760 அஸ்ட்டரோபெக்டன்
760 அஸ்ட்டரோபெக்டன் வளையத்திலிருந்து கைக்கொன்றாகத் தொடரும் கால்வாய் ஆர ஆம்ப்புலேக்ரல் குழல் எனப்படும். அக்குழலிலிருந்து புறப்படும் பக்கக்கிளை ஒவ்வொன் றும் ஒவ்வொரு குழாய்க்காலைச் சென்றடையும். அஸ்டிரோபெக்டனின் குழாய்க்காலில்ஓர் அகன்ற பிதுக்கமும் (ampulla), அதனை அடுத்து ஒரு கூம்பு வடிவ நீண்ட இழையும் உண்டு. இவற்றில் உறிஞ்சி என்னும் குழல் இல்லை. பக்கக்கிளைகளுக்கும் ஆர ஆம்புலேக்ரல் குழல்களுக்கும் இடையில் உள்ள அடைப்பான்கள் தண்ணீரை ஆர ஆம்ப்புலேக்ரல் குழல்களுக்குத் திரும்பிவிடாதபடி தடுக்கின்றன. ஆம்பு லேக்ரல் வளையத்தின் ஒவ்வோர் இடை ஆரத்திலும் ஒரு பெரிய பை போன்ற போலியன் பையும் (polian vesicle), அதன் அருகிலேயே சில சிறுபைகளான டீட் மேன் உறுப்புக்களும் (tiedmann's bodies) உள்ளன. இவை நீர்க்குழல் மண்டலத்திலுள்ள திரவத்துக்குச் சேமிப்புப் பைகளாகப் பயன்படுவதோடு மட்டு மின்றி அமீபோசைட்டுகள் என்னும் செல்களையும் உண்டாக்குகின்றன. அஸ்ட்ரோபெக்டனில் கல் கால் வாய் மிகச் சிக்கலான அமைப்பைக் கொண்டுள்ள தற்குக் காரணம் அதன் உட்புறம் ஒரு மிகச் சிக்க லான மேடு வளர்ந்திருப்பதேயாகும். நீர்க்குழாய் மண்டலம் கடல் நீரை உள்ளிழுத்து வெளியேற்று வதனால் இடப்பெயர்தலுக்கு வகை செய்கிறது. உணவூட்டம். இது நட்சத்திர மீன், சிப்பிகள், நத்தை கள் ஆகியவற்றை உண்ணுகிறது. இதன் வாய் நன்கு விரியத்தக்கது. வாயிலிருந்து புறப்படும் உணவுக் குழல் அகன்ற பை போன்ற இரைப்பையுடன் சேருகிறது. இதிலிருந்து மேல் நோக்கித் தொடரும் குறுகிய குடல் பக்க இரைப்பையிலிருந்து ஒவ்வொரு கையினுள்ளும் இரு குடல் பக்கச் சுரப்பிகளாகத் (pyloric caece) தொடர்கின்றது. குடல் பக்க இரைப் பையிலிருந்து குறுகிய குடல் மேல் நோக்கி நீண் டுள்ளது. இதனுடன் மூன்று குடல் சுரப்பிகள் இணைந்துள்ளன. இரைப்பை, குடல் ஆகியவற்றின் சுரப்பிகள் சீரான நொதிகளை உண்டாக்குகின்றன. மலப்புழை இல்லாததால் சீரணிக்கப்படாத பொருள் கள் வாய் வழியே வெளியேற்றப்படுகின்றன. அது சிப்பிகளைக் கைகளால் பற்றிக் கொண்டு அவற்றின் ஓடுகளைத் திறப்பதும், தனது இரைப்பையை வெளியில் தள்ளிச்சிப்பியினை மூடி உண்பதும், புறச் சீரண முறையும், உண்டபின் இரைப்பையை உள் இழுத்துக் கொள்வதும் குறிப்பிடத்தக்கவையாகும். சுவாசம். தோளின் மேல் உள்ள தசைப்புடைப்பு களில் (dermal papulee) சவ்வுகள் வழியே சவ்வூடு பரவுதல் முறையில் நீரில் உள்ள ஆக்சிஜன் எடுத்துக் கொள்ளப்பட்டு, உடலிலிருந்த கார்பன்டை முக்கோணக்கை ஓர முட்கள் ஓரத் தகடுகள் -சுண்ணத் தகடுகள்
இரட்டைக் கை கால்வாய்த்தட்டு மைய மயத்தட்டு உணர்நீட்சிக்கண் குழாய் கால்கள் ஆம்புலேக்ரல் பள்ளம் ஆம்புலேக்ரல் முட்கள் இடை ஆம்புலேக்ரல் பரப்பு குழாய்க்கால்கள் பெரிஸ்டோம் வாய் படம் 1. வாய் எதிர்ப்பக்கத் தோற்றம் பிளவு படம் 2. வாய்ப்பக்கத் தோற்றம்