உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ஆர்க்டிக்‌ பெருங்கடல்‌

88 ஆர்க்டிக் பெருங்கடல் தோராய குளிர்கால வெப்பம் - 7, 7°C லிருந்து -28.8°C வரையுள்ளது. கோடைக்காலங்களில் தோராய வெப் பம் 4.4°C முதல் 10°C வரை இருக்கின்றது. மழை யின் அளவு 10 இலிருந்து 46 அங்குலம் வரையுள்ளது. குளிர்காலத்தில் தென் மேற்குப் பகுதியில் சில இடங் களைத்தவிர தீவின் மற்ற இடங்கள் பனியால் மூடப் பட்டுள்ளன. வகை பனிக்கட்டியற்ற இடங்களில் தூந்திர வகைத் காணப்படுகின்றன. தாவரங்கள் கிரீன்லாந்தின் தென்மேற்கில் ஐந்து வகை மரங்களும், ஜாலியன் ஹாப் (Jalianehaab) என்னுமிடத்தில் சில பிர்ச்சுகளும் (birches) வளருகின்றன. இந்தத் தீவின் பெரும்பாலான இடங்களில் புற்கள், பாசிகள், மற்றும் வளர்ச்சி குன்றிய உண்மையான தூந்திர வகைத் தாவரங்கள் காணப்படுகின்றன. ஆர்க்டிக் பெருங்கடல் எல். கண்ணன் வடதுருவப் (North pole) பகுதியில் வட அமெரிக்கா. கிரின்லாந்து ஆசியா ஆகிய நிலப் பகுதிகளால் சூழப் பட்டு அமைந்துள்ளது ஆர்க்டிக் பெருங்கடல் (Arctic ocean). அட்லாண்டிக் பெருங்கடல் (Atlantic ocean) பகுதியில் நிலப்பகுதி எதுவும் இல்லாத காரணத் தால் சரியான வரையறை கிடையாது. அதனால் நிலவியலார் இங்கு 66°30' வடக்கு அகலாங்காகிய (latitude) ஆர்க்டிக் வளையத்தை (Arctic circle) வரையறையாகக் கொள்கின்றனர். இந்தப் பெருங் கடலின் ஓரப் பகுதியில், கிரீன்லாந்துக் கடல் (Greenland sea), பெரண்ட்ஸ் கடல் (Barents sea), காராகடல் (Kara sea), லாப்டெவ் கடல் (Laptev seac,) கிழக்கு சைபீரியக் கடல் (East Siberian sea), சுக்சி கடல் (Chuckchi sea), போஃபோர்ட் கடல் (Beaufort sea) போன்ற கடல்கள் உள்ளன. இக் கடற் பகுதிகள் கோடையில் கப்பல் போக்குவரத் திற்கு ஏற்றதாக இருக்கின்றன. ஆர்க்டிக் வடிநிலம் ஆழமான ஆர்க்டிக் வடிநிலம் arctic basin) 200 மீட்டர்களுக்கும் குறைவான ஆழத்தில் கண்டத்திட்டுகளால் அமைந்துள்ள (continental shelves) சூழப்பட்டிருக்கிறது. ஆர்க்டிக் வடிநிலத்தின் அங்கங்களாக வட கனடிய வடிநிலம் (north Canadian) நடுதுருவ வடிநிலம், வட யூரேசிய வடிநிலம் (north eurasian basin) ஆகியவை விளங்கு கின்றன. கிரீன்லாந்துக்கும் சுபிட்சுபெர்களுக்கும் (spitabergeh) இடையே உள்ள 600 மீ ஆழமே உள்ள நான்சன் முகடால் (nansen rise) அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து ஆர்க்டிக் பெருங் கடல்பிரிக்கப் பட்டிருக்கிறது. மேலும் இந்த ஆழமான ஆர்க்டிக் வடிநிலத்தைக் கனடிய தீவுக் கூட்டத்தின் (canadian archipelago) வட விளிம்பிலிருந்து துருவ வழியாகப் வரை புதுச் சைபீரியத் தீவுகள் (new siberian islands) சோல் நீண்டிருக்கும் லோமன கடலடி மலைத்தொடர் (lomonosov ridge) இரண்டாகப் பிரிக்கிறது. இந்த மலைத் தொடருக்கு இணையாக 84 வடக்கு அகலாங்கில் போஃபோர்ட் கடலருகே மற்றொரு கடலடி மலைத்தொடர் அமைந்திருக் கிறது. இந்த மலைத் தொடர்கள் இருக்கு மிடத்தில் ஆழம் 1,500 மீட்டர்களாகும். வட கனடிய வடிநிலமும் நடுதுருவ வடிநிலமும் 3,500மீ வரை ஆழமுள்ளவையாக இயங்குகின்றன. வடயூரேசிய 4, 500 மீட்டர்கள் ஆகும். வடிநிலத்தின் ஆழம் கண்டத்திட்டின் அடித்தளம் பெரும்பாலும் கற்க ளாலானது. கண்டச்சரிவின் (continental slope) அடித் தளம் களிமண் வண்டலாலும் (clayey silt) ஆழ் கடலின் அடித்தளம் சுண்ணாம்பு அசும்புப் பாறை களாலும் (calcareous ooze) ஆனவை. ஆர்க்டிக் பனிக் கவிகை. (Arctic Ice cap). ஆர்க் டிக் பெருங்கடலிலுள்ள பனிமிதவைப்பாளங்களின் (ice bergs) சராசரி கனம் கோடையில் 14 முதல் 2 மீட்டர்களாகவும் குளிர்காலத்தில் 21 முதல் 3 மீட் டர்களாகவும் மாறுபடுகிறது. இருப்பினும் அழுத்த மலைத்தொடர்களிலும் (pressure ridges), பனித் தீவுகளிலும் (ice islands) 24 மீ. கனம் வரை பனிக் பனிக்கவிகை கட்டி இருக்கிறது. குளிர்காலத்தில் யின் (ice cap) டேல் பரப்பு அழுத்தமாகவும் கரடு முரடாகவும் இருக்கிறது. கோடையின்போது மேலே உள்ள 1 மீ பனிக்கட்டி உருகுகிறது. இந்த நீர் ஆங்காங்கே குளம் குட்டைகளாகத் தேங்கி நிற் கிறது. வெப்பம் உயர, உயரப் பனிக்கட்டி சுருங்கி 1 முதல் 8 கி.மீ. நீளமுடைய பெரிய படுகைகளாகப் (pans) பிரிகிறது. பனிக்கவிகையின் விளிம்பில் இந் தப் பெரிய பனிப்படுகைகள் உடைந்து 100 மீ. நீள முள்ள மிதவைப் பனிப்பாளங்களாக உருவாகின் செப்டம்பர் பிற் றன. இப்பனிப் பரப்பின் மேல் பகுதியிலிருந்து மே இறுதி வரை பயணம் செய்ய லாம். மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங் கள் மிகவும் உகந்த மாதங்கள். கோடையில் பனிப் பரப்பு, ஈரச் செறிவுடனும் வழுக்கும் தன்மையுட னும் விளங்கி போக்குவரத்திற்கு ஏற்றதாக இருக் காது. சில பனிப்படுகைகள் அக்டோபரி லிருந்து ஏப்ரல் வரை விமானம் இறங்கலாம். . மேல் பனி நகர்வு (Ice drift). ஆர்க்டிக் பெருங்கடலில் காணப்படும் பனிப்பரப்பு நகர்ந்து கொண்டே இருக் கிறது. மேற்கோளாக என்.பி, இரண்டு (NP,) என்று அழைக்கப்படும் உருசிய ஆய்வுக் கூடம் அமைந்துள்ள பனிப்பரப்பு 1950 ஏப்ரல் தொடங்கி 1954 ஏப்ரல் வரை எப்படி நகர்ந்திருக்கிறது என்பதை வரை படம் காட்டுகிறது. இப்பகுதியில் ஓர் எதிர் சூறா வளித் திருகு சூழல் (anticyclonic gyral) இருக்கிறது. அறிவியலார் அறிந்திருக்கிறார்கள். இந்தப் என