உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரைத்‌ தமனி 155

ஆரைத் தமனி 155 கின் றன. மா. ஹிர்ஸுத்தா (M. Hirsuta), மா. மினுத்தா போன்ற சிற்றினங்களில் சிறிய கிழங்குகள் (tubers) நிலத்தின் கீழ்க் காணப்படுகின்றன. பொருளாதாரச் சிறப்பு. கிராம மக்கள் இதன் இலைகளையும், இலைக்காம்புகளையும் கீரையாகச் சாப்பிடுகின்றார்கள். நீர்த்தொட்டிகளில் அழகு தரும் செடியாகவும் இது வளர்க்கப்படுகிறது. இதன் இலைகள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. நூலோதி தி.பாலகுமார் 1. Bierhorst, D.W., Morphology of Vascalar Plants, Macmillan, New York and London, 1951. 2. Gupta, E.M.. Marsilae-Botanical Monograph, CSIR, New Delhi, 1962. 3. The Wehlth of India, Vol. VI, CSIR Publ. New Delhi, 1984. ஆரைத் தமனி மேற்கை அல்லது புயத்தில் (upper arm) உள்ள புயத்தமனி (brachial artery) முன் கையின் முன் பகுதிக் குழுவில் (cubital fossa) இரு கிளை களாகப் பிரியும். அவை ஆரைத் தமனி (radial artery), ஆரத்தித் தமனி (ulnar artery) என்பன. ஆரைத் தமனி முன் கையின் முன்பகுதிக் குழி விலிருந்து ஆரம்பித்து மணிக் கட்டு (wrist) முன்புறம் வரை சென்று, பிறகு இரு கிளைகளாக, ஒன்று மேல் மட்டத்திலும் (superficial), மற்றொன்று கீழ் மட் டத்திலுமாக (deep) உள்ளங்கைப் (palm) பகுதிக்கு வந்து, பிறகு மணிக்கட்டுக்கும், விரல்களுக்கும் இடைப்பட்ட உள்ளங்கைப் பகுதிக்கும் (metacarpal region), விரல்களுக்கும் (digits) இரத்தம் செலுத்து கிறது. மணிக்கட்டுப் பகுதியில் இத்தமனியின் மூலம் மனிதனின் நாடித்துடிப்பின் (pulse) பல்வேறு பண்பு களை அறியலாம். முன் கையிலுள்ள (fore arm) ஈரெலும்புகளில் ஒன்றான முன்கை ஆரை எலும்பின் (radius) மீதும், அதன் மேல் அமைந்திருக்கும் தசைகளின் (muscles ) மீதும் இந்த ஆரைத்தமனி இடையில் செல்கிறது (படம் 1. இதனுடன் இதற்கு இணையாக இரு உள் நாளச் சிரைகள் (vena comitans ) உடன் செல் கின்றன. முன்கைப் பகுதியில் இத்தமனி முன்கை ஆரை எலும்பின் திசைப்பக்கமாக அமைந்த இரு தசை களின் இடையில் செல்கிறது. பிறகு சற்றுக் கீழ் இடத்தில் இத்தமனி, அதாவது, மேற்கூறிய தசைக்கு 2 படம் 1. I. ஆரைத் தமனி. $. முன்கைத் தசைகள். இடையிலே இருந்து, தசைகளின் மீதும் முறையே அமர்ந்து இருக்கிறது. அவை, புயத்தை மடக்கும் தசை (biceps brachi), கைக்கீல் தசை (supinator), கையைக் கவிழ்ந்த நிலையில் வைப்பதற்கு உதவும் தசை, ஆரை எலும்பின் திசையிலுள்ள விரல்களை மடக்க உதவும் தசை (radial head of flexor digitorum uperficialis) கைக் கட்டை விரலை மடக்க உதவும் நீள்தசை (flexor policis longus), கையைக் கவிழ்ந்த 1. புயத்தமனி 2 3 ஆரைத் தமனி 4. படம் 2. 2. முழங்கைத் தமனி பின்னல்-ஆ ஆரத்தித் தமனி.