அறுகோணம் 641
N Z $ Σ அறுகோணம் 641 M m - படம் 18. குவார்ட்சுக் கனிமத்தோற்றம் 1019, 06 பக்கங்கள் f-1010,06 பக்கங்கள் Z 9 0111, 06 பக்கங்கள் 5 1121, 60 பக்கங்கள் X-0161,06 பக்கங்கள் P கூம்புப் பட்டக (1121) வடிவமும், வல நேர் சரிவகப் பட்டக (5161) வடிவமும் பெற்றமைந்துள்ளது. இவ் வகையான வலஞ்சுழி குவார்ட்சு (right handed quartz) நிலையச்சிற்கு இணையாக ஊடுருவிய ஒளிக் கதிரின் முனைவாக்கத் தளம் வலப்புறமாக சுழற்றப் படுவதினின்றும் அதேபோல் படம் 18 இல் உள்ள கனிமத்தில் ஒளிக்கதிரின் முனைவாக்கத் தளம் இடப் புறமாக சுழற்றப்படுவதினின்றும் இக்கனிமங்களின் வல, இடஞ்சுழித் தனமையினைக் கண்டறியலாம். அரையுருவ முக்கோணக் கால்முக பட்டக வடிவ வகுப்பு (trigonal tetartohedral hemimorphic class) (24) அல்லது சோடியம் பெர் அயோடேட்டு வகை, இது வழக்கிலிலுள்ள 32 படிக வகுப்புகளில் 24ஆவது வகுப்பாகும். நிலையச்சுக்கு இணையான ஒரே ஒரு முக்கோணச் - சமச்சீர்மை அச்சைத் தவிர வேறு சீர்மைத் தளங்களோ சீர்மை மையமோ எதுவும் கிடையாது. இதில் உருவாகும் வடிவங்கள் அனைத் தும் அரையுருவ (hemimorphic) வகுப்பிற்கு ஒத்த இயல்புகளைக் கொண்டு விளங்கும். இதில் முக்கிய மாக அரையுருவ முக்கோணப்பட்டகங்களும் கூம்புப் பட்டகங்களும் காணப்படுகின்றன. இவ்வகுப்பில் இயற்கையில் கிடைக்கக்கூடிய கனிமம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஆனால், செயற்கை யில் உருவாக்கப்பட்ட வேதியியல் சேர்மமான சோடியம் பெர் அயோடேட்டு இவ்வகுப்பிற்குரிய இயல்பில் படிகமாகிறது. காண்க, சோடியம்பெர் அயோடேட்டு. அ-சு-2-4! - ஞா.வி.இரா. - முதல்வகை அறுகோணப் பட்டகம் நேர்மறைச் சாய்சதுரப் பட்டசும் எதிர்மறைச் சாய்சதுரப் பட்டகம் முக்கோண வலக் கூம்புப் பட்டகம் நேர்மறை வலச் சரிவகப் பட்டகம் நூலோதி Book of 1. Dana, E.S., Ford, W.E., A Text Mineralogy, 4th Edition, Wiley Eastern Ltd., New Delhi, 1985. 2. Perelomova, N.V., Tagieva, M.M., Crystal Physics, Mir Publishers, Moscow, 1985. 3. Read, H.H., Rutley's Elements of Mineralogy, 26th Edition, First Indian Edition, CBS Publi- shers and Distributors, Delhi, 1984. 4. Flint, Y., Essentials of Crystallography, Mir Publishers, Moscow, 1985. அறுகோணம் எந்த மூன்று புள்ளிகளும் (vertices) ஒரே நேர் கோட்டிலமையாத ஆறு புள்ளிகளை இணைக்கும் ஆறு நேர்கோடுகளால் வரம்பிடப்பட்ட (bounded) அமைப்பு அறுகோணம் (hexagon) எனப்படும். அறு கோணத்தில் உள்ள இரண்டிரண்டு புள்ளிகளாக ஒரு தொடர்கோட்டினால் சேர்க்கப்பட்டும், அவ் லாறு சேர்க்கப்பட்டுள்ள இருகோடுகளுக்கிடையே யுள்ள கோணம் 180° -க்குக் குறைவாகவும் இருந் தால், இந்த அறுகோணம் ஒரு இயற்போக்கு அல்லது இயல்பான அறுகோணம் (simple hexagon) எனப் படும். இயல்பான அறுகோணத்தின் பக்கங்கள் சம மாக இருப்பின் அது ஒர் ஒழுங்கான அறுகோணம் (regular hexagon) ஆகும். ஒழுங்கான அறுகோணத்