626 அறுகம்புல்
626 அறுகம்புல் அழித்து அவை உணடாகாதவண்ணம் வழிகோல லாம். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், மனித னுக்கு நிலையான பற்களின் எண்ணிக்கை 32 என்ற விதி மாறி, 28 பற்களே போதும் என்றாகலாம். அதனால் நமது உணவு உண்ணும் முறையில் ஒரு விதக் குறைபாடும் ஏற்படாது. இன்றைய பற் சீரமைப்பு முறையில் கூட, நான்கு பற்களைக் குறைத்து 28 பற்களைக் கொண்டு, இடைவெளியில்லாமல் பற்களைச் சீரமைக்கிறோம். எதிர்கால மக்கள் 28 பற்களை இயற்கையாகவே முழுமையாகக் கொண்டவர்கள் ஆவார்கள் என்று நம்பலாம். அறிவுப் பற்கள் இன்றைய நாளில் தேவை யில்லை. அவை இல்லையென்றால், மனிதனுக்கு ஒருவிதக் குறையும் இல்லை. அவை இருக்கும்போது தொல்லைகள் தருமேயானால் அறுவை மருத்துவம் மூலம் நீக்கிவிட்டுக் குணம் பெறலாம். அதனால் ஒருவித ஆபத்தும் இல்லை. நூலோதி 1. 2. ஜே.ஜி.க. கண்ணப்பன், ஜே.ஜி.,வாய் பல் மருத்துவம், முதல் பதிப்பு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை 1972. Kannappan, J. G., When, Wisdom tooth Spells Trouble, The HINDU, Sunday Supplement 24th April, 1983. அறுகம்புல் இது ஒருவிதையிலைக் குடும்பங்களில் ஒன்றாகிய போவேசியைச் (poaceae gramineae) சார்ந்தது. தாவரவியலில் சைனோடான் டேக்ட்டிலான் (cynodon dactylon (L) pers.) என்று அழைக்கப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்புல் பஹாமா தீவுகள் (Bahama islands) வழி 用品 அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் பரவியிருக்கக்கூடுமென்று கருதப்படுகிறது. இத னால், இதற்குப் பஹாமா புல் (Bahama grass) என்றும்,ஹரியாலி (hariali) என்றும் வேறு பெயர் களுண்டு. தற்போது இப்புல் உலகிலுள்ள வெப்பமண்டல நாடுகளில் (tropics) எல்லாம் பர விக் காணப்படுகின்றது. இது, சமவெளியிலிருந்து 2130 மீ. உயரமுள்ள பகுதிகள் வரை இந்தியா முழு வதும் காணப்படுகின்றது. இது எங்கும் வளரக் கூடிய புல் வகை. கணுக்கள் தோறும் வேரூன்றிப் பூமியின் மேல் பாய்போல் படர்ந்து, பலபருவங்கள் வாழக்கூடியது. 'ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி வாழ வேண்டும்' என்ற வாழ்த்து மூலம் இந்த உண்மை உறுதியாகின்றது. சிறப்புப் பண்புகள். இதன் தண்டுகள் படர்ந்து வளர்பவை. இதற்கு நிலஅடி ஓடுதண்டு (runner) உண்டு. வேர்கள் கணுக்களில் ஆங்காங்கே தோன்று வதனால் இது படர்ந்து பரவுவதற்கு அவை உதவு கின்றன. இலைகள் குட்டையானவை; மென்மை யானவை; ஊசி போன்று குறுகலாக (subulate ) இருக்கும். மஞ்சரி கதிர் போன்று விரிந்திருக்கும்; பச்சை அல்லது பழுப்புக் கலந்த சிவப்பு நிறத்துட னிருக்கும். கனி பக்கவாட்டில் தட்டையாக இருக்கும். பயிரிடும் முறை. களிமண்ணிலும், கரிசல் மண் ணிலும், வடிகால் வசதியுள்ள இடங்களிலும் இது நன்றாக வளரும். கடுமையான வறட்சிநிலையை யும்,உவர், களர்த் தன்மையையும் தாங்கக் கூடியது. மற்றப் புல் வகைகளைவிட இப்புல் தழைச்சத்து நிறைந்த உரங்களையும், ஏராளமான தண்ணீ ரை யும் ஏற்று உயர் விளைச்சல் கொடுக்கவல்லது. அறு கம்புல்லை விதைகளிலிருந்தும் நில அடி ஓடுதண்டு களிலிருந்தும் பயிராக்கலாம். ஆனால் விதைகள் கால தாமதமாக முளைப்பதாலும், முளைத்த நாற்றுகள் வீரியமில்லாமல் இருப்பதாலும், நிலஅடிஓடு தண்டு களை நட்டு, விரைவில் பலன் பெறுகின்ற முறை முன் னதைவிடச் சாலச் சிறந்ததாகும். நிலத்தை இரண்டு மூன்று முறை உழுது பண்படுத்தி 30-60 செ.மீ. டைவெளியில் நிலஅடிஓடு தண்டின் துண்டுகளை நடவேண்டும். பிறகு நீர்பாய்ச்சி அவற்றைக் காலால் மிதித்துவிட வேண்டும். அப்பொழுதுதான் அவை மண்ணில் நன்றாகப் பதிந்து, விரைவில் முளைக்க வசதியாக இருக்கும். ஓர் ஹெக்டேருக்கு 125 கிலோ கிராம் அம்மோனியம் சல்ஃபேட் (ammonium sulphate) உரமிடுவதால் விரைவில் முளைத்து, உயர் விளைச்சல் கிடைக்கும். மூன்று, நான்கு மாதங்களுக் குப் பிறகு, முதல் முறையாக அறுவடை செய்யலாம். பிறகு 60-70 நாட்களுக்கொருமுறை அறுவடை செய் யலாம். ஓர் ஆண்டில், 4-5 அறுவடைகள் செய்தால் ஓர் ஹெக்டேரிலிருந்து 65 டன் பசுந்தீவனம் கிடைக் கும். மானாவாரிப் பயிரானால் 25 டன் விளைச்சல் கிடைக்கும். மேய்ச்சல் நிலங்களிலும் இதைப் பயிரிட் டுக் கால்நடைகளை அவ்வப்பொழுது மேய விடலாம். மற்றப் பயிர்கள் வளரும் நிலங்களிலிருந்து இப்புல்லை