உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ஆர்மடில்லோ

130 ஆர்மடில்லோ எடுத்தனர். பல அறிவியல் கருவிகளை இறக்கி நிறு வினர். இருவரும் ஜூலை 21 ஆம் தேதி நிலவில் இருந்து எழுந்து புவி உலகை நோக்கிப் புறப்படத் தொடங் கினர். ஜூலை 24, 12 51 மணி அளவில் பசிபிக் கடலில் இறங்கிய பிறகு அவர்கள் 18 நாள்கள் மருத துவப் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர். இது நிலவில் உள்ள நுண்ணுயிர்கள் புவியில் வந்து மாசு ஏற் படுத்துவதைத் தடுப்பதற்கே ஆகும். பிந்திய நாள் களிலும், இவர்களது 21 நாள் தேசியப் பயணத்தின் போதும் இவர்கள் மூவரும் அண்டத்தை ஆய்வதில் படைத்த புதிய காலக் கட்டத்தினை நினைந்து பெரிதும் மதிக்கப்பட்டனர். காண்க, நிலாப்பயணம். ஆர்மடில்லோ உலோ.செ அமெரிக்காவில் வாழும் ஒரே எறும்புத்தின்னி விலங் தினம் இது. ஒன்பது பொதுவினங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 20 சிறப்பினங்கள் தென் அமெரிக்காவின் வெப்ப மண்டல, மித வெப்ப மண்டலப் பகுதி களின் திறந்தவெளிகளிலும் காடுகளிலும் காணப் படுகின்றன. இவற்றுள் டாசிப்பஸ் நாவெம்சிங்டஸ் (Dasypus novemcinctus) என்னும் ஒன்பது பட்டைச் செதில்களுடைய சிறப்பினம் நன்றாக அறியப் பட்ட ஒன்று. ஆர்மடில்லோக்கள் (armadillos) சாதுவான இயல்புடையவை; இரவில் நடமாடுபவை; தரைக்கடியில் வளை தோண்டித் தனியாகவோ கூட்டமாகவோ வாழ்பவை.வளைகள் தரை மட்டத் திலிருந்து இரண்டிலிருந்து மூன்றடி ஆழத்தில் அமைக் கப்படுகின்றன. ஆர்மடில்லோக்களின் உடல் நீளமும், பருமனும் இனத்துக்கினம் வேறுபடுகின்றன. கிளாமிஃபோரஸ் டிரங்கேட்டஸ் (chlamyphorus truncatus) என்னும் இனம் 16 செ.மீ. நீளமுள்ளது. பிரையோடாண்டஸ் ஜைஜாண் டியஸ் (priodontes giganteus) எனப்படும் பேருரு ஆர்மடில்லோ வாலைத் தவிர்த்து 0.9 மீ. நீளமும், ஏறத்தாழ 60 கி.கி. எடையும கொண்டது. உடலை மூடியுள்ள கவசம் (armour) இவற்றுக்குச் சிறந்த பாதுகாப்பையளிக்கிறது. செம்பழுப்பு நிறமுள்ள இக்கவசம் சிறிய வட்ட வடிவ எலும்புத் தகடு களால் ஆனது. நெருக்கமாக அமைந்த இததகடு களின்மீது கொம்புப் பொருளாலான தோல் படர்ந் துள்ளது. மேலும் தகடுகளுக்கிடையில் அமைந்துள்ள மென்தோலில் மயிர்கள் உள்ளன. மயிரின் அடர்த் தியும் நீளமும் இனத்துக்கினம் வேறுபடும் கவசம் குறுக்குவாட்டத்தில் இரண்டு பகுதிகளாக அமைந் துள்ளது. முதற்பகுதி முன்னங்கால்கள் வரையிலும், பின்புறம் அமைந்துள்ள இரண்டாம் பகுதி, பின்னங் கால்களை மூடும் வகையிலும் அமைந்துள்ளன். இரண்டு பகுதிகளுக்குமிடையில் குறுக்குவாட்டத்தில் எலும்புத் தகடுகள் வரிசையான பட்டைகளாக அமைந்துள்ளன. இச்செதில் பட்டைகள் உடலைப் பாதுகாத்தாலும் உடலுறுப்புகளின் இயக்கத்துக்குத் தடையாக இருப்பதில்லை. இப்பட்டைகளின் எண்ணிக்கை வெவ்வேறு பொதுவினங்களில் வேறு படுகின்றன. டொலிப்பியூட்டஸ் (Tolypeutes) எனப்படும் 3 பட்டைப் பொதுவினம், யூஃப்ராக்டஸ் (Euphractus) எனப்படும் 6 பட்டைப் பொதுவினம், டாசிப்பஸ் (Dasypus) எனப்படும் 9 பட்டைப் பொதுவினம் என்பவை அவற்றின் அசையும் இயல்புடைய பட்டைச் செதில் வரிகளின், எண்ணிக்கையைக் கொண்டு பெயரிடப்பட்டன. கவசத்தின் தொடர்ச்சி தலைப்பகுதியிலும் உள்ளது. வாலும் குறுக்கு வாட்டத் தொடராக அமைந்த வளையங்களால் மூடப்பட்டுள்ளது. விலங்கின் வயிற்றுப்பக்கத்தில் அடர்ந்த மயிரும் அங்கொன்றும் இங்கொன்றுமாக எலும்புச் செதில்களும் உள்ளன. ஒன்பது பட்டை ஆர்மடில்லோ ஆர்மடில்லோவின் முகம் நீண்டது. காலகள் குட்டையானவை. கால்களில் வளைந்த வலிமை யான கூர்நகங்கள் உள்ளன. முன்னங்கால்களி லுள்ள கூர்நகங்களில் நடுவிலுள்ளது சற்றுப் பெரி யது. அரிவாள் போன்றது. வேரும், எனாமலும் அற்ற ஏறத்தாழ நூறு சிறிய பற்கள் உள்ளன. கன மான கவசத்தின் காரணமாக ஆர்மடில்லோக்கள் எடைமிக்கவையாக இருந்தாலும் நீரில் எளிதாக நீந்தக்கூடியவை. நீந்தும்போது மிதப்பதற்கு உதவி யாகக் காற்றை விழுங்கிக் குடல் பகுதியில் வைத்துக் கொள்கின்றன. தாவரங்கள், பூச்சிகள், ஓணான்கள், பாம்புகள், மண்புழுக்கள், சிலந்திகள், நத்தைகள், போன்றவற்றை உணவாகக் கொள்கின்றன. இவற் றைத் தவிர எறும்புப்புற்றுகளையும் கறையான் புற்றுகளையும் கூர்மையான நகங்களால் சிதைத்து, நீண்ட, ஒட்டுந்தன்மையுடைய நாக்கால் அவற்றை ஒற்றியெடுத்து உண்ணுகின்றன. அச்சுறுத்தப்படும் போது இவை வியத்தகு வேகத்தில் ஓடி மறைகின் றன, அல்லது வளை தோண்டிப் பதுங்கிக் கொள்ள