உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/894

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

864 ஆடுகள்‌

864 ஆடுகள் 7) வெள்ளாட்டின் சாணம் ஒரு சிறந்த உரமா கும். மண் வளத்தை உயர்த்துவதில் இவ்வெரு பெரிதும் பயன்படுகின்றன. 8) வெள்ளாட்டினை மற்ற கால்நடைகளுடன் ஒப்பிடும்போது அவற்றிற்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். முக்கியமாக என்புருக்கி (tuberculosis) நோய் இவற்றை அணுகுவதில்லை. வெள்ளாட்டினங்கள் அயல்நாட்டினங்கள். ஆல்ப்ஸ் இனம். இவ்வினம் நாட்டின் ஆல்ப்ஸ் மலைப் பிரதேசங்களில் காணப்படும். இவ்வின ஆடுகள் வெவ்வேறு நிறங்களைக் கொண்டும், காது கள் குத்திட்டும். கொம்புகள் உடையனவாகவும் உள்ளன. ஒரு வளர்ந்த கிடா சுமார் 65 கி.கி. இலி ருந்து 80 கி.கி எடையும், பெட்டை ஆடு சுமார் 50 கி.கி இலிருந்து 60 கி.கி எடையும் இருக்கும். ஃப்ரான்சு, சுவிட்சர்லாந்து நியுபியன் (nubian). இவ்வாட்டினத்தை ஆடு களின் 'ஜெர்சி' எனக் கூறுவர். நியுபியன் இனத் தின் பாலில் கொழுப்பு அதிகமாக இருக்கும். இவ்வினத்தை 'ஆங்கிலோ நியூபியன்' என்றும் அழைப்பதுண்டு. இவ்வின ஆடுகள் வெள்ளை, கருப்பு அல்லது சிலப்பு நிறத்தை உடையன. சானன். இவ்வினம் சுவிட்சர்லாந்து நாட்டில் சானன் பள்ளத்தாக்கில் தோன்றியது. இது பெரும் பாலும் வெள்ளை நிறத்தையுடையது. இவ்வினத் தின் வளர்ந்த கிடா சுமார் 65கி.கிஇலிருந்து 80 கி.கி எடையும். பெட்டையாடு சுமார் 50 கி.கி இலிருந்து 60 கி.கி எடையும் உடையன. இவ்வின ஆடுகள் ஒரு நாளைக்குச் சுமார் இரண்டிலிருந்து ஐந்து கிலோ வரை பால் கொடுக்கக் கூடியவை, டோகன்பர்க். இல்லினமும் சுவிட்சர்லாந்து நாட்டில் தோன்றிய ஒன்றாகும். அமெரிக்க நாட்டில் பால் உற்பத்திக்கு மிகவும் பிரபலமான வெள்ளாட் டினம் இது. இவ்வின ஆடுகளின் முகத்தில் வெண் ணிற அல்லது வெளிர் பழுப்பு நிறக் கோடு காணப் படும். இவ்வின ஆடுகள் அனைத்தும் கொம்புகள் கொண்டவை. இவ்வினக் கிடா சுமார் 65 கி.கி. இலி ருந்து 80 கி.கி எடையும், பெட்டை ஆடு 50 கி.கி இலிருந்து 60 கி.கி எடையும் உடையன. இவை பால் கொடுக்கும் திறனுக்கு மிகவும் பெயர் பெற்றவை. நம் நாட்டின் வெள்ளாடுகள் ஜம்னபாரி இனம்.இவ்வின வெள்ளாடுகள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கங்கை, யமுனை, சம்பல் நதிப் பள்ளத்தாக்குகளில் அதிகம் காணப்படு கின்றன. இவை அதிக பால் கொடுப்பது மட்டு மின்றி, சிறந்த இறைச்சியும் கொடுக்கக் கூடியவை. இவை பார்ப்பதற்கு மிக அழகாகவும், காதுகள் நீள மாகவும், மடிந்தும் இலைகளைப் போல் தொங்கிக் கொண்டும் காணப்படும்; நாட்டுப் புறங்களிலும், மலைப் பகுதிகளிலும் நன்கு வளரக் கூடியவை. ஓர் ஆண்டிற்குச் சுமார் 600 கி.கி அளவு பால் அளிக்க வல்லன. இவை கொடுக்கும் பாலில் கொழுப்புச் சத்தும் அதிகம். பார்பாரி. இவ்வின வெள்ளாட்டினமும் பால் உற்பத்திக்குப் பெயர் பெற்றது. இவை உத்தரப் பிரதேச மாநிலத்தில் எட்டாவா, ஆக்ரா, மதுரா போன்ற மாவட்டங்களில் அதிகம் காணப்படு கின்றன. இவ்வின ஆடுகள் கொட்டில்களில் வைத்து வளர்ப்பதற்கும் சிறந்தவை. இவை உழவர்களது குடும்ப நண்பனைப் போல் வளர்க்கப்படுகின்றன; ஆண்டிற்குச் சுமார் 250 கி.கி இலிருந்து 300 கி.கி. வரை பால் அளிக்கவல்லன. பீடல். இவ்வின ஆடுகள் பஞ்சாப் மாநிலத்தில் பொதுவாகக் காணப்படுகின்றன. இவை பல்வேறு நிறங்களைக் கொண்டவை. கிடா ஆடுகள் வளைந்த கொம்புகளை உடையவை; நாளொன்றுக்குச் சுமார் 2 கி.கி இலிருந்து 3 கி.கி பால் அளிக்கக் கூடியவை. நன்கு பராமரித்து வளர்த்தால் அதிக அளவு பால் அளிக்கும் திறன் பெற்றவையாகும். சூர்தி. இவ்வின ஆடுகள் குஜராத் மாநிலத்தில் அதிகம் காணப்படுகின்றன. இவை அளவில் சிறி யவை. வெண்ணிறத்தையுடையவை. நாளொன்றுக் குச் சுமார் ஒன்றிலிருந்து இரண்டு கி.கி பால் அளிக் கக்கூடியவை. காஷ்மீரி. இவ்வின வெள்ளாடுகள் காஷ்மீரத் திலும் திபெத்திலும் அதிகம் உள்ளன. இவை மிகக் கடுமையான குளிரினையும் தாங்கக் கூடியவை; வெண் ணிறத்தையோ கருமை நிறத்தையோ உடையவை; வளைந்த கொம்புகளையும், நீண்ட காதுகளையும் உடையவை. இவை 'பாஷீமா' எனப்படும் மெல்லிய கம்பல இழைகளைத் தருகின்றன. இவற்றின் உரோமம் உறுதியான கயிறுகளைச் செய்யப் பயன் படுகின்றது. காடி. சம்பா. இவை இமாசலப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளன. வை நீண்ட தூரம் நடந்து செல்லும் திறன் உடையவை. இவ் வின ஆடுகள் சுமைகளைச் சுமந்து செல்லவும் பயன் படுத்தப்படுகின்றன. மார்வாரி. இவ்வின ஆடுகள் இராஜஸ்தானில் மார் வார் பகுதியில் அதிகம் வளர்க்கப்படுகின்றன. இவை மிகவும் வலுவுள்ளவை. அதிக நோய் எதிர்ப் புச் சக்தியையும் உடையவை. உஸ்மானாபாடி. ஆந்திர மாநிலத்தில் உஸ்மானா பாத் மாவட்டத்தில் வை அதிகம் வளர்க்கப்