ஆந்த்தோசோவா 901
அ ஆந்த்தோசோவா 901 ஆ அ. மெட்ரீடியம் சில ஆந்த்தோசோவா வகைகள் பென்னாட்டுலா இ. விர்குலேரியா உயிரி ஆந்த்தோசோவா வகுப்பைச் சார்ந்த னங்கள் கடலில் மட்டுமே வாழ்கின்றன. வடதுருவ மண்டலம் முதல் தென்துருவ மண்டலம் வரைக்கு மான கடல் பகுதிகளில் இவை காணப்படுகின்றன. இந்திய, பசிபிக் கடலிலும் (Indo-Pacific) மிகுதி யாகக் காணப்படுகின்றன. கார்கோனியா (gorgonia), பென்னாட்டுலா (pennatula), ஸ்கிளிராக்ட்டினன்கள் (scleractinions) போன்றவை ஆழ்கடலிலும் காணப் படுகின்றன. உப்பு அளவு குறைந்த நீரில் இவை வாழ முடியாது. இக்காரணத்தினால்தான் ஆற்று நீர் கலக்கும் கடல் முகத்துவாரங்களில் இவை வசிப் பதில்லை. வெப்ப மண்டல பவளப் பாறைகள், சுற்றுப்புறத்தில் வெப்பம் குறைந்தால் மிக மோச மாகப் பாதிக்கப்படுகின்றன. எனவேதான் பவளப் பாறைகள் பொதுவாக வெப்பமண்டலத்திலும், மித வெப்ப மண்டலத்திலும் அதிகம் காணப்படுகின்றன. வகைப்பாடு. உணர் நீட்சிகளின் அமைப்பையும், குடல் தாங்கிகளின் அமைப்பையும் அடிப்படையாகக் கொண்டு இந்த வகுப்பை ஹெக்சோகோரேலியா (hexacorallia), Can Geum (octocorallia) இவை டியூபிபோரர என்று இரு துணை வகுப்புகளாகப் பிரிக்கலாம். ஹெக்சோகோரேலியா அல்லது சுவாந்தேரியா (zoantharia) Quma உருவ அமைப்புடையவை. தனித்தோ, கூட்டுயிரிகளாகவோ வாழ்கின்றன. உணர்நீட்சிகளின் எண்ணிக்கை ஆறு அல்லது ஆறின் பெருக்குத் தொகையாக இருக்கும். இவை ஆக்ட்டிநியேரியா (actiniaria), மெட்ரிபோ ரேரியா (madreporaria), சுவாந்தீடியா (zoanthidia). சிரியாந்தேரியா (ceriantharia), ஆண்டிபெத்தேரியா (antipatharia) என்று ஐந்து வரிசைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. ஆக்ட்டோகோரேலியா அல்லது ஆல்சியோநேரியா. ஆல்சியோநேரியன்கள் கூட்டுயிரிகளாக வாழ்வன. இவற்றிற்கு எட்டு குடல் தாங்கிகள் உண்டு. பெரும் பாலும் சட்டகம் உடலினுள் இருக்கும். இவ்வகுப்பு ஸ்டோலோனிஃபெரா (stolonifera), டெலிஸ்டேசியா (telestacea), சீனோதிக்கேலியா (coenothecalia), ஆல்சியோநேசியே (alcyonacea), கார்கோனேசியே (gargonacea), பென்னாட்டுலேசியா (pennatulacea), என்று ஆறு வரிசையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. . 2