பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படம் 4. முதல்கட்டம் குத்துநிலையிலும் இரண்டாம் கட்டம் கிடைநிலையிலும் உள்ள கோணவா.க அமுக்கியின் வெட்டுமுகப்படம்

நடைமுறை அமுக்கி மேற்கூறிய இரண்டு கோட் பாட்டுச் செந்தரங்களுக்கும் இடைப்பட்ட நிலையில் செயல்படுவதைக் காணலாம் (படம் 5).சமவெப்ப நிலை அமுக்கத்தில் குளிர்தல் முழுமையாக நிகழும். அதாவது காற்று, நுழைவாயின் வெப்பநிலையிலேயே மாறாமல் இருக்கும். அமுக்கிக்குத் தரப்படும் ஆற்றல் ABCD என்ற பரப்பால் அளக்கப்படும். இது மிகவும் குறைவாகவே இருக்கும். வெப்பம் ஊரா அமுக்கத் தில் குளிர்வித்தலே இருக்காது. எனவே அமுக்கத்தின் போது தொடர்ந்து வெப்பநிலை உயரும். இந்நிலை யில் வளிமம் சமவெப்பநிலை அமுக்கத்தைவிட வேகமாக வெளியேற்ற அழுத்தத்தை அடையும். ஒவ் வோர் உலக்கை அல்லது அழுந்துருள் அடியின் போதும் காற்றின் அழுததம் அதிகமாவதால் இதற் குத் தேவையான பணியைச் செய்யக் கூடுதலாக ஆற்றல் தேவைப்படும். இது ABCE-ஆல் காட்டப் பட்டுள்ளது. (காண்க, வெப்ப இயங்கியல் நிகழ்வுகள்) அமுக்கம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்டங்களில் நிகழ்த்தப்பட்டால் இந்தக் கட்டங்

களுக்கு நடுவில் காற்றைக் குளிர்விக்கலாம். இந்த இடைக்குளிர்விப்பு நிகழ்வு இடைநிலை நடை முறை அமுக்கக் கோட்டை மறுபடியும் வெப்பநிலைக் கோட்டிற்கு அருகில் கொண்டு செல்லும், BCDE என்ற பறப்பு பேணப்பட்ட அல்லது மிச்சம் பிடிக் கப்பட்ட திறனைக் காட்டுகிறது. அமுக்கியில் நுழை காற்றில் கலந்துள்ள நீரின் ஆவி, மிகைச்சூடாக்கிய ஆவியாக (super heated vapour) வெளியேறும். இதற் குக் காரணம் அதனுடைய அழுத்தத்திற்கு ஈடான வெப்பநிலையைவிட அதிகமாக உள்ள வெப்ப நிலையே. இந்த ஆவியை நீராக்க, இந்த அழுத்தத் திற்கு ஈடான தெவிட்டல் வெப்பநிலைக்கும் கீழாகக் காற்றைக் குளிர்விக்க வேண்டும். அமுக்கியைவிட்டு வெளியேறும் காற்றை உடனடியாகக் குளிர்வித்தல், அமுக்கக் காற்றிலுள்ள ஆவி, பகிர்வு அமைப்புகளுக் குச் (distribution system) செல்லாதபடித் தடுக்கிறது. இதற்கு நீர் அல்லது காற்றால் குளிர்விக்கும் வெப்பப் பரிமாற்றக் கலன்கள் பயன்படுகின்றன. இவற்றைப் பின்குளிர்விக்கும் கலன்கள் (after-coolers) என்பர்.

வழக்கமாக ஒருகட்ட ஊடாட்ட அமுக்கிகள் ஒரு சதுர அங்குலத்திற்கு 150 பவுண்டு அழுத்தத்துக்கு அமுக்கப் பயன்படுகின்றன. இரு கட்ட முக்கிகள் சதுர அங்குலத்துக்கு 500 பவுண்டு அழுத்தம் வரை யிலும், 4,5 கட்ட அமுக்கிகள் சதுர அங்குலத்துக்கு 15,000 பவுண்டு அழுத்தம் வரையிலும் அமுக்கும்படி வடிவமைக்கப்படுகின்றன.

அழுத்தம் . அழுத்தம் C B H D E D நடைமுறை சமவெப்பநிலை பருமன் வெப்பம்ஊரா ய சமவெப்ப நிலை பருமன்

படம் 5. அமுக்க வளைவுகள்

அ.கோட்பாட்டு, நடைமுறை அமுக்கிகள் ஆ. இடைக்குளிர்த் தலால் ஏற்படும் விளைவு

அமுக்கிகள் 51