பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுங்கியல்புப் பாய்வு

கொள்ளும் உறலைப் பெர்னௌலி சமன்பாடு (Bernoulli's Equation) இணைக்கின்றது. (P +}pV') எனும் கூட்டளவு மாறிலி. இதில் p பாய்மத்தின் மாறா அடர்த்தி அழுத்தத்தினால், கலத்தின் சுவரில் ஏற் படும் விசையை இதிலிருந்து கணக்கிடலாம். பாய்மத் தின் பிசுப்பு, உராய்வு இரண்டினாலும் ஏற்படும் அழுத்த விளைவுகளும் அதனால் கலச்சுவரில் ஏற்படும் கூடுதல் விசையும் ஆராயப்பட வேண்டும்.

பிசுப்புவிசை (viscous force), உறழ்விசை (inertia force) ஆகியவை ஒரு பாய்மத்தின் பாய்வுப் பண்பு களில் ஏற்படுத்தும் விளைவுகளை இரேனால்டு எண் உணர்த்தும். காண்க, இரேனால்டு எண்; பிசுப்புப் பாய்வுப் பெர்னெளலி சமன்பாடு.

- நா. சா,

நூலோதி

1. நாகரத்தினம், எஸ்., பாய்ம எந்திரவியல், முதற் பதிப்பு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை. 1974.

2. Calvin, Victor Davis, Sorensen, Kenneth E. Handbook of Applied Hydraulics, 3rd Edition, McGraw-Hi]l Book Company, New York, 1970.

அமுங்கியல்புப் பாய்வு

மாறும் அடர்த்தி உள்ள பாய்வே இது. காற்றுவெளி இயக்க நிகழ்வுகளில் பாய்வு விரைவு (velocity)மிகவும் அதிகமாக இருந்தால், அப்பாய்வை அமுங்கியல் புடையதாகக் (compressible} கருதிப் பகுப்பாய்வு (analysis) செய்ய வேண்டும். செந்நிலைக் காற்றியக் கியலில் (classical aerodynamics) செய்வதைப்போலப் பாய்மத்தை அமுங்காத பாய்மமாகக் (fluid) கருதிச் செய்யும் பகுப்பாய்வு இங்குப் பொருத்தமற்றதாகி விடுகிறது. அமுங்கியல்புப் பாய்வில் ஒலிவிரைவு (sonic velocity) பெரும் பங்கு வகிக்கிறது. குறைந்த வேகங் களில் பாய்மத்தின் இயக்கம் ஏற்படுத்தும் வெப்ப நிலை, அடர்த்தி ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள் தள்ளத்தக்க அளவினவே. ஆனால் வேகம் அதிகரிக் கும் போது பாய்ம இயக்கம் கணிசமான அளவுக்கு வெப்பநிலை, அடர்த்தி வேறுபாட்டை ஏற்படுத்து கிறது. எனவே, இத்தகைய நிகழ்வுகளின் பகுப்பாய் வுக்குச் செந்நிலைப் பாய்ம இயக்கவியலோடு (classicai fluid mechanics) வெப்ப இயங்கியலும் (thermodynamics) தேவைப்படுகிறது. காண்க, காற்று வெப்ப இயங்கியல் (aerothermodynamics).

அமுங்காத பாய்மத்துக்கும் அமுங்கும் பாய் மத்துக்கும் உள்ள வேறுபாடு ஒலி விரைலைச் சார்ந் தமைகிறது. அமுங்காத பாய்மத்தில் அழுத்தம் உட னடியாகப் பரவும். அமுங்கியல்புப் பாய்மத்தில் அழுத்தம் குறிப்பிட்ட விரைவில் பரவுகிறது. அதாவது, இந்தப் பாய்மத்தில் ஏற்படுத்தப்படும் ஒவ் வொரு சிறு குலைவும் ஒலியின் விரைவில் பரவுகிறது.

பாய்வின்போது ஏற்படும் அழுத்த வேறுபாடு உருவாக்கும் பருமன் வேறுபாடு, அதே அழுத்த வேறு பாடு உண்டாகும் விரைவு லேறுபாட்டின் (variation of velocity) பருமைக்குச் (magnitude) சமமாக இருக்கும்போது, காற்றுவெளி இயங்கல் நிகழ்வுகளில் பாய்மத்தின் அமுங்கியல்பு ஏற்படுத்தும் விளைவுகள் மிகவும் இன்றியமையாதவை. பருமனில் ஏற்படும் சிறு மாற்றத்துக்கும் அதாவது, A vpv - க்கும் விரைவில் ஏற்படும் சிறு மாற்றத்துக்கும் அதாவது \u/u - க்கும் உள்ள விகிதம், பாய்ம விரைவின் இருபடிக்கும் ஒலி விரைவின் இருபடிக்கும் உள்ள விகிதத்துக்கு, அதாவது 2 (உ) -க்குச் சமமாக இருக்கும். இங்கு & என்பது ஒலிவிரைவு; u என்பது பாய்ம விரைவு; v என்பது பருமன். எனவே, பாய்வின் விரைவு, ஒலியின் விரைவுக்குச் சமமாக இருந்தால் பருமன் வேறுபாடு விரைவு வேறுபாட்டுப் பருமைக்குச் (magnitude) சமமாக இருக்கும். எனவே உயர்வேகப் பாய்வில் ஏற் படும் விரைவு மாற்றங்கள் பாய்மத்தில் மிகுந்த அடர்த்தி மாற்றங்களை உருவாக்குகின்றன.

பாய்ம் விரைவுக்கும் அவ்விடத்தில் பரவும் ஒலியின் விரைவுக்கும் உள்ள தகவு (ratio) அல்லது விகிதம் மேக் எண் ஆகும். மேக் எண் அமுங்கியல்பின் சுட்டெண் (index) எனலாம். பாய்வுப்புலத்திலுள்ள அடர்த்தி வேறுபாட்டு விளைவுகளின் அளவாக இது அமைகிறது. காற்றியங்கல் பாய்வுக் கணக்குகளில் அமுங்காமையைப் பயன்படுத்தல் காற்றியங்கு அளவு களில் (M2) %அளவிற்குப் பிழையை

உருவாக்கு கிறது. இங்கு Mo என்பது பாய்வின் மேக் எண், காண்க, அதிஒலி விரைவுப் பயணம்.

நூலோதி

1. David Burghardt, M., Engineering ThermodynaApplications, Harper & Row Publishers, New York, 1978. mics with

2. நாகரத்தினம், எஸ். பாய்.ம எந்திரவியல். முதற்பதிப்பு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை 1974.

60