2 அமில அனற்பாறைகள்
கன அளவைக் காணலாம். V,N, = V,N, என்ற வாய்பாட்டைப் பயன்படுத்தி அமிலத்தின் திறனைக் கணக்கிடலாம். V₁ N₁ N₂ = 1 1-ஆவது கரைசலின் கன அளவு 1-ஆவது கரைசலின் திறன் 2-ஆவது கரைசலின் கனஅளவு 2-ஆவது கரைசலின் திறன் அமிலத்தின் திறன் = X காரத்தின் திறன் காரத்தின் கனஅளவு அமிலத்தின் கன அளவு திறனிலிருந்து எடையை, W = EXN என்ற வாய்பாட் டைப் பயன்படுத்திக் கண்டறியலாம். W= 1 லிட்டர் கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் எடை. E கரைபொருளின் சமான எடை (equivalent weight) N = கரைசலின் திறன் நூலோதி பி. எஸ். இரா. 1.Vogel, I. Arthur, A Text Book of Macro and Semimicro Quantitative Inorganic Analysis, Third edition, Longmans, Green & Co., 1967. 2. McGraw-Hill Encyclopaedia of Chemistry, Fifth edition, McGraw-Hill Book Company. New York, 1983. அமில அனற்பாறைகள் சிலிக்கா (silica) 65 விழுக்காடு அளவுக்கு உள்ளடக் கிய அனற்பாறைகளை அமில அனற்பாறைகள் என்று அழைப்பர். இப்பாறைகளில் காரப் பண் புடைய தனிமங்களின் கூட்டு விழுக்காடு 3 முதல் 12 வரையில் அமையும். இவ்வகைப் பாறைகள் இயல்பாக மென்னிறமுடையனவாகக் காணப்படும். இதன் அடர்த்தி 2.7. இவ்வகை அனற்பாறைகளின் முதன்மைக் கனிம மாகக் குவார்ட்சு (quartz) 25 முதல் 35 விழுக்காடு வரையிலும், பொட்டாஷ் ஃபெல்சுபார்கள் 35 முதல் 45 விழுக்காடு வரையிலும், பிளஜியோகிளேசு 15 முதல் 25 விழுக்காடு வரையிலும், பயோட்டைட்டு (biotite) 5 முதல் 15 விழுக்காடு வரையிலும், மிக அரிதாக மஸ்கோவைட்டு மைக்கா (muscovite mica) 0 முதல் 3 விழுக்காடு வரையிலும் அடங்கியிருக்கும். மேலும் அமில அனற்பாறைகளில் அருகிய கனிமங் களாக அப்பட்டைட்டு (apatite), சிர்க்கான் (zircon), டூர்மலின் (tourmaline) ஆகியவை அடங்கியுள்ளன. சிலவகை அருகிய அனற்பாறைகளில் குவார்ட்சும் காரப் பண்புள்ள ஃபெல்சுபாரும் வளர்ந்த நிலையில் காணப்படும். இவை கிராபிக் கிரானைட்டுகள் எனப்படும். காண்க, கிரானைட்டு. அமில அனற்பாறைகளில் இயல்பாகக் கிடைப்பது கிரானைட்டு (granite) ஆகும். இலத்தின் மொழியில் கிரெய்ன் (grain) என்பதன் பொருள் மணி ஆகும். வை ஊடுருவிய பாறைகளாகவும் பேராழப் பாறை களாகவும் (batholiths) பெருங்குவிப் பாறைகளாகவும் (laccoliths) உருவாகி நிலவுகின்றன. கிரானைட்டுகளை, அவற்றில் அடங்கியுள்ளகாரப் பண்புடைய தனிமங்களை வைத்துப் பயோட்டைட்டு கிரானைட்டு (biotite granite), பயோட்டைட்டு ஆர்ன்பிளெண்டு கிரானைட்டு (biotite - hornblende granite), டூர்மலின் கிரானைட்டு (tourmalin granite) என்ற வகைகளாகப் பிரிக்கலாம். பயோட்டைட்டு கிரானைட்டில் இயல்பாக ஆர்த்தோகிளேசும் (ortho- clase) மைக்ரோகிளைனும் (microcline), பிளஜியோ கிளேசும் அடங்கிய ஃபெல்சுபாராக ஆலிகோகிளேசு (oligoclase) உள்ளடங்கி இருக்கும். இதில் பயோட் டைட்டு என்ற முக்கிய காரப் பண்புடைய தனிமம் உள்ளடங்கி இருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட் டுள்ளது. மற்ற பயோட்டைட்டு ஆர்ன்பிளெண்ட் கிரானைட்டும், டூர்மலின் கிரா னைட்டும் இயற்கையில் மிக அரிதாகக் காணப்படு கின்றன. வகைகளான வேதியியல் உட்கூறைப் பொறுத்துக் கிரானைட்டு இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை இயல்பு கிரானைட்டு (normal granite), காரக்கிரானைட்டு alkaline granite) என்பனவாகும். பிற் கூறப்பட்ட காரக் கிரானைட்டில் Na,O என்ற சேர்மம் அதிக மாகக் காணப்படும். காரப் பண்புடைய சேர்மங்கள் குறைந்து காணப் படும் கிரானைட்டு உள்ள அனற்பாறைகள் மென்னிற (leucocratic) அமில் அனற்பாறைகள் என்று கூறப்படுகின்றன. குவார்ட்சு (quartz), கார ஃபெல் சுபார் மட்டுமே உள்ளடக்கிய கிரானைட்டுகள் அலஸ்க்கைட்டுகள் (alaskites) என்று அழைக்கப் படுகின்றன. இவ்வகைக் கிரானைட்டில் பிளஜியோ கிளேசு ஃபெல்சுபார் கால்சியம் வகைகளைச் சேர்ந்த வையாக இருக்குமேயானால் அவை ஆலிகோகிளேசு