பல அரிய விலங்கினங்கள் அழிந்து வரும் பாலூட்டிகளாகும். அமெரிக்கக் கண்டங்களில் புல்வெளி நாய் irie dog), காட்டெருது (wood bison), பெரிய 13-91 அருகிவரும் விலங்கினங்கள் 195 எறும்புத்தின்னி (giant anteater), மலை டபீர் mountain tapir), அண்டார்டிக் வால்ரஸ் (Antarctic walrus), கரீபியக் கடல்நாய் (Caribbean monk seal), பழுப்புக் கரடி (grizzly bear), துருவக் கரடி (polar bear) போன்ற பலவகைப் பாலூட்டிகளும் அழிந்து வரும் விலங்கினங்களாகும். இவ்விலங்குகளைத் தவி ரத் துருவக் கடலில் காணப்படும் கடல்நாய் (fur seal), வால்ரஸ், (walrus), நீலத் திமிங்கிலம் (blue whale) போன்ற பலவகைக் கடல்வாழ் பாலூட்டிகள் தொடர்ந்து வேட்டையாடப்படுவதால் அற்றுப் போகும் நிலையிலுள்ளன. அருகிவரும் பறவையினங்கள். பறவைகள் பாலூட் டிகளைவிட அதிகமாக வேட்டையாடப்பட்டு அழிக் கப்படுகின்றன. பறவைகள் வானில் பறந்தாலும், அவற்றுக்குத் தரையில் வாழும் மனிதனாலேயே இடை யூறு ஏற்படுகிறது. ஐரோப்பியப் பகுதிகளில் காணப் படும் ஸ்பானிய ராஜாளிக் கழுகு (Spanish imperial eagle) வேட்டையாடுபவர்களின் திறமைக்குக் கிடைக் கும் வெற்றிக் கோப்பையாகக் கருதப்பட்டதால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு அற்றுப்போகும் நிலையிலுள்ளது. பல கடல் தீவுகளில் காணப்படும் பறக்க இயலாப் பறவைகள் (flightless birds) மிக விரைவாக அழிந்துவரும் பறவைகளாகும். மனிதர் களின் காலடி படாத கடல் தீவுகளில் எதிரிகளற்று வாழ்ந்ததாலேயே இவை பறக்கும் தன்வையை இழந் தன. இந்தியாவில் வரகுக்கோழி (great Indian bus - tard) என்னும் பறவை அருகி வருகிறது. மனிதன் புதிய தீவுகளில் குடியேறும்பொழுது அந்தீவிலுள்ள இந்தப் பறவைகள் அவனது வேட்டைக் கருவிகளுக்கு இலக்காகின்றன. காலப்பேகோஸ் தீவுகளில் (Gala- pagas Islands) காணப்படும் நீர்க்காகம் (cormorant), ஆஸ்திரேலியத் தீவுகளில் வாழும் ஈமு (emu), மோயா (moa) போன்ற பல பறவையினங்கள் ஒரு சில ஆண்டுகளில் அற்றுப்போகுமளவு அழிந்து வரும் பறவைகளாகும். 1600 ஆம் ஆண்டிலிருந்து வாழ்ந்து வந்த 8,700 பறவையினங்களில் 94 சிறப்பினங்கள் அழிந்துவிட் டன. நியூசிலாந்து, மடகாஸ்கர், இந்தியப் பெருங் கடலிலுள்ள ராட்ரிக்ஸ் தீவுகள், மேற்கிந்தியத் தீவு கள், ஹவாய்த் தீவுகள், போன்ற தீவுகள் ஒவ்வொன் றிலிருந்தும் சில பறவையினங்கள் அற்றுப் போய் விட்டன. வட அமெரிக்காவில் வாழ்ந்த பச்சைக் கிளி இனமொன்றும் (carolina parakeet, Conuropsis carolinensis), புறா இனமொன்றும் (passenger pigeon, (Ctopistes migratorius) இறுதியாக 1914 இல் விலங் குக் காட்சியங்களில் மாண்டு போயின. இவ்விரு பறவையினங்களும் முற்காலத்தில் வட அமெரிக்கப் பகுதிகளில் மிகவும் அதிகமாக வாழ்ந்தன. அருகிவரும் ஊர்வன, உலகின் கவனத்தைப் பெரு