உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 அலைவெண்‌ குறிப்பேற்றி

460 அலைவெண் குறிப்பேற்றி தகவல்களையோ தகவல்கள் முழுவதையுமோ தெரி விக்கும்படிச் செய்யலாம். (Facsimile). உருவ நேர்படிமுறை செலுத்தம் கருப்பு வெள்ளை உருவங்கள் (வரைகோட்டுப் படங் கள், தட்டச்சு செய்யப்பட்ட எழுத்துக்கள் போன் றவை) அலைவெண் குறிப்பேற்றத் குறிப்பேற்றத் தொலைவரி யியலில் பயன்படும் தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தி வேறிடங்களுக்கு அனுப்பப்படலாம். இவ் விதம் அனுப்பப்படவேண்டிய உருவத்தின் கருப்பு நிறத்திற்கானதாக, அலைவெண்ணின் ஒரு வரம்பும், வெள்ளை நிறத்திற்கான மறு வரம்பும் இருக்கும். நாம் அனுப்ப விரும்பும் உருவம் அல்லது செய்தியின் (எழுத்து வடிவம்) ஒளிநிழல் கூறுகளை (கருப்பு வெள்ளைப் பகுதிகளை), ஓர் ஒளி மின்கலத்தின் துணை கொண்டு தனித்தனியே அலகிட (scanning) வேண்டும். இந்த அலகீடு (scan) செலுத் தியிலும், பதிப்பியிலும் (recorder) ஒத்திசைவுடன் அமையவேண்டும். மின்னுணர் (electrosensitive) முறையையோ, நிலைமின் (electrostatic) முறையை யோ பயன்படுத்திக் கருப்புக் குறிப்பலைச் செய்திப் பதிவிப்புத் தாளைக் கருப்பாக்கலாம்; வெள்ளைக் குறிப்பலைத் தாளை வெளுப்பாக்கலாம். அதாவது. ஓரிடத்திலிருந்து அனுப்பப்படும் உருவத்தின் நேர் படியை இம்முறையில் மற்றோர் இடத்தில் பெறலாம். கருப்பு வெள்ளை நிறங்களுக்குப் பதில், தொடர்ந்து சாம்பல் நிறப்படத்தையும் நெடுந் தொலைவுகளுக்கு அனுப்பவும் பதிவு செய்யவும் முடியும். இதற்கு, கருப்பு-வெள்ளைக்குப் பயன்படுத் திய இரண்டே இரண்டு அலைவெண்களுக்குப் பதிலாக, அவற்றின் இடையே ஒரு தாழ் அலைவெண் ணுக்கும் (1500 ஹெர்ட்சு), உயர் அலைவெண்ணுக் கும் (2700 ஹெர்ட்சு) இடையே உள்ள தொடர்ச்சி யான அலைவெண் பெயர்ச்சி (frequency shift) பயன் படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தறுவாயில் உள்ள அலைவெண், அனுப்பப்படும் உருவத்தின் சாம்பல் நிறக்கூறின் அளவிற்கு (gray level) நேர் தகவில் இருக்கும். அதாவது உருவத்தின் சாம்பல் நிறக்கூறின் அளவுக்குத் தக்கவாறு, அலைவெண் தொடர்ந்து அலைந்துக்கொண்டு இருக்கும். பதிப்பி ஓர் அலைவெண் வீச்சு மின்னியற் குறிப்பாக்கி யைப் பயன்படுத்துகிறது. இக்குறிப்பாக்கியின் துலங் கல் (response), அலைபரப்பியின் குறிப்புக்குத் தலைகீழாய் இருக்கும். கேள் அலைவெண் குரல் களை (tones) தொலைபேசிக் கம்பிகளில் அனுப்ப இயலும். அவை அ.கு. வானொலி அலை பரப்பி யையோ, ஒற்றைப்பக்க அலைப்பட்டை அலைபரப் பியையோ குறிப்பேற்றம் செய்யும். இரா.செ. நூலோதி 1. Widdis, F., Electronic Engineer's Reference Book, Sth Edition, Butterworth Company, London, 1983. 2. Tibbs C.E., and Johastone, G.G., Frequency Modulation Engineering, McGraw-Hill Book Company, New York, 1956. 3. Anokh Singh, Principles of Communication Engineering, S. Chand & Company Ltd., Ramnagar, New Delhi, 1981. அலைவெண் குறிப்பேற்றி modulator) மின் அலைகளின் ஊர்தி அலை மாற்றும் கருவி. அலைவெண் குறிப்பேற்றி (Frequency ஒளி அலைகளால் ஏற்படும் வீச்சிற்குத் தகுந்தாற்போல் களின் (signal) அலைவுகளை செய்தி ஒலிபரப்பில் அலைவெண் குறிப்பேற்றம் (frequency modulation) மிகவும் பரவலாகப் பயன் படுகின்றது. ஆகவே அலைவெண் குறிப்பேற்றிகளும் (frequency modulators) மிகவும் பயனுள்ள மின் துகளியல் சாதனங்களாகும். பலவகையான மின் துகளியல் சாதனங்கள் (electronic devices) இவற்றின் சுற்றுவழிகளில் பயன்படுத்தப்படுகின்றன. மறைமுக அலைவெண் குறிப்பேற்றி (indirect frequency modulator). இ. எச். ஆர்ம்ஸ்ட்ராங் (E.H Armstrong) என்பவர் முதன்முதலில் மறைமுக அலை வெண் குறிப்பேற்றியின் வாயிலாக அவைவெண் குறிப்பேற்றம் செய்ய முடியும் என்பதையும், அதன் பயன்பாடுகளையும் எடுத்துரைத்தார். இம்முறையில் கீழே கூறப்பட்டுள்ளபடி அலைவெண் குறிப்பேற்றம் செய்யப்படுகின்றது. 1) குறிப்பேற்ற வேண்டிய மின் குறிப்பு (modula- ting signal) முதலில் தொகுப்பியின் (inte- grator) வழியாகக் ஊட்டப்படுகிறது. 2) பின்னர் ஊர்தி அலைகளுடன் சேர்ந்து தறு வாய்க் குறிப்பேற்றம் (phase modulation) செய்து குறும்பட்டை அலைவெண் குறிப் GUDDU GUDD (narrow band frequency modulation) மின்குறிப்புகள் உண்டாக்கப் படுகின்றன. 3) மேற்கூறிய மின்அலையின் அலைவெண் ணைப் பெருக்கும்பொழுது அகல் பட்டை அலைவெண் குறிப்பேற்றிய மின்குறிப்புகள் கிடைக்கின்றன.