உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 ஆரைத்துடுப்பு மீன்கள்‌

158 ஆரைத்துடுப்பு மீன்கள் சமச்சீராக உள்ளது. ஊதுபுழை இல்லை; செவுள்கள் இழைச் செவுள்கள்; செவுளிடைத் துடுப்புக்கள் மிகக் குறுகியவை; காற்றுப் பைகள் சிலவற்றில் மட்டும் உடலுடன் தொடர்பின்றிக் காணப்படும். இவற்றின் முட்டைகள் சிறியவையாக இருந்தாலும், முட்டையி னுள் கரு உணவு (yolk) அதிகமாக உள்ளது. வரிசை 1-குளுப்பிஃபார்மிஸ் (Clupeiformes). இவ் வரிசையைச் சேர்ந்த மீன்கள் கடலிலும் உப்பங்கழி களிலும் நன்னீரிலும் காணப்படுகின்றன. இவற் றிற்கு முதுகுப்புறத்தில் ஒரு துடுப்பு மட்டும் உண்டு. மேல் துடுப்பிலும் மலப்புழைத் துடுப்பிலும் முட்கள் இல்லை. வயிற்றுப்புறத் துடுப்பு, பொதுவாகச் சிறிய தாக இருக்கும். சில மீன்களில் வயிற்றுப் புறத் துடுப்புக் காணப்படுவதில்லை. எலோப்ஸ் சாரஸ் (Elops saurus } - தமிழில் உள் ளாடி என்றும் அல்லாதி என்றும் அழைக்கப்படு கிறது. சில்கா ஏரியிலிருந்து தெற்கே சோழ மண்ட லக் கடற்கரைவரையில் காணப்படுகின்றது. இந்த மீன் ஒரு புலாலுண்ணியாகும். இதற்குச் சிறிய மெல் லிய செதில்கள் உள்ளன. அறுபதிலிருந்து தொண் ணூறு சென்ட்டிமீட்டர் வரை வளர்கிறது. பொது வாகஎல்லாக் கடற்கரைகளிலும் காணப்படுகின்றது. வாழ்கிறது. 20 செ.மீ. வரை வளர்கிறது. இதில் மிகவும் குறைவு.உரப்பொருளாகப் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. சார்டினெல்லா ஃபிம்ப்ரியேட்டா (Sardinella fimbri- ata), தமிழில் சீடை என அழைக்கப்படுகிறது. கிழக் குக் கடற்கரையின் வடபகுதியிலும், மேற்குக்கடற் கரையின் தென் பகுதியிலும் அதிகமாகக் காணப்படு கிறது. உரத்திற்காகப் பயன்படுகிறது. ஹில்ஸா இலிஷா (Hilsa ilisha), பெர்சியன் வளை குடாவிலிருந்து பர்மா வரை காணப்படுகிறது; ஆறு களில் நீரோட்ட எதிர்த்திசையில் நீந்துகிறது. கொழுப்புச் சத்து அதிகமாகக் காணப்படுவதால் இது நல்ல உணவாகப் பயன்படுகிறது. ஆங்கோவில்லா இண்டிகா (Anchoviella indica), தெற்குக் கடற்கரையிலும் மேற்குக் கடற்கரையிலும் காணப்படுகிறது. சில்கா ஏரியில் அதிகமாக வாழ் கிறது. கைரோசென்ட்ரஸ் டோரேப் (Chirocentrus dorab, Silver Bar-fish), இந்தியாவிலிருந்து சைனா வரை காணப்படுகிறது; கூட்டமாக வாழ்வதில்லை. தமிழில் முள் வாளை என்றழைக்கப்படுகிறது. இதன் உடம்பு நீளமாகவும் ஒடுக்கமாகவும் இருக்கிறது. முதுகுப்புறம் நீலம் கலந்த வெளிரிய நிறத்துடன் இருக்கும். சானஸ் சானஸ் (Chanos chanos), தமிழில் துள்ளுக் செண்டை என்றும் பால் கெண்டை என்றும் அழைக்கப்படும் இம்மீன், மீன்வளர்ப்பில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் உடம்பு பளிச்சிடும் வெள்ளி நிறமுடையது. முதுகுப்புறம் பச்சை நிறமானது. முதுகுப்புறத்திலுள்ள ஒரே ஒரு துடுப்பு இடுப்புக்கு முன்னால் அமைந்துள்ளது. படம் 1. பால் கெண்டை. (உள்ளாடி) சார்டினெல்லா லான்ஜிசெப்ஸ் (Sardinila longi- ceps), தமிழில் நொணலை என்றும் பைசாலை என்றும் கூறப்படுகிறது. இந்த மீன் மிக அதிகமாக மலபார் கடற்கரையில் கிடைக்கிறது. இந்த மீனைப் பச்சையாகவும் உலர்த்தியும் பயன்படுத்துகின்றனர். இதன் எண்ணெய் சாக்கு, ரப்பர், மற்றும் புத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. தென்னை; காபி, தேயிலைத் தோட்டங்களில் உரமா கப் பயன்படுகிறது. சோப் சார்டினெல்லா அல்பெல்லா (Sardinella albella) இந்தியாவில் உள்ள எல்லாக்கடற்கரையிலும் காணப் படுகிறது. மற்ற மீன்களுடனும் கலந்து கூட்டமாக படம் 2. பால் கெண்டை சால்மோ கயர்ட்னேரி கயர்ட்னேரி (Salmo gairdneri gairdneri) கலிபோர்னியாவிலிருந்து கொண்டு வரப் பட்டு, காஷ்மீர், நீலகிரிப் பகுதிகளில் வளர்க்கப்