அனார்த்தோகிளேசு 713
2.74 முதல் 2.76 வரையிலும் மாறுபடும், குழிந்த பிளவு முதல் சீரற்ற பிளவு வரையில் மாறுபடும்: வெள்ளை, சாம்பல், சிலப்பு நிறங்களில் காணப் படும். உராய்வுத்துகள் நிறமற்றது. இது ஒளி ஊடு ருவும் தன்மையிலிருந்து ஒளி கசியும் தன்மை வரை மாறும் இயல்புடையது. ஒரு ஒளியியலாக எதிர்மறை (optically negative) ஈரச்சு வகைக் கனிமம் ஆகும் (biaxial minerai). இதன் ஒளி மறைதல் கோணம் (001)C- அடியிணை வடிவப்பக்கச் சீவலில் 400 ஆகவும், குறுஇணை வடிவப்பக்கச் சீவலில் 38 ஆகவும் தோன்றும். ஒளி யியல் அச்சுகளுக்கு இடையிலுள்ள கோணம் (2V) 770 ஆகும், இதன் ஒளிவிலகல் எண் விரைவு அதிர்வு அச்சில் 1.575; இடை அதிர்வு அச்சில் 1.583; மெது அதிர்வு அச்சில் 1.588. இதன் ஒளிவிலகல் எண் இடை Oeuf (birefriengence) ஆல்பைட்டைவிட மானது. கிரிஸ்டியனைட்டு, தயார்சைட்டு, இண்டிய னைட்டு, சைக்ளோபைட்டு, லெபாலைட்டு, லேப் ரோடைட்டு ஆகியவை அனார்த்தைட்டின் வகைகள் ஆகும். அனார்த்தைட்டு, குறிப்பாகக் கார அனற்பாறை களில் இது காணப்படும். இந்த காரஅனற்பாறைகள் ஆழ்நிலைப் பாறைகளாகவோ எரிமலைப் படிவுக் ளாகவோ இருக்கும். ஆண்டிசைட்டு, பசால்ட்டு, டயோரைட்டு, கேப்ரோ, நோரைட்டு முதலான பாறைகள் அனார்த்தைட்டு பிளஜியோகிளேசைக் கொண்டுள்ளன. கிரைசோடைல் கனிமத்தைத் தலைமையாகக் கொண்ட பாறைகளிலும், உருமாறிய பாறையான ஆம்பிபோலைட்டிலும் இக்கனிமம் காணப்படுகிறது. இக்கனிமம் சில விண்வீழ் கற்களிலும் முக்கியக் கூறா கக் திகழ்கிறது. அனார்த்தைட்டு அதிகமாகக் கிடைக்கும் இடங் கள் வெசுவியஸ் எரிமலைப் படிவு. சைக்கிளோப் பியன் தீவுகள், சிசிலி, சுவீடன், பின்லாந்து ஆகி யவை. இந்தியாவில் சேலம் பகுதியில் இந்திய னைட்டு என்ற வகை அனார்த்தைட்டு கிடைக்கிறது. பயன். இது வெப்பம் தாங்கியாகப் பயன்படு கிறது. நூலோதி அ.வே.உ . 1. Dana, E.S., Ford, W. E., AText Book of Mine- ralogy, Wiley Eastern Limited, New Delhi, 1985. அ.க-2-90 க அனார்த்தோகிளேசு 713 2. கதிர்வேலு,கி., உலகத்தின் கனிம வளங்கள், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1973. அனார்த்தோகிளேசு இது ஃபெல்ஸ்ப்பார் தொகுதிக் கனிமங்களில் ஒரு வகை. இதன் வேதியியல் உட்கூறு (Nak) Al Si,06 எனப்படும். வேதியியலாக இது பிளஜியோகிளேசு ஃபெல்ஸ்பார் வகையான ஆல்பைட்டின் வேதிஉட் கூறை ஒத்திருக்கும். இதில் 10 விழுக்காட்டிற்கு K Al Si, O, குறைந்து காணப்பட்டால் அன்ஆல் பைட்டு (analbite) என அழைக்கப்படுகிறது. இதில் இரட்டுறல் சிறப்பாக உருவாகியிருந்தால், மைக்கு ரோகிளின் (microcline) என்ற ஃபெல்ஸ்ப்பாரின் ஒத்த பண்பை நுண்ணோக்கியின் உதவியால் காண முடியும். இது முச்சரிவுப் படிகத்தொகுதியின் கீழ்ப் படிகமாகிறது. வெப்பநிலைக்கு ஏற்றவாறு படிகக்கோணம் மாறுபடும். 86°C வெப்பநிலையிலி ருந்து 264°C வெப்பநிலையில் இது ஒற்றைச்சரிவு கொண்டதாக இருக்கும். ஆனால் வெப்பநிலை குளிரும் போது முச்சரிவுச் சமச்சீர்மையை அடையும். குறிப்பாக சிறிதளவு கால்சியம் கொண்ட அனார்த் தோகிளேசுக்கு இம்மாறுதல் பொருந்தும். ஏனைய ஃபெல்ஸ்ப்பார்களைப் போன்ற உரு கொண்டது. ஆர்த்தோகிளேசில் உள்ளது போன்றே இரட்டை களைக் கொண்டது. ஆல்பைட்டு, பெரிகிளின் கார்ல்ஸ்பாடு, பேவினோ விதிகளின்படி இரட்டை ஆகும். சிறப்பாக ஆல்பைட்டு, பெரிகிளின் விதி களின்படி இரட்டுறல் கொண்டு இயற்கையில் அதிகம் காணப்படும். பிளவு, கடினத்தன்மை, மிளிர்வு, நிறங்களில் ஃபெல்ஸ்ப்பார்த் தொகுதிக் கனிமங்களைப் போன்று இருக்கும். இதன் அடர்த்தி எண் 2.57 முதல் 2.60 வரை மாறுபடும். இது ஒளியியலாக எதிர்மறைக் கனிமமாகும். ஒளியியல் மறைவுக் கோணம் அடியிணைப் பக்கத் திற்கு 1° முதல் 6° வரையிலும் குற்றச்சு இணைப் பக்கத்திற்கு (010) 40 முதல் 10° வரையிலும் இருக் கும். ஒளிவிலகல் எண் விரைவு அதிர்வு அச்சில் 1.536: இடை அதிர்வு அச்சில் 1,539: மெது அதிர்வு அச்சில் 1.541 ஆகும்; ஒளிவிலகல் எண் இடைவெளி 0.005 ஒளியியல் அச்சுக்கோணம் 43° முதல் 54° வரையில் இருக்கும். ஒளியியல் அச்சுத்தளம் (010)க்கு ஏறக் குறைய செங்குத்தாக இருக்கும். இவை சோடா மிகுதியாக உள்ள அனற்பாறை களில் காணப்படும். குறிப்பாக சோடா ரயோ