உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 ஆர்ம்ஸ்டிரான்‌, சர்வில்லியம்‌ ஜார்ஜ்‌

128 ஆர்ம்ஸ்டிரான், சர்வில்லியம் ஜார்ஜ் டேவிட் சார்னோஃப் (David Sarnoff) என்பாருடன் ஆர்ம்ஸ்டிராங் தொடர்பு கொள்ளக் காரணமா யிற்று. சார்னோஃபிடம் துணைச் செயலாளராக இருந்த அம்மையை இவர் திருமணம் செய்து கொண் டார். போர் முடிந்ததும் இவர் கொலம்பியாவுக்குத் திரும்பி இயற்பியலில் மாபெரும் வல்லுநராக இருந்த புதுமைப் புனைவாளர் மைக்கேல் பூப்ஃபினுக்கும் (Michel Bufin) அவருடைய ஆசிரியருக்கும் உதவியா ளராகப் பணி புரிந்தார். இந்தக் காலத்தில் இவர் தமது கண்டுபிடிப்புக்கான பதிவுரிமம் பெற்று, அதைப் பல நிறுவனங்களுக்கு விற்றுப், பணமும் புகழும் சேர்த்தார். 1920 இல் இவர் ஒருமாபெரும் கோடீஸ்வரர் ஆனார். எனினும் இவர் கொலம்பியா வில் கல்வி கற்பித்தும் ஆராய்ச்சிக்குத் தொடர்ந்து பண உதவி செய்தும் பூப்ஃபினுடன் ஒத்துழைத்தும் வந்தார். 1933 இல் இவர் 4 சுற்றுவழிகளுக்கான பதிவுரி மங்களைப் பெற்றார். இந்த 4 சுற்றுவழிகளும் வானொலியில் புதியதொரு கருவி அமைப்பை உரு வாக்கி அலை செலுத்தி முதல் அலைவாங்கி வரை முற்றிலும் புரட்சிகரமான மாற்றம் அமைத்தன. முன்பு செய்தது போன்ற அலைவீச்சில் குறிப்பலை களை ஏற்றாமல் அலைவெண்ணில் குறிப்பலைகளை ஏற்றிய முறை அலைபரப்புப் பட்டையை மிக அகல் மாக்கி வானொலியின் உயர் நம்பகத் தன்மையையும் செயல் திறமையையும் உருவாக்கியது. இந்த அலை வெண் முறையில் குறிப்பலைகளை (signals) வானில் உள்ள மின்புயல்களால் அலைவீச்சு முறையை மாற் றுவதுபோல மாற்ற இயலாது. இதனால் எந்த நிகழ்ச்சியையும் இரைச்சல் இன்றியும் மாற்றம் இன் றியும் உயர் நம்பகத்துடனும் ஒலிபரப்பித் தெளி வாகக் கேட்க முடிந்தது. இந்த முறையைக் கடைப்பிடிக்கப் பலவித மாற் றங்களை உண்டாக்க வேண்டி இருந்ததால், முதலில் வானொலி, தொலைக்காட்சி செய்யும் நிறுவனங்கள் இதில் ஈடுபடவில்லை. 1939 இல் ஆர்ம்ஸ்டிராங் தாமாகவே ஒரு தனி அலைவெண் குறிப்பேற்ற வானொலி நிலையத்தை ஆய்வுக்காக நிறுவிக் காட் டினார். இதற்கு மூன்று இலட்சம் டாலர்கள் செலவு ஆயின. மேலும் இதை விரிவாக்க இவர் இரண்டாம் உலகப் போரின் போதும் தளராது உழைத்து வந் தார். போருக்குப்பின் ஏற்பட்ட கட்டுப்பாடுகளினா லும் இவர் முயற்சி தளரவில்லை. நாளாக நாளாக அலைவெண் குறிப்பேற்றமுறை நடைமுறையில் வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கியதும் இவர் மற்றொரு வழக்கைச் சந்திக்க வேண்டி நேர்ந்தது. இந்த வழக்கில் முதுமையின் காரணமாகவும் நோய் வாய்ப்பட்டு இருந்தமையாலும் 1954 இல் இவர் தம் செல்வம் அனைத்தையும் இழந்துவிட்டார். இந்தக் காலகட்டம் இவருடைய அறிவியல் மற் றும் புதுமைப்புனைவின் பெருமையைப் பலரும் உணர வழிவகுத்தது. தற்காலத்தில் இம்முறை அலை வெண் குறிப்பேற்றமுறை வானொலி, தொலைக் காட்சியின் ஒலிப் பிரிவு, இயங்கும் வானொலி (mobile radio) நுண்ணலை உயர்த்திகள் (microwave relays), செயற்கைக்கோள் செய்தித் தொடர்பு (satelite communication) ஆகிய பல நடைமுறைப் பயன்பாடுகளில் வெற்றிகரமாக நிலவுகின்றது. இவர் இறந்ததும் மின்னியல் அறிஞர்களான பிரெஞ்சு நாட்டு இயற்பியலாளர், கணித இயலாளர், ஆந்திரே மரி ஆம்பியர், தொலைபேசியினைக் கண்டறிந்த அலெக்சாந்தர் கிரகாம்பெல், ஆங்கில மின்னியல் முனைவரான மைக்கேல் ஃபாரடே, கம்பியில்லாத் தொலைவரியைக் கண்டறிந்த இத்தாலிய அறிவியலா ளரான கக்ளீல்மோ மார்க்கோனி ஆகியவருடன் சம நிலையில் வைக்கப்பட்டு அனைத்துலகத் தொலைத் தொடர்புக் கழகத்தால் மதிக்கப்பட்டார். ஆர்ம்ஸ்டிராங், சர் வில்லியம் ஜார்ஜ் உலோ.செ. நார்தம்பர்லேண்டின் (Northumberland) டைனைச் (Tyne) சார்ந்த நியூகாசில் (New Castle) எனும் இடத்தில் 1810 நவம்பர் 26 ஆம் நாள் சர் வில்லியம் ஜார்ஜ் ஆர்ம்ஸ்டிராங் பிறந்தார். கி.பி.1900, டிசம்பர் 27 ஆம் நாள் கிராக்சைடு (Crackside) என்னும் இடத்தில் இயற்கை எய்தினார். சர் வில்லியம் ஜார்ஜ் ஆர்ம்ஸ்டிராங் இவர் உயர் அழுத்த நீரியல் எந்திரங்களைக் கண்டறிந்தார். துப்பாக்கியின் வடிவமைப்பையும், தயாரிப்பையும் புரட்சிகரமாக மாற்றி அமைத்தவர். தம் வாழ்நாளில் ஒரு தலைசிறந்த பொறியாளரா கவும், தொழிலதிபராகவும் திகழ்ந்தவர். 1847 இல் சட்டப் பயிற்சியை விட்டுவிட்டு அறிவியல் ஆய்வுக் காகத் தமது வாழ்க்கையை இவர் ஒதுக்கத் தொடங் B