பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமீன்கள்

பெறுகின்றன. சூழ்நிலை,உயிர் வாழ்வதற்குச் சாத கமாக மாறும்போது, அமீபா காப்பு உறையிலி ருந்து வெளிவந்து இயல்பாக வாழத் தொடங்கு கிறது. கூடுறைதல் முறையினால், அமீபா சூழ்நிலை யில் ஏற்படும் கடும் மாற்றங்களைத் தாங்கி உயிர் வாழ்கிறது.

நூலோதி

Ekambaranatha Ayyar, M., A Manual of Zoology Part I., S. Viswanathan Pvt. Ltd., Madras, 1976.

அமீன்கள்

இவை அம்மோனியாவில் பெறுதிகள்; அம்மோ னியா மூலக்கூறில் உள்ள ஹைட்ரஜனை அல்க்கைல் அல்லது அரைல் தொகுதிகளால் பதிலீடு செய்யும் போது கிடைப்பவையே அமீன்கள் (amines). அம் மோனியாவில் உள்ள ஹைட்ரஜனை அல்க்கைல் தொகுதியால் பதிலீடு செய்யப்பட்டுக் கிடைப்பவை அலிஃபாட்டிக் அமீன்கள் (aliphatic amines) என்

NH; RNH, + RX + RNH, X <NHX + R,NH -

றும், அரைல் பதிலீட்டால் கிடைப்பலை அரோமாட் டிக் அமீன்கள் (aromatic amines) என்றும் கூறப் படும். மெத்தில் அமீன், அனிலீன் போன்றவை முறையே அலிஃபாட்டிக், அரோமாட்டிக்அமீன் களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

அமீன்கள் பொதுவாக மூன்று வகையானவை. அம்மோனியாவில் உள்ள ஓர் ஹைட்ரஜன் மூலக் கூறை ஓர் அல்க்கைல் அல்லது அரைல் தொகுதியால் பதிலீடு செய்யும்போது ஓரிணைய அமீனும் (primary amine), இதேபோல் இரண்டாவது, மூன்றா வது ஹைட்ரஜன் அணுக்களைப் பதிலீடு செய்யும் போது முறையே ஈரிணைய அமீனும் (secondary amine) மூவிணைய அமீனும் (tertiary amine) கிடைக் கும். இவ்வமீன்களைத் தவிர நான்கிணைய அல்க்கைல் பெறுதிகளும் (quaternary aikyl derivatives) உள்ளன. இலை நான்கிணைய அம்மோனியா சேர்மங்கள் எனப்படும். மேற்கூறிய அமீன்களைக் கீழ்க்கண்ட பொது வாய்பாடுகளால் குறிக்கலாம்.

+ NH, NH,R, NHR,, NR,, (NR.J* X

இங்கு, R என்பது அல்க்கைல் அல்லது அரோமாட்டிக் தொகுதி; X - என்பது ஹாலோஜன்.

அமீன்கள் கரிமச் சேர்மங்களில் முக்கியமானவை களாக விளங்குகின்றன. அமீன்களிலுள்ள நைட்ரஜ னின் இணை எலெக்ட்ரான்கள் இச்சேர்மங்கள் பல வினைகளில் காரங்களாகவோ அல்லது அணுக்கரு விரும்பிகளாகவோ (nucleophiles) விளங்கக் காரண மாக உள்ளன. இவை உயிர் வேதியியலில் முக்கிய மான பங்கை வகிக்கின்றன. இயற்கையில் இவை அமினோ அமிலங்களிலும், அல்க்கலாய்டுகளிலும், வைட்டமின்களிலும் காணக்கிடைக்கின்றன.

தயாரிக்கும் முறைகள்

ஹாஃப்மன் முறை. மூவகை அமீன்களையும் இம் முறையில் தயாரிக்கலாம். இம்முறை அம்மோனியா வாற் பகுப்பு (ammonolysis) முறையாகும். ஓர் அல்க் கைல் ஹாலைடையும், ஆல்கஹாலில் கரைந்த அம் மோனியாவையும் ஓர் அடைத்த குழாயினுள் இட்டு 100°C வெப்பநிலைக்கு சூடுபடுத்தும்போது மூவகை அமீன்களும், குறைந்த அளவு நான்கிணைய அமீ னும் கிடைக்கின்றன.

NH; RX RINH X = NH,X + RgN-→ R,N X – RX + NH3 RNH, X + NH, < RNH, ẢNH X + RNH, X

கலாம். பிரித்தெடுத்தல். மூலகை அமீன்களையும் தனித் தனியே பிரித்தெடுக்க முதலில் அமீன் கலவையைப் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு கரைசலுடன் சேர்த்து வாலையில் காய்ச்சி வடிக்க வேண்டும். இவ்வாறு காய்ச்சி வடித்துக் கிடைக்கும் நீர்மத்தி லிருந்து மூவகை அமீன்களையும் ஹின்ஸ்பர்கு முறைப்படி(Hinsberg's method) தனித்தனியே பிரிக்

R,NH,+ X + KOH

→ R,NH + KX + H,O

ஹின்ஸ்பர்கு முறை. காய்ச்சி வடித்துக் கிடைக் கும் நீர்மத்தை முதலில் அரோமாட்டிக் சல்ஃபோ னில் குளோரைடுடன் (எ-டு. p- டொலுயின்-சல்ஃ போனில் குளோரைடு) சேர்த்து அமில குளோரை டாக மாற்றிப் பின்னர் பொட்டாசியம் ஹைட்ராக் சைடைச் சேர்த்துக் காரக் கரைசலாக மாற்ற வேண் டும். இதனால் ஓரிணைய அமீன்கள் N -அல்க்கைல்சல்போனமைடையும், ஈரிணைய அமீன்கள் N,N-இரு அல்க்கைல் - சல்போனமைடையும் கொடுக்கின்றன.

RX

43