ஆட்டு மான் 849
திரைகளுடன் காணப்படுகின்றன. இவை வேகமாக இடம்விட்டு இடம் செல்லும் ஆற்றலு டையவை. குன்றுகளில் மட்டுமல்லாமல் சமவெளி களிலும் சுறுசுறுப்பாக இயங்குபவை. பெண் ஆட்டு மான் பொதுவாக ஒரு முறைக்கு ஒரு குட்டி யும், சில வேளைகளில் இரண்டு குட்டிகளும் ஈனும். இமயமலைப் பகுதியில் அக்டோபர் மாத இறுதியில் இணைவிழைச்சுக் காலம் (rut) தொடங்குகிறது. இவற்றின் கருவளர் காலம் ஏறக்குறைய ஏழு மாதங் கள். மே அல்லது ஜூன் மாதங்களில் குட்டிகள் பிறக்கின்றன. பர்மாவில் செப்டம்பர் மாத இறுதி யில் குட்டிகள் பிறக்கின்றன. கோரல். இதன் உயிரியல் பெயர் நிமோரீடஸ் கோரல் (nomorhaebus goral) என்பது. இமயமலைப் பகுதி யில் கோரல் ஆட்டு மான்கள் 900 மீ. முதல் 2750 மீட்டர் உயரம் வரையிலுள்ள இடங்களில் வாழ் கின்றன என்றாலும் 3950 மீ. முதல் 4350 மீ. உய ரம் வரையிலும் அவற்றைக் காணலாம். அரக்கான் (Arakan), சின் (Chin) குன்றுகளில் 900 மீ. உயரத் திற்கு மேல் உள்ள இடங்களில் காணப்படுகின்றன. இமயமலை வாழ் விலங்கினங்களில் கோரல் நன்கு அறியப்பட்ட விலங்காகும். மலைப் பகுதியில் மனி தர்கள் வாழும் இடங்களில் இவை அடிக்கடி காணப் படுகின்றன. நான்கு முதல் எட்டு கோரல் ஆட்டு மான்கள் அடங்கிய கூட்டங்களைக் கோரைப்புற்கள் ஆட்டு மான் 849 நிறைந்த இடங்களிலும், பாறைகள் நிறைந்த இடங்களிலும் காலையிலும் மாலையிலும், மேக மூட்டமுள்ள நாள்களில் பகல் முழுதும் இவற்றைக் காணலாம். இவை தோள்மட்ட அளவில் 65 செ.மீ. முதல் 70 செ.மீ. வரை உயரம் உடையவை. இவற் றின் எடை 25 கி.கி. முதல் 30 கி.கி. வரை இருக் கும். கொம்புகளின் நீளம் பொதுவாக 13 செ.மீ. கோரல், ஆடுபோன்ற உருவமைப்புடையது. இதன் கழுத்தின் மேல்புறம் முரட்டு மயிர்கள் ஒரு சிறிய திட்டுப் போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. கோரலுக்குக் குட்டையான பின்னோக்கி வளைந்த கொம்புகள் உள்ளன. அவை வளையங்கள் அல்லது முகடுகளுடன் காணப்படுகின்றன. இமயமலைப் பகுதிகளில் வாழும் கோரல் ஆட்டு மான்கள் மே முதல் ஜூன் வரை குட்டிகள் ஈனும். இந்திய எல்லைக்குள் சாம்பல் கோரல் (gray goral), பழுப்பு கோரல் (brown goral) என இரு வகைக்கோரல் ஆட்டு மான்கள் வாழ்கின்றன. இவற் றுள் சாம்பல் கோரல் வகை காஷ்மீரிலும் இமயத் தின் மேற்குப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இதன் உயிரியல் பெயர் நிமொரீடஸ் கோரல் கோரல் (nemor- haedus goral goral) என்பது.பழுப்புநிற கோரல் வகை நேபாளம், சிக்கிம் ஆகிய பகுதிகளில் காணப்படு கிறது. இதன் உயிரியல் பெயர் நிமொர்டஸ் கோரல் கோரல் 21.8-2..54