உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ஆர்க்கிடேசி

80 ஆர்க்கிடேசி மிக சூழ்சதையற்றவை (exendospermous), வளர்ச்சியடை யாத நிலையிலுள்ளவை; தூள் போன்று நுண்ணியவை, இலேசானவை.இவை காற்றின் மூலம் பரப்பப்படுகின்றன; விதை உறை வேறுபாடு அடையாத ஒருசில செல்களினாலானது. இப்படிப் பட்ட விதைகள் ஒவ்வொரு கனியிலும் ஏறத்தாழ 2,000,000 விதைகளைப் பெற்று, இவை வெளிப் பட்டவுடன் வெகு தூரங்களுக்குக் காற்றினால் பரப்பப்படுகின்றன. ஒவ்வோர் ஆர்க்கிட் விதையி லும், வேறுபாடு அடையாத கரு இருக்கும். இத் தன்மையுள்ள விதைகள் தாமாகவே முளைப்பதில்லை. இவை முளைப்பதற்குக் குறிப்பிட்ட வேர்க்காளான் (mycorrhiza) தேவைப்படுகின்றது. வேர்க்காளான் விதையுறை மூலம் ஊடுருவிச் சென்று, முளைப் பதற்குத் தேவையான உணவுப் பொருளைக் கொடுக்கின்றது. சேர்க்கை மகரந்தச் சேர்க்கை. ஆர்க்கிட் பூக்களில் அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுவதற்கான எண்ணற்ற தக அமைவுகள் (adaptations) உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இருக்கின்றன. சிக்கலாகவும் பொதுவாக ஆர்க்கிட்களில் அயல்மகரந்தச் சேர்க் கை, ஈக்கள், வண்ணத்துப்பூச்சிகள், குளவிகள், பல வகையான தேனீக்கள், பறவைகள் ஆகியவற்றினால் ஏற்படுகின்றது. ஆனால் தன்மகரந்தச் மிகக்குறைந்த விழுக்காட்டில் ஏற்படுகின்றது. அயல் மகரந்தச்சேர்க்கை ஏற்படுத்தும் உயிரினங்கள் பல காரணங்களுக்காக ஆர்க்கிட் பூக்களை வந்தடை கின்றன. இவை மகரந்தத்திற்காகவும், மணத்திற் காகவும், கவர்ச்சியான வண்ணத்திற்காகவும் வரு கின்றன. மேலும் எதிரிகள் போன்ற தோற்றத்தினா லும்,ஆண்,பெண் உயிரினங்கள் போன்ற போலித் தோற்றத்தினாலும் ஏற்படுகின்ற தடுமாற்றத்தினால், வை பூக்களைத் தேடிச் செல்கின்றன. சிலவகைப் பூக்களின் அமைப்பும், தோற்றமும் ஏமாற்றத்தை ஏற்படுத்துவதனால் இவை தாமாகவே வந்து சிக்கிக் கொள்கின்றன. ஒருசில மகரந்தச் சேர்க்கை முறைகள் மட்டும் இங்கு விவரிக்கப்படுகின்றன. அயல்மகரந்தச் சேர்க்கை. தேனீக்களினால் மகரந் தச்சேர்க்கை ஏற்படுகின்றபூக்கள் நறுமணத்தையும், கவர்ச்சிகரமான நிறத்தையும் பெற்றிருக்கின்றன இவ்வகைப் பூக்கள் பகலில் மலருகின்றன. இவற்றில் தேன் அடித்தளத்திலிருக்கும். தேனிருக்குமிடத்தைச் சுட்டிக் காட்டுவது போன்ற பல வண்ண வரிகள் உண்டு. ஆர்க்கிட் உதட்டின் அடியில் குழல் போன்ற அமைப்பு காணப்படும். இதற்கடியிலிருக்கும் தேனை எடுப்பதற்குத் தேனீ முதலில் நுழைந்து பிறகு வெளி வரும்பொழுது சூலகமுடியிலிருக்கும் ஒருவகை ஒட்டிக் கொள்ளக்கூடிய நீர்மம் இதன் முதுகில் படுவதனால், மேலும் பின்னோக்கி வெளியே வரும்பொழுது, பசை போன்ற தன்மையுள்ள அதன் பொலீனியா ஒட்டிக்கொள்கின்றது. 