அஸ்ட்டிராய்டியா 749
கைகளின் ஓரங்களில் உள்ள பலமெல்லிய தகடுகளைக் கொண்ட (மடிப்புகளைக் கொண்ட) செங்குத்தான பள்ளங்கள் க்ரிப்ரிஃபார்ம் உறுப்புகள் (cribriform organs) எனப்படும். எ.கா., டீனோடி டிஸ்கஸ் (cteno- discus ) கோனியோபெக்டன். குடும்பம் 2, அஸ்ட்ரோபெக்டினிடே (astropectini- dae). இவை தட்டையாகவும், 5 ஆரச்சமச்சீரமைப் பையும், 5 ஆரங்களின் வாக்கில் அமைந்த 5 கைகளை யும் கொண்டுள்ளன. இவற்றின் கைகளின் ஓரங் களில் செங்குத்தான முட்கள் உள்ளன. எ.கா, அஸ்ட்ரோபெக்டன். குடும்பம் 3. லூய்டிடே (luididae). இவை நீளமான வளைதிறன் மிகுந்த கைகளையும் சிறிய மையத் தட்டையும் கொண்டுள்ளன. இவற்றிற்கு 6 முதல் 11 கைகள் உண்டு. எ.கா., லூய்டியா (luidia). . குடும்பம் 4. பெந்தோபெக்டினிடே (benthopecti nidae). இவை ஆழ்கடலில் (deep sea) வாழ்வன. இவற்றின் கைகள் மெலிந்து நீண்டு வளைதிறன் மிக்கலையாக உள்ளன. எ.கா., பெக்டினாஸ்டர். பெந்தோபெக்டன், லூய்டாஸ்டர் (luidaster). குடும்பம் 5. ஓரியாஸ்டெரிடே (oreasteridae). இவை அகன்ற உடலுடையவை. இவற்றின் கைகள் அகன்ற அடிப்பகுதியை யுடையவை. இவை கடலின் இரு நூறு மீட்டர் ஆழம் வரை உள்ள அடித்தளத்தில் (floor) காணப்படுகின்றன. எ.கா, ஓரியாஸ்டர், ஆஸ்ட்டிரோடிஸ்கஸ் (asterodiscus). குடும்பம் 6. லிங்க்கிடே (linckiidae). இவற்றில் சிறிய மையத் தட்டும் நீளமான வளைதிறனுள்ள கைகளும் உள்ளன. எ.கா., விங்க்கியா. . வரிசை 5. ஸ்பைனுலோஸா (spinulosa). இவற் றின் ஓரத்தகடுகள் பொதுவாகச் சிறியனவாக இருப் பினும் சிலவற்றில் தெளிவாகத் தெரியும். வாய் எதிர்ப்பக்கச் சட்டகம் (aboral skeleton) வலை போன்று (reticulate) அமைந்து, கூட்டமாக அமைந் துள்ள குட்டையான முட்களைக் கொண்டுள்ளது. ஆம்புலேக்ரல் முட்கள் வாயில் உள்ளன. குழாய்க் கால்கள் இரட்டை வரிசைகளாக உள்ளன. அவற்றில் ஒட்டுறிஞ்சிகள் உண்டு. இடுக்கி உறுப்புகள் பெரும் பாலும் இருப்பதில்லை. இவ்வரிசையில் உள்ள 3 குடும்பங்கள் கீழே தரப்பட்டுள்ளன. குடும்பம் 1. ஆஸ்ட்டரினிடே (asterinidae). இவற் றில் வாய் எதிர்ப்பக்கச் சட்டகம் குட்டையான முட்களைக் கொண்டுள்ளது. இடுக்கி உறுப்புகள் இல்லை.எ.கா., ஆஸ்டரைனா, ஆன்சரபோடோ anseropoda) (அ) பால்மைபஸ் (palmipes குடும்பம் 2. எக்கினாஸ்டெரிடே. இவை சிறிய மையத் தட்டையும், 5 மெலிந்த உருளை வடிவமான அஸ்ட்டிராய்டியா 749 கைகளையும் உடையவை. எ.கா., எக்கினாஸ்டர், ஹென்ரிசியா, (benricia) குடும்பம் 3. ஸோலாஸ்டெரிடே. இவை பல ஆரங் களின் வாக்கில் சமச் சீரமைப்புள்ளவை. இதனால் இவை பார்ப்பதற்குச் சூரியன் போன்று தோற்ற மளித்தலால் இவற்றுக்கு இப்பெயர் ஏற்பட்டது. எ.கா. ஸோலாஸ்டர், க்ரோனோஸ்டர் (cronaster). வரிசை 6. ஃபோர்சிபுலேட்டா (forcipulata). இவை சிறிய மையத் தட்டையும் நீண்ட மெலிந்த கைகளை யும் உடையவை. கைகளின் ஓரங்கள் தெளிவாக இல்லை. ஓரத்தகடுகள் (marginal plates) தெளிவற்ற குச்சிகளைப் போன்றுள்ளன. வாய் எதிர்ப்பக்கச் சட்டகத்தில் வலை பின்னியது போன்றமைந்த தெளி வான முட்கள் உள்ளன. தண்டுடைய இடுக்கி உறுப் புகள் (pedunculate pedicellatia) உள்ளன. இவற்றின் தாடைகள் சாய்வாகவோ, நேராகவோ உள்ளன. வாயைச் குழ்ந்து கொண்டு ஆம்புலேக்ரல் முட்கள் உள்ளன. தோல் செவுள்கள் உடல் முழுதும் பரவி யுள்ளன. குழாய்க்கால்களில் எளிய பிதுக்கங்கள் உள்ளன. குழாய்க் கால்கள் 2 அல்லது 4, 5 வரிசை களாக உள்ளன. இவ்வரிசையில் உள்ள 3 முக்கிய குடும்பங்கள் கீழே தரப்பட்டுள்ளன. குடும்பம் 1. ப்ரிசிங்கிடே (brisingidae). இவை ஆழ்கடல் விலங்குகள் ஆகும். இவற்றின் கைகள் முள்ரோமங்களைக் (bristles) கொண்டிருக்கும். அவை மெலிந்த கைகள். எ.கா, ப்ரிஸிங்கா, ப்ரிஸி னாஸ்டர் (brisynaster). குடும்பம் 2. ஹீலியாஸ்டெரிடே. இவற்றின் மையத் தட்டு மிக நீளமானது. அதிலிருந்து 20 முதல் 44 மெலிந்த கைகள் புறப்படுகின்றன. எ.கா..ஹீலி யாஸ்டர். குடும்பம் 3. ஆஸ்ட்டரிடே. இவை உண்மையான நட்சத்திர மீன்கள். எ.கா., ஆஸ்டரியாஸ். இவற்றில் ஆஸ்ட்டிராய்டு முள்தோலிகளின் பொதுப்பண்புகள் அப்படியே உள்ளன. சில ஆர்வமூட்டும் அஸ்ட்டிராய்டுகள் டீனோடிஸ்கஸ் (ctenodiscus). இவ்வுயிரி சேற்று நட்சத்திரம் (mud star) என்றழைக்கப்படுகிறது. இது குளிர்ச்சியான வடதுருவக் கடலிலிருந்து கலி போர்னியா, காட்முனை (cape of cod), ஜப்பான் வரை உள்ள கடல்களின் ஆழம் குறைந்த பகுதிகளில் வாழ்கிறது. இதற்கு உடலின் ஓரத்தில் ஓரத் தகடுகள் (marginal plates) உண்டு. முட்கள் இல்லை. வாய் எதிர்ப்பக்கத்தில் உள்ள சுவர் போன்ற சவ்வில் பாக் சில்லாக்கள் உள்ளன. அச்சவ்வின் நடுவில் இருந்து கூம்பு வடிவமான எபிப்ரோக்டல் கூம்பு நீட்சி தொடங்குகிறது. குடல், குடல்பை (intestinal caecam),