284 அலகுகளும் பருமானங்களும் செந்தரங்களும், மின்னியல்
284 அலகுகளும் பருமானங்களும் செந்தரங்களும், மின்னியல் இவற்றில் வெற்றிடம் ஏற்படுத்தினால் பாதுகாக்க வும், உருவ வார்ப்புகள் தயாரிக்கவும் இவை பயன் படுகின்றன. நூலோதி பி.எஸ்.எம்.க. Hawley Gessner, G., The Condensed Chemical Dictionary, Tenth Edition, Galgotia Book Source Publishers. New Delhi, 1984. அலகுகளும் பருமானங்களும் செந்தரங்களும், மின்னியல் தனிநிலை அலகு (absolute unit). பல்வேறு சிக் கலான இயல்புகளின் அலகுகளைப் பதிலிட உதவும் அடிப்படை அலகுகளே தனிநிலை (absolute) அலகு கள் என அழைக்கப்படுகின்றன. இயக்கவியலில் நீளம் (length), பொருண்மை (mass), நேரம் ஆகிய மூன்று அலகுகளும் அடிப்படை அலகுகளாகும். மின் அல்கு களும், காந்த அலகுகளும் மேற்கூறிய மூன்று அடிப் படை அலகுகளுடன் மின்செயல், காந்தச்செயல் நடைபெறும் ஊடகத்தின் (medium) சிறப்பியல்பு களைக் குறிக்கும். ஓர் ஊடகத்தின் மின்னியல்பை மின்காப்பு மாறிலி (dielectric constant) எனவும், காந்த இயல்பைக் காந்தப் புரைமை (permeability) எனவும் அழைக்கிறோம். பிரிட்டன் நாட்டு நடைமுறைச் செந்தர அலகு கள் குழு, மின் அளவைகளுக்காக செ.மீ., கிராம், நொடி ஆகிய அடிப்படை அலகுகளை முறையே நீளம், பொருண்மை, நேரம் ஆகியவற்றின் அலகு களாக அமைத்துக்கொண்டதும் சென்டிமீட்டர், கிராம், நொடி முறை அனைத்துலக நடைமுறைக்கு வந்தது. மின்னியலைப்பொறுத்தவரை செ.மீ.கி.நொ. முறையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை யாவன; நீளம், பொருண்மை, நேரம் ஆகியவற்றின் அலகுகளையும் ஊடகத்தின் மின்காப்பு மாறிலியை யும் உள்ளடக்கிய முறையான நிலைமின் செ.மீ. கி. நொ. (E.S.C.G.S) முறை, நீளம், பொருண்மை, நேரம் ஆகியவற்றின் அலகுகளுடன் காந்தப்புரை மையை உள்ளடக்கிய முறையான மின்காந்த செ. மீ.கி.நொ (E,M.C.G.S) முறை என்பனவாகும். மின்அளவுகளைப் பொறுத்தவரையில், மின் காந்தமுறையே நிலைமின் முறையைவிட ஏற்றம் மிக்கதாக இருப்பதால், மின்காந்த முறை வழக்கில் பரவலாகப் பயன்படுகிறது. விரைவு (velocity), முடுக்கம் (accelleration). விசை (force) ஆகியவற்றின் பருமானங்கள்(dimensions) விரைவு நீளம் / நேரம் நீளத்தின் பருமானம் L. நேரத்தின் பருமானம் T. எனவே, விரைவின் பருமானங்களைச்சமன்பாடு (1) தருகிறது. நீளம் V நேரம் LT¯¯¹ இதுபோலவே, முடுக்கம் = விரைவு/நேரம் ஆனால், விரைவு - நீளம்/நேரம் (1) எனவே, முடுக்கத்தின் பருமானங்களைச் சமன்பாடு (2) தருகிறது. முடுக்கம் = நீளம் நேரம் X நேரம் நீளம் நேரம் L = LT-3 T (2) = விசை = பொருண்மை X முடுக்கம் பொருண்மையின் பருமானத்தை M என எடுத்துக் கொண்டால் விசையின் பருமானங்களைச் சமன்பாடு (3) தருகிறது. விசை = M LT2 (3) நிலைமின் முறையிலும் மின்காந்த முறை யிலும் கூலூம்பின் தலைகீழ் இருபடி விதிப்படி (inverse square law) விசையின் சமன்பாடு விசை. F=qq/Kr' என்பதாகும். அதாவது, விசை (மின் அளவு) K× (நீளம்) 2 இதில் K என்பது மின்காப்பு மாறிலியாகும். விசை யின் சமன்பாட்டைப் பருமானங்களில் கீழுள்ளபடி எழுதலாம். F = q³ /KL² -2 அதாவது, MLT = q* /KL* =q எனவே, q = K+ ML T <-1 (4)