பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அமினோ அமில நீரிழிவு

கலந்த அல்லது நீரற்ற அம்மோனியாவுடன் வினை புரியும் போது அமில அமைடுகள் கிடைக்கின்றன.

NE, R–C–COOC,Hg + NH, | H NH, R-C-CO-NH, + C,H,OH | H

மான கிளைசினைக் காப்பர் கார்பனேட்டுடன் வினை படுத்தும்போது கொடுக்கிணைப்புச் (chclate) சேர்ம காப்பர்கிளைசீன் (ஆழ்நீலநிறப் படிகங்கள்) கிடைக்கின்றது.

அமினோ அமிலத்தில் உள்ள அமினோ தொகு தியை மெத்தில் அயோடைடு அல்லது டைமெத்தில் சல்ஃபேட்டினால் காரம் உடனிருக்க கடைநிலை மெதிலேற்றம் (exhaustive methylation) செய்யும் போது பீட்டைன் (betaine) உண்டாகிறது. பீட்டைன் சேர்மத்தில் மூன்று அல்க்கைல் தொகுதிகள் நைட் ரஜன் அணுவில் இணைந்துள்ளன.

+ H₂N CH₂COO + 3 CH₂I (CH,)N CH,COO + 3 HI

அமினோ அமிலங்களின் முக்கிய வினை நின் ஹைட்ரின் வினை (ninbydrin reaction) ஆகும். நின் ஹைட்ரினைக் கொண்டு அமினோ அமிலங்களின் தன்மையையும் நிர்ணயிக்க முடியும், நின்ஹைட்ரின் அமினோ அமிலங்களுடன் லினை புரியும்போது நீல திறத்தைத் தருகின்றது. நிறத்தின் அடர்வினைப் பொறுத்து அமினோ அமிலங்களைக் கண்டறியலாம்.

அமினோ அமிலங்கள் இருமுனை அயனிகளாக இருப்பதால் அவற்றைக் காரத்துடன் நேரிடையாக முறித்து (titration) நிர்ணயிக்க இயலாது. மாறாக சாரன்சன் (Sorensen) என்பவர் அமினோ அமிலத் தொகுதியைப் ஃபார்மால்டிஹைடுடன் ஃபீனால்ஃப் தலின் காட்டி (phenolpthalein indicator) உடனி ருக்க நடுநிலையாக்கம் (neutralize) செய்யும்போது, அமினோ தொகுதி நடுநிலையாக்கப்பட்டு முழுவதும் அமிலத்தன்மை அடைவதைக் கண்டறிந்தார். எனவே அமினோ அமிலங்களைக் காரக் கரைசலு டன் ஃபீனால்ஃபதலின் காட்டி கொண்டு எளிதில் தரம் பார்க்கலாம். தரம் பார்த்தலில் எடுத்துக்கொள் ளப்பட்ட காரத்தின் அளவு, அமினோ அமிலத்தில் உள்ள அமிலத் தொகுதியை மட்டும் நடுநிலையாக்கத்

தேவைப்பட்ட காரத்தின் அளவைக் குறிக்கிறது. இம்முறைக்கு சாரன்சன் ஃபார்மல் முறித்தல் (Soren sen formal titration) என்று பெயர்.

பயன்கள். பென்சீனையோ - நாஃப்தலீனையோ (napthalene) கொண்ட அமினோ அமிலங்கள் தொழில் துறையில் பயன்மிக்க பொருள்களாகும். இவை மருந் துப் பொருள்களைத் தொகுப்பு முறையில் தயாரிக் கும்போது இடைநிலை வினைப் பொருள்களாகப் (intermediate) பெறப்படுகின்றன. ஆந்த்ரனிலிக் பயன்படுத்தித் அமிலத்தைப் (anthranilic acid) தொகுப்பு முறையில் சாயங்கள் தயாரிக்கப்படு கின்றன. எலும்புருக்கி நோயைக் (osteoporosis) கட் டுப்படுத்த p-அமினோசாலிசைலிக் அமிலம் (p-amino salicylic acid, PAS) தற்போது இன்றியமையாத தொரு மருந்தாகப் பயன்படுகிறது. காண்சு, புரோட்டீன்.

கோ.கோ.

நூலோதி

1. McGraw-Hill Encyclopaedia of Science and Technology, Vol 1, Fourth Edition, McGrawHill Book Company, New York, 1977.

2. Finar, I.L., Organic Chemistry, Vol II, Fifth Edition, ELBS, London, 1975.

3. Stryer, Lubert., Biochemistry, W.H. Freeman and Company, San Francisco, 1975.

அமினோ அமில நீரிழிவு

சிறுநீரில் ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் அமினோ அமிலங்கள் வெளியேறுவது அமினோ அமில நீரிழிவு (amino aciduria) எனப்படும். இயல்பான நிலையில் சிறுநீரக நுண்குழல்கள் (renal tubules), அமினோ அமிலங்களை மீண்டும் தம்மகத்தே உறிஞ்சிக் கொள் கின்றன. ஒரு நலமான மனிதன் ஒரு நாளில் ஒரு கிராம் அளவில் தனி அமினோ அமிலங்களையும், இரண்டு கிராம் அளவில் சேர்ம அமினோ அமிலங் களையும் (conjucated amino acids) சிறுநீரில் வெளி யேற்றுகின்றான்.

பேறுகாலத்திற்கு முன் (antenatal period) சில குறிப்பிட்ட அமினோ அமிலங்கள், குறிப்பாக திரி யோனின் (threonine), ஹிஸ்ட்டிடின் ( histidine) போன்றவை அதிக அளவில் சிறுநீரில் வெளியேறு கின்றன. திரியோனின் வெளியேற்றம் பேறுகாலம்