2 முதுகின்மேல் இந்நிலையில் மகரந்தம் வேறு பூக்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அயல்மகரந்தச் சேர்க்கை ஏற்படுகின்றது. ஆன்சீடியம் (oncidium). என்பதின் பூக்கள் செண்டிரிஸ் (Centris) தேனீக்களுக்கு எதிரி போன்ற தோற்றத்தைக் கொடுப்பதனால் அவை இந்த ஆர்க் கிட் பூக்களைச் சென்று தாக்குகின்றன. இந்நிகழ்ச் சியின்பொழுது பொலீனியா ஒட்டிக் கொண்டு மற்ற பூக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. கோரியாந்தஸ் ஆல்போ-புர்ப்பூரியா (Coryanmthes albo - purpurea). என்னும் தென் அமெரிக்கச் சிற்றினத் தில் வியக்கத்தக்க முறையில் அயல் மகரந்தச்சேர்க்கை ஏற்படுகின்றது. இது தொற்று அல்லது ஒட்டுவாழ் செடியாகும். இதனுடைய பூக்கள் மிகப்பெரியன வாய்த் தொங்கிக் கொண்டிருக்கும். புல்லி இதழ்கள் அல்லி இதழ்களைவிடப் பெரியவை, பின்புறம் மடிந் தவை. அரைக்கோளவடிவ (dome shaped) ஹைப் போக்கைல் (hypochile), நீண்ட வரம்புகளுடன் கூடிய மீசோக்கைல் (mesochile), வாளி, போன்ற எப்பிக்கைல் (epichile) என இதன் இதழை மூன்று பகுதிகளாகப் பிரித்தறியலாம். பூக்கும் முன்பு எப்பிக் கைல் நீரினால் நிரப்பப்பட்டிருக்கும். நீர் வடிவதற் கான குழாய் போன்ற ஓர் அமைப்பு, புல்லி இதழ் களை நோக்கிக் சாணப்படும். மலர்ந்த பிறகும் சிறிதுகாலம் வரை பூவின் கலத்திலுள்ள இரு அமைப்புகள் நீரைச் சுரந்துகொண்டிருக்கும். ஹைப் போக்கைல் சதைப் பற்றுள்ளவை. ஹைப்போக்கை லிலிருந்து வெளிப்படுகின்ற நறுமணத்தினால் ஆண் தேனீக்கள் கூட்டம் கூட்டமாக ஈர்க்கப்பட்டு ஹைப் போக்கைல் திசுவை உண்பதற்குப் போட்டியிடு கின்றன. இவ்வாறு செய்யும்பொழுது, அவை நீர் நிரம்பியுள்ள வாளி போன்ற பாகத்தில் வழுக்கி விழ நேரிடுகின்றது. வாளி போன்ற பாகத்தின் பக்கங்கள் வழவழப்பாக இருப்பதனால் அவை வெளியேறவும், பறந்து செல்லவும் முடிவதில்லை. இந்நிலையில் இவை கலத்தின் நுனி, எப்பிக்கைலின் நுனி ஆகியவற்றின் மூலம் மட்டும் தான் வெளியேற முடியும். இவ்வாறு வெளியேறும்பொழுது மகரந்தம் அவற்றின் வயிற்றில் ஒட்டிக்கொள்கின்றது. பல தேனீக்கள் ஒன்று சேர்ந்து பலமுறைகள் முயற்சி செய்வதும், முயற்சியில் தோல்வியுறுவதும் ஈக்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்வலம் செல்வதுபோன்று தோன்று வதும், மீண்டும் மீண்டும் வழுக்கி நீரில் விழுவதும், கடைசியில் ஒவ்வொன்றாக வெளியேறுவதும் பார்ப் பதற்கு இனிய காட்சியாக அமைந்திருப்பது குறிப் பிடத்தக்கது. ஓஃபிரிஸ் (Ophry's). பூவிலிருந்து வெளிப்படுகின்ற மணம், அதன்வடிவம், வண்ணம்,இதழிலுள்ள கேசங் கள் ஆகியவை பெண் தேனீக்கள் அல்லது குளவிகளி னுடையவை போன்றிருக்கின்றன. இதனால் ஆண் தேனீக்களும், ஆண் குளவிகளும் இந்த ஆர்க்கிட்