உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 ஆர்ட்டீசீயன்‌ ஊற்று

106 ஆர்ட்டீசியன் ஊற்று நீர்ப்பிடிப்புப் பரப்பு நீர்புகும் படுகை நீர்புகாப்பாறை பரப்பு 11. ஆர்ட்டீசியன் ஊற்று மேலோடு தீர்புகா படம் 3. இயற்கையில் ஆர்ட்டீசியன் ஊற்று நிலை தோன்றுதல் உயரும். இந்நிலையில் தண்ணீருக்காகத் துளையிடும் போது அதில் உள்ள தண்ணீர் வளிமண்டல அழுத் தத்தைவிடப் போதுமான அளவு அழுத்தத்தில் இல்லாததால் ஆர்ட்டீசியன் ஊற்றாக வெளிவராது. ஆனால், மற்ற துணைக் கருவிகளைக் கொண்டு இதி லிருந்து தண்ணீரை வெளியேற்றலாம். மழையின்மை யால் நீர்ப்பிடிப்பு இல்லாத காலத்தில் இவ்வகைக் கிணறுகள் வற்றிவிடும். இச்சமயம் ஆர்ட்டீசியன் ஊற்றுகளிலிருந்து தண்ணீரைத் துணைக் கருவி களின் மூலம் வெளிக் கொணரலாம். சில சமயங் களில் நீர்நிலை அழுத்தம் (piexometric pressure) நீர் உட்புகு பாறைகளின் அடிமட்டத்திற்குச் செல் லும்போது நீர்உட்புகும் பாறை உட்புகாப்பாறை யாக மாறுவதால் ஆர்ட்டீசியன் ஊற்று மறைய வாய்ப்பு உள்ளது. ஆர்ட்டீசியன் ஊற்றுத் தோன்ற அடிப்படைக் காரணங்களாவன, ஒரு பரந்த ஆழ்நிலச் சரிவமைப் புடைய (synclinal) நீர் உட்புகும் பாறைகளின் மேலும் கீழும் நீர் உட்புகாப் பாறைப்படுகைகள் சூழப்பட்டிருத்தல், நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீர் உட் புகுபாறைகள் புவியின் மேல் பரப்பில் தேவையான அளவு அமைதல். அதில் போதுமான அளவு மழை நீர்ச் சரிவூடே உட்புகுதல், நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து நீர் உட்புகப் போதுமான அளவு மழை தொடர்ந்து பொழிதல், நீர் பாறைகளில் உட்புகுந்த பின் உடனடியாகக் கிணறுகளின் வழியோ, பெயர்ச் சிப்பிளவு வழியாகவோ வெளியேற வாய்ப்பு இல்லா மல் இருத்தல் ஆகியவையாகும். ஆர்ட்டீசியன் ஊற்று என்ற பெயர் நீர்மட்டம் நிலமட்ட அளவிற்கு உயர்ந்து வரக்கூடிய ஆழ் கிணறுகளுக்கும் வழங்கப்படுகிறது. இவ்வகையில் இயல்பான ஊற்றுப்போல் நீர் நிலத்துக்கு மேலே எழாது. சில சிறப்பு வகையான நீர் உட்புகாப் பாறைகள் போலி ஆர்ட்டீசியன் ஊற்றுகள் (perched artesians ) என அழைக்கப்படுகின்றன. சிலவகை களிமண்ணும் (clay), களிமட் பாறைகளும் (slatey rocks) அவற்றி டத்தே உள்ள நுண்துளைகளில் நீரைத் தேக்கி வைத் திருக்கும். ஆனால் இந்நுண் துளைகள் மூலம் நீரைக் கடத்தாது இவ்வகையான களிமண், களிமட் பாறை கள் ஆகியவற்றின் மேற்பரப்பு ஒரு குழி வில்லை யைப் ('e s) போன்று புவியில் அமைந்து இருந்தால் அந் நிலப்பரப்பில் பொழியும் மழை நிலத்தடியில் உறிஞ்சப்பட்டு இவ்வகைக் களி குழிவில்லையைப் (clay lens) போன்ற அமைப்பில் தேங்கும். இவ்வகைக் கட்டமைப்பு நிலையான நிலத்தடி நீர்மட்ட (perma nent water table level) அளவுக்கு மேல் நீர் உட் புகாப் பாறைப்படிவுக்கிடையில் இருக்கும். நீருக்காக நிலத்தில் துளையிடும்போது இவ்வகைக் கட்டமைப்பு எதிர்ப்பட்டால் அதில் நிலையான ஊற்றுப் பெருக வாய்ப்பு இல்லை. ஆர்ட்டீசியன் ஊற்றுகள் படிவுப்பாறை வளா கத்தில் மட்டும்தான் தோன்றும் என்பதில்லை. அனற் பாறையின் மேல் பக்கம் சுமார் 35 மீ ஆழம் வரை வானிலை மாற்றத்திற்கு உட்பட்டுத் தக்க வேதியியல் சிதைவு ஏற்படுவதாலும் (chemical weathering) அப் பாறைகளில் உள்ள பெயராப்பிளவு (joints), பெயர்ச் சிப்பிளவு (faults) மடிப்புகளில் (folds) சில இடங் களில் ஆரச் செம்பாளப் பாறை, சுழற் பாறைகளில் ஊடுருவுவதாலும் (படம் இ,ஈ), அச்சுழல் சிதைந்து அவற்றில் நீர் தேங்க ஏற்ற வசதி ஏற்பட்டு அங்கு ஆர்ட்டீசியன் ஊற்றுகள் (artesian) தோன்றும் வாய்ப்பு நிலவுகிறது. ஆனால் இயற்கையில் படிவுப் பாறைகளில்தாம் (sedimentary) அதிக அளவு ஆர்ட் டீசியன் ஊற்றுகள் தோன்றும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் ஆர்ட்டீசியன் ஊற்றுகள் கங்கைச் சமவெளிப் பகுதிகளிலும், தென் மாநிலங்களில் கட லோரப் பகுதிகளிலும், நெய்வேலி பழுப்பு நிலக்கரிச்