உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 அலைவரி விளைவுகள்‌

412 அலைவரி விளைவுகள் வழங்கும் சதுர அலைகள் பன்மை அதிர்ப்பி, வெற்றிடக்குழல், திரிதடையச் (transistor) சுற்று வழிகள், வாயில் சுற்றுவழிகள் (gete circuits) ஆகிய வற்றால் உண்டாக்கப்படுகின்றன. காண்க, இடுக்கும் சுற்றுவழி (clipping circuit); வரம்புச் சுற்றுவழி (limiting circuit); பன்மை அதிர்வி (multivibrator); ஓய்பாட்டு அலைவியற்றி (relaxation oscillator). மின்துகளியலில் பெரிதும் பயன்படும் மற்றொரு அவை வடிவம் காலத்தைப் பொறுத்து நேரியலாக மாறும் சார்பு (function) ஆகும். இதைச் சரிவுச் சார்பு (ramp function) என்பர். அதிவளையம், திருத்திய சைன் அலை ஆகியவையும் நடைமுறையில் பயன்படுகின்றன. இலை மின்துகளியல் இணை- அணைச் சுற்றுவழி, வாயில் சுற்றுவழி, தடை-கொண் மக்கால மாறிலி. நேரியல் பின்னூட்டு மிகைப்பிகள் linear feedback amplifiers) ஆகியவற்றால் வடி வமைக்கப்படுகின்றன. காண்க, தறிப்புச் சுற்றுவழி (clamping circuit); ஒன்றும் மிகைப்பி; மின்து களியல் இணைப்பி; மின்துகளியல் காட்சி; துடிப்பு இயற்றி; திருத்தி; சரிவு வீச்சியற்றி (sweep generator); தொடங்கும் சுற்றுவழி (trigger circuit). அலைவரி விளைவுகள் அனைத்துப் பாவிழைகளையுமோ (ends) அல்லது ஒரு பகுதி பாவிழைகளை மட்டுமோ அலைவரிக் கோடுகள் போல் அமைக்கும் போது அலைவரி விளைவு ஏற்படுகிறது. விழுது கம்பிகளால் பல்வேறு கோணங்களில் அமைக்கப்பட்ட, எழுந்த, தாழ்ந்த, ஊடையிழைகளைப் (reed) பயன்படுத்தி இது நெய்யப்படுகிறது. முதல்30 ஊடை இழைகள் அடியில் 2 செ.மீ. அகலமும், மேலே 4 செ.மீ. அகலமும் அமையும்படியும் அடுத்த 30 ஊடை இழைகள் அடியில் 4 செ.மீ. அகலமும் மேலே 2 செ.மீ. அகலமும் உள்ளபடி பின் தொடரும்படியும் அமைத்து மொத்த 60 ஊடையிழைகளும் 6 செ.மீ. அகலத் துடன் அமையும்படி நெய்யலாம். பாவு அகலத்தில் இந்தக் கட்டமைப்பு திரும்பத் திரும்ப அமையும். இந்த ஊடையிழை அமைப்பு அதன் தோற்றத்தால் விசிறியமைப்பு ஊடை என அழைக்கப்படும். விழுதுக் கம்பிகள் வழக்கமாக அடி, மேல் தளத்துக்கு நடுவில் அமைந்திருக்கும். பாவிழைகள் இயல்பு இருப்புகளில் உள்ள ஒரு சிறப்பு வகை இயங்கமைப்பு (mecha- Bism) மூலம் ஊடையிழை மேலும் கீழும் உயர்த்தித் தாழ்த்தப்படும். பாவிழைகளும் இடமும் வலமுமாக இறப்பு மாற்றப்படும். இது 5 முதல் 8 செ.மீ. நீள V அலைவிளைவை ஏற்படுத்துகிறது. எல்லாப் பாவு இழைகளும் ஒரே பாவுச் சட்டத்திலிருந்து வருவதால் அதிக அலை வீச்சுடைய இழைகள் அதிக தகைவுக்கு ஆட்படும். நேராக உள்ள இழைகள் இயல்பு நிலை- மையைக் காட்டிலும் அதிகமாக அமுக்கப்படும். V விளைவற்ற வேறு பாணி அலை விளைவு களையும் நேர்குத்தாக அமையும்படி ஏற்படுத்தலாம். ஊடை அலைவரி விளைவை அடுத்தடுத்த பக்கப்பாவு நூல்களை இரு தளர்த்துச் சட்ட விளைவுக்கு உட் படுத்தி ஒற்றைப்படைப் பாவிழைகளை இறுக்கி, இரட்டைப்படைப் பாவிழைகளைத் தளர்த்தி. மாற்றி மாற்றி நெய்யலாம். பாவு இறுக்கமான இடத்தில் ஊடை நெருக்கமாகவும், பாவு தளர்ந்த இடத்தில் ஊடை பரவலாகவும் நெய்வதால் கிடைமட்ட அலை விளைவு ஏற்படுகிறது. அலை வழிப்படுத்திகள் மின்காந்த அலை ஆற்றலைக் குறிப்பிட்ட ஓரிடத்தி லிருந்து குறிப்பிட்ட மற்றோர் இடத்திற்கு வழிப் படுத்தப் பொதுவாக மின்கம்பிகள் பயன்படுத்தப் படுகின்றன. மின்காந்த அலைகளோ நீண்ட நெடிய நெடுக்கத்துக்கு உட்பட்ட அலைகளின் தொகுதியைக் கொண்டுள்ளன என நாம் அறிவோம். இவ்வலை களின் நீளம் சென்ட்டிமீட்டரில் பத்தாயிரத்தில் ஒரு பங்கிலிருந்து பல நூறு மீட்டர்கள் வரை இருப்ப துண்டு. இவற்றுள் பெரும் பகுதி நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை, ஏனென்றால் சில குறிப்பிட்ட அலை நீளமுள்ள அலைகளே நம் கண்களுக்குப் புலப்படும். பொதுவாக நம் கட்புலனுக்கு உள்ளாகும் ஒளி அலைகள் சுமார் 3900 ஆ (Å - Angström ) முதல் ஏறத்தாழ 7000ஆ வரைக்கும் இடைப் பட்ட அலை நீளங்களைப் பெற்றுள்ளன. கட்புல னுக்கு உள்ளாகாத மின்காந்த அலைகளை அவற் றின் சிறப்புத் தன்மைக்கு ஏற்றவாறு தொகுதி களாகப் பிரித்திருக்கின்றார்கள். இத் தொகுதிகளுள் நுண்ணலைகள் (microwaves) என்பது ஒன்று. இவற் றின் அலை நீளம் 0.1 செ.மீ. முதல் 10 செ.மீ வரை உள்ள நெடுக்கத்தில் காணப்படுகின்றது. இதை அதிர்வெண்ணில் குறிப்பிட்டால் நுண்ணலைகள் 3,000 மெகாஹெர்ட்ஸ் ( negahertz) முதல் 30,000 மெகாஹெர்ட்ஸ் வரை இருக்கின்றன எனலாம். இந்த நுண்ணலைகள் பெற்றிருக்கின்ற சில தனிச் சிறப்புகளினால், எலெக்ட்ரானியல் துறை சார்ந்த பயன்களை மிகவும் விரிவாக்கிவருகின்றன.குறிப்பாக, பன்னாட்டுச் செய்திப் போக்குவரத்து, தொலைக் காட்சிஒலிபரப்பு, ராடார்(radar) போன்ற துறைகளில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருவதைச் சொல் லலாம். மேலும் உவகெங்கும் ஒலிபரப்பு நிலையங்கள்