பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓரிணைய, ஈரிணைய அமீன்கள் அமில குளோ ரைடுகள் அல்லது அமில நீரிலிகளுடன் வினைபுரிந்து N – அல்க்கைல் அமில அமைடைத் தருகின்றன.

RNH, + (CH,CO),O → CH,CONHR +CH_COOH

அமீன்கள் 45

மானிச் வினை. இவ்வினையில் ஓரிணைய அமீன் கள் பங்கேற்கின்றன. இவ்வினை பொதுவாக ஓர் அமீனுக்கும், ஆல்டிஹைடு (அல்லது கீட்டோன்) அதிக அணுக்கரு விரும்பும் கரி (nucleophilic carbon) அணுவைக் கொண்ட சேர்மத்திற்கும் இடையில் நடைபெறுவதாகும். பார்மால்டிஹைடும். டைமெத் தில் அமீனும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் ஆல்டிஹைடு, அமீனாகும். இவ்வினையின் மூலம் கிடைப்பவை மானிச் காரங்களாகும் (Mannich bases), இவை கரிமச்சேர்மத் தொகுப்பில் இடைநிலைப் பொருளாக விளங்குகின்றன.

C_H-CO-CH + HCHO + (CH,),NH+HCI V CH,-CO-CH,-CHt-N"(CH,),CIT

ஹாஃப்மன் மஸ்ட்டர்டு எண்ணெய் வினை. ஓரி ணைய அமீன்கள் கார்பன் டைசல்ஃபைடுடன் வினை புரிந்து டைதயோ கார்பமிக் அமிலத்தைக் (dithiocarbamic acid)கொடுக்கின்றன. இதனை மெர்க்குரிக் குளோரைடுடன் வினைப்படுத்தும்பொழுது அல்க் கைல் ஐசோதயோசயனேட் கிடைக்கிறது. இவ்வினை ஓரிணையு அமீன்களை கண்டறியும் சோதனையில்

பயன்படுகிறது. இவ்வினைக்கு ஹாஃப்மன் மஸ்ட் டர்டு எண்ணெய் வினை (Hofmann mustard oil reaction) என்று பெயர். (சமன்பாடு 1 காண்க)

ஹாஃப்மன் நீக்க வினை. நான்கிணைய மெத்தில் அம்மோனியம் ஹைட்ராக்சைடை வெப்பத்தாற் பகுக்கும்போது மும்மெத்தில் அமீனும்,மெத்தில் ஆல்க ஹாலும் கிடைக்கின்றன. குறைந்தது ஒரு தீ- ஹைட் ரஜனைக் கொண்ட மற்ற நான்கிணைய அல்க்கைல் அம்மோனியம் ஹைட்ராக்சைடுகள் வெப்பத்தாற் பகுக்கும்போது நீக்கவினை வழிமுறையில் (mehanism ) மூவிணைய அமீனும் அல்க்கீனும் கிடைக்கின்றன. இவ்வினைஹாஃப்மன் நீக்க (Hofmann elimination) என்று வழங்கப்படுகிறது.(சமன்பாடுகள் 2,3 காண்க) வினை

அரோமாட்டிக் அமீன்கள். அம்மோனியாவில் உள்ள ஹைட்ரஜனை அரைல் தொகுதியால் பதிலீடு செய்யும்போது உண்டாகும் அமீன்கள் அரோ மாட்டிக் அமீன்களாகும். இவ்வகை அமீன்களால் அமினோ தொகுதி பென்சீன் கரு வளையத்தில் நேரிடையாக இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். அனிலீன் (C,H,NH,), இருஃபீனைல் அமீன் ({C,H5)},NH), மூஃபீனைல் அமீன் ((C,H,), N) ஓரிணைய, ஈரிணைய மூவிணைய அரோமாட்டிக் அமீன்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். நான்கிணைய அம்மோனியம் உப்புகள் இவ் வகை உப்புகளில் பொதுவாகக் காணப்படுவதில்லை. எனினும் நான்கு தொகுதிகளும் அரைல் தொகுதி போன்றவை

R + R-N-CH-CH,-H Он எ" el RNH;+CS, → S=C< | R CH; H;C-N-CH,-CH,-CH, OH" | C;H, NHR SH Hg, Cl, RNCS + HgS+ 2 HCI CH, R R-N: + R CH₁ CH,-N-CH, CH, CH, + H,C=CH; (மிகுதியாகக் கிடைப்பது) H,C=CH, +H,O (2) CH-N + CH-CH=CH, + HgO CH₂-N | C,H, (குறைந்த அளவில் கிடைப்பது) (1) (3)