உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ஆர்டுவார்க்‌

108 ஆர்டுவார்க் இன முதிர்ச்சியும் பெறும். இக்காலங்களில் நீரின் உப்புத்திறன் 30 முதல் 50 பி.பி. டியும், வெப்பநிலை 25°-30° செலிசியசும் ஆக்சிஜன் 5 பி.பி.எம் முக்குக் குறையாமலும், அமமோனியா எம்முக்கு மிகாமலும் இருத்தல் நன்று. ஆர்ட்டிமியா 90. பி.பி. இனச்சேர்க்கைக்குப் பின்னர், பெண் ஆர்ட்டி மியா, நீரின் உப்புத்திறன் ஏற்ற அளவில் இருந்தால் லார்வாக்களையும், அதிக அளவில் இருந்தால் 50 லிருந்து 200 முட்டைகளையும் புறத்திடும். முட்டை யிலிருந்து வெளிவரும் நாப்ளியஸ் என்னும் இளம் உயிரியில் கொழுப்புச் சத்து அதிகமாக (23.2%) உள்ளது. பின்னர், ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத் திலும் கொழுப்புச் சத்து குறைந்து இனச்சேர்க்கைக் கான முதிர்ச்சி பெறும் பருவத்துக்குச் சற்று முன்னர் 7.0 விழுக்காடாகக் குறைந்துவிடுகின்றது. ஆனால், இதற்கு மாறாக. புரதச் சத்து 42.5 இலிருந்து 62.78 விழுக்காடாக உயர்வது குறிப்பிடத்தக்கது. சத்துக்கள் நிறைந்த நுண்ணிய உயிரினமான தாலும், எந்நேரமும் குறைந்த அளவு உப்புத்திறன் உள்ள நீரில் முட்டைகளைப் போட்டு இளம் உயிரி களை உற்பத்தி செய்து கொள்ளக் கூடுமானதாலும், கடலுயிரியல் வளர்ப்பாய்வாளர்கள் இறால், நண்டு சிங்கிறால் முதலிய உயிரினங்களின் இளமை வளர்ச் சிப் பருவங்களுக்கு ஏற்றதொரு உணவாக ஆர்ட்டி மியா லார்வாக்களையே 99 விழுக்காடு உணவாகத் தருகின்றனர். இதனால் ஆர்ட்டிமியா முட்டை களின் விலை, கிலோவுக்கு ரூ. 600 க்கும் மேல் உள்ளது. ஆர்ட்டிமியா முட்டைகளை, வேண்டுவோருக்கு வழங்க விற்பனை நிலையங்கள் உள்ளன. இருப் பினும் தற்போதைய தேவையளவுக்கு முட்டைகள் சேகரிக்கப்படுவதும், உற்பத்தி செய்யப்படுவதும் இல்லை. பெருமளவான ஆர்ட்டிமியா வளர்ப்பில் (mass culture) தற்போது சோவியத்து நாடும் ஜப்பா னும் ஈடுபட்டுள்ளன. இங்கு இவற்றின் பிழைப்புத் திறன் சிறப்பாக (90%) உள்ளது. சோவியத்து நாட் டில் ஆர்ட்டிமியாவின் உற்பத்தித் திறன் ஆண் டொன்றுக்கு, ஒரு ஹெக்டர் பரப்புக்கு 250 முதல் 3,000 கிலோ என்பது நம்மை வியப்புக்குள்ளாக்கு கின்றது. ஆர்ட்டிமியா பற்றிய விவரங்களைத் தெரி மியா விக்க உலக அளவிலான மையம் ஒன்று பெல்ஜியத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. நமது நாட்டிலும் ஆர்ட்டி பற்றிய ஆய்வுகள் நடைபெறுகின்றன. வளர்ப்பு முறையும் நன்கு அறியப்பட்டுள்ளது. வெ. சுந்தரராஜ் நூலோதி. 1. Barnes, R. D., Invertebrate Zoology,W.B. Saunders & Co., London 1974. 2. Hyman, L. H., The Invertebrates, Mc-Graw Hill Book Company, New York, 1955. ஆர்டுவார்க் ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியில் காணப்படும் ஆர்டுவார்க் (Aardvark) என்ற எறும்புத்தின்னி விலங்கை நிலப்பன்றி (earth-pig) என்றும் கூறுவர். சகாராப் பாலைவனத்திற்குத் தெற்கே மழைமிகு காடுகள் தவிர அனைத்துப் பகுதிகளிலும் இவை வாழ்கின்றன. வெப்ப மண்டலப் புல்வெளிகளில் குறிப்பாக மென்மணற் பகுதிகளில் இவை அதிக மாகக் காணப்படுகின்றன. இதன் உயிரியல் பெயர் ஆரிக்ட்டெரோபஸ் அஃபெர் (Orycteropus affer) என் பது. இது நிலத்தில் குழி தோண்டி வாழ்கிறது. வால் உட்பட இதன் உடல் ஆறடி நீளமும் இரண் டடி உயரமுமிருக்கும். இது பருமனான உடலு டையது; வளைந்த முதுகுடையது. தடித்த தோலில் ஆங்காங்கு மயிர்கள் காணப்படுகின்றன. தலை பன்றியினுடையதைப் போல் நீண்டு, குறுகியுள்ளது. காதுகள் கழுதையின் காதுகளைப்போல் நீள பாதங்களில் வலிய கூர்நகங்கள் (claws) உள்ளன. முன்னங்கால்களில் ஐந்து கூர்நகங்களும் பின்னங்கால்களில் நான்கும் உள்ளன. மானவை. ஆர்டுவார்க்கின் வலிய கால்களும் கூரிய நகங் களும் வெகுவேகமாக நிலத்தில் வளை (burrow) தோண்ட உதவியாக அமைந்துள்ளன. வளையில் இருக்கும்போது இதற்கு இடையூறு ஏற்பட்டால் கண்ணிமைக்கும் நேரத்தில் இது வெகுவேகமாக வெளியேறி வேறொரு வளையைத் தோண்டிப் பதுங் கிக் கொள்கிறது; தோண்டும்போது பின்னங்கால் களையும் வாலையும் தரையில் ஊன்றிக்கொண்டு முன்னங்கால்களால் தோண்டிய மண்ணைத் தள்ளி விடுகிறது. இது வாழும் வளை தரைக்கடியில் நீளமாகவும் முடிவில் ஒரு தூங்கும் அறையும் கொண்டது. இவ் விலங்கு தன் வளையினுள் எளிதாக நடமாட முடி யும். ஒவ்வொரு விலங்குக்கும் இரண்டு மூன்று தனித்தனி வளைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் இடையில் சில கி. மீ. இடைவெளி இருக்கும். இவ